Stock Market Update: சரிவுடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை - சென்செக்ஸ் 125 புள்ளிகள் சரிவு
Stock Market Update: இந்திய பங்குச்சந்தை சரிவுடன் நிறவடைந்தது.

Stock Market Update: இந்திய பங்குச்சந்தை சரிவுடன் நிறைவடைந்துள்ளது.
பங்குச்சந்தை:
மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 125.65 அல்லது 0.19% புள்ளிகள் சரிந்து 66,289.74 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 42.95 அல்லது 0.22% புள்ளிகள் உயர்ந்து 19,751.05 புள்ளிகளாகவும் வர்த்தகமாகின. கடந்த சில வாரங்களாகவே இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வந்தது. தகவல் தொழில்நுட்ப துறையில் ஏற்பட்ட சரிவின் காரணமாக பங்குச்சந்தை சரிவுடன் முடிவடைந்தது.
லாபத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்
டாடா மோட்டர்ஸ், இந்தஸ்லேண்ட் வங்கி, ஹெச்.சி.எல். டெக்., நெஸ்லே, மாருதி சுசூகி, சன் ஃபார்மா, சிப்ளா, டி.சி.எஸ்., பஜாஜ் ஃபின்சர்வ், பாரதி ஏர்டெல், ஹீரோ மோட்டர்கார்ப், பிரிட்டானியா, கோல் இந்தியா, ஓ.என்.ஜி.சி., எஸ்.பி.ஐ. லைஃப் இன்சுரா, லார்சன், அல்ட்ராடெக் சிமெண்ட், உள்ளிட்ட நிறுவனங்கள் பங்குகள் லாபத்துடன் வர்த்தகமாகின.
நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்
ஆக்சிஸ் வங்கி, இன்ஃபோசிஸ், அதானி எண்டர்பிரிசிஸ், விப்ரோ, டாக்டர். ரெட்டி லேப்ஸ், பஜாஜ் ஆட்டோ, க்ரேசியம், ஜெ.எஸ்.டபுள்யு, டாடா ஸ்டீல், ஐ.டி.சி., டிவிஸ் லேப்ஸ், ஈச்சர் மோட்டர்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, அதானி போர்ட்ஸ், கோடாக் மஹிந்திரா, டைட்டன் கம்பெனி உள்ளிட்ட நிறுவனங்கள் நஷ்டத்தில் வர்த்தகமாகி வருகின்றன.
இன்றைய வர்த்தக நேரம் முடிவில் நிதி நிறுவனங்கல், எண்ணெய், மெட்டல் ஆகியவை ஹெட்லைன் இன்டெல்ஸில் இருந்தது.
ஐரோப்பிய மார்க்கெட்களில் கச்சா எண்ணெய் விலை 2.9% அல்லது பேரல் ஒன்றிற்கு ரூ.85.29 டாலர் குறைந்தது. ஆக்ஸிஸ் வங்கியின் பங்குகள் 1.3% சரிந்தது.
மிகப் பெரிய தனியார் துறை வங்கியான ஹெச்.டி.எஃப்.சி. வங்கியின் நிகர லாபம் ரூ.370 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்பைஸ்ஜெட் பங்குகள் 15 சதவீதம் சரிந்தது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தது. வரும் நாட்களில் ரூபாயின் மதிப்பு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வாசிக்க..
Cauvery Water: ’தண்ணீர் திறந்தே ஆகணும்’...கர்நாடகாவுக்கு உத்தரவு போட்ட காவிரி மேலாண்மை ஆணையம்!
Metro Train: இன்று சென்னையில் உலகக் கோப்பை லீக் போட்டி.. மெட்ரோ ரயில் சேவை நீடிப்பு...
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

