Gap in india :இந்தியாவிற்கு வந்தது அமெரிக்க டாப் பிராண்ட் Gap.. அம்பானியுடன் ஒப்பந்தம்..
மிக நீண்ட கால ஒப்பந்தமான இதன் மூலம் இனி அனைத்து ரிலையன்ஸ் ஃபேஷன் ஷாப்பிங் கடைகளிலும் நாம் Gap பிராண்ட் துணிகள் , ஃபேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும்.
புகழ்பெற்ற அமெரிக்க ஃபேஷன் பிராண்டான Gap இந்தியாவிற்கு வந்துள்ளது
Gap:
1969-ஆம் ஆண்டில் சான் பிரான்சிஸ்கோவில் நிறுவப்பட்ட நிறுவனம்தான் Gap . அதன் பாரம்பரியம் டெனிம் அடிப்படையிலானது மற்றும் வாடிக்கையாளர்களுடன் இணையம் மற்றும் நிறுவனத்தால் உலகளாவிய சில்லறை விற்பனை தளங்களை கொண்டுள்ளது. இந்த நிறுவனத்தின் கீழ் ஆண்கள் , பெண்கள் , குழந்தைகளுக்கான ஃபேஷன் பொருட்கள் , ஆடைகள் விற்ப்பனை செய்யப்படுகிறது.
Media Release: Reliance Retail partners with Gap Inc. to bring @Gap to India https://t.co/D9y6yZuLPv pic.twitter.com/C2rlLL8mCO
— Reliance Industries Limited (@RelianceUpdates) July 6, 2022
ரிலையன்ஸுடன் இணைந்த கேப் :
பிரபல ரிலையன்ஸ் ரீடெய்ல் லிமிடெட் நிறுவனம் , அமெரிக்க டாப் பிராண்ட் நிறுவனமான Gap உடன் புதிய ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளது. மிக நீண்ட கால ஒப்பந்தமான இதன் மூலம் இனி அனைத்து ரிலையன்ஸ் ஃபேஷன் ஷாப்பிங் கடைகளிலும் நாம் Gap பிராண்ட் துணிகள் , ஃபேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும். ரிலையன்ஸ் ரீடெய்ல், பிரத்யேக பிராண்ட் ஸ்டோர்கள், மல்டி பிராண்ட் ஸ்டோர் எக்ஸ்பிரஷன்கள் மற்றும் டிஜிட்டல் காமர்ஸ் பிளாட்பார்ம்களில் இனி Gap பிராண்டுகள் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. சாதாரண லைஃப் ஸ்டைல் பிராண்டுகளை Gap இன் நிலையை மேம்படுத்துதான் இந்த புதிய ஒப்பந்தத்தின் நோக்கமாக பார்க்கப்படுகிறது.
ரிலையன்ஸ் அறிவிப்பு :
"ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தில், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சமீபத்திய மற்றும் சிறந்தவற்றைக் கொண்டு வருவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம், எங்களின் ஃபேஷன் மற்றும் லைஃப்ஸ்டைல் போர்ட்ஃபோலியோவில் ஒரு சின்னமான அமெரிக்க பிராண்ட் இணைவதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ரிலையன்ஸ் மற்றும் கேப் நிறுவனம், தொழில்துறையில் முன்னணியில் இருக்கும் ஃபேஷன் தயாரிப்புகள் மற்றும் சில்லறை விற்பனை அனுபவங்களை வாடிக்கையாளர்களுக்குக் கொண்டு வரும் , வாடிக்கையாளர்களின் தேவையை நாங்கள் நிச்சயம் பூர்த்தி செய்வோம்” என்று ரிலையன்ஸ் ரீடெய்ல் லிமிடெட் ஃபேஷன் & லைஃப்ஸ்டைல் தலைமை நிர்வாக அதிகாரி அகிலேஷ் பிரசாத் கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்