அதிகரிக்கும் விலை, வரம்புக்கு உட்பட்ட அணுகல்: உங்கள் குழந்தையின் உயர்கல்விப் பயணத்தை எப்படிப் பாதுகாப்பது?
HDFC Life Click 2 Achieve: அதிகரிக்கும் விலை, வரம்புக்கு உட்பட்ட அணுகல்: உங்கள் குழந்தையின் உயர்கல்விப் பயணத்தை எப்படிப் பாதுகாப்பது?
அதிகரிக்கும் விலை, வரம்புக்கு உட்பட்ட அணுகல்: உங்கள் குழந்தையின் உயர்கல்விப் பயணத்தை எப்படிப் பாதுகாப்பது?
ஒரு பெற்றோராக, உங்கள் குழந்தையின் கல்விக் கனவுகளுக்கு துணைநிற்பதென்பது மிகவும் பெருமைக்குரிய விஷயம். ஆனால் இந்தியாவில் உயர்கல்விக்கான சவால்களைச் சமாளித்து வெற்றிகரமான பணிப்பாதையை நோக்கிச் செல்லும் பயணம் என்பது சவால்கள் நிறைந்தது. விலைகள் அதிகரித்தல், ப்ரீமியர் நிறுவனங்களுக்கான வரம்புக்கு உட்பட்ட அணுகல், அதிகரிக்கும் ஆன்லைன் வழிக்கல்வி, அது ஏற்படுத்தும் தனித்துவமான தடைகள். நன்கு சிந்தித்து திட்டமிடப்பட்ட நிதிநிலை திட்டம் என்பது உங்கள் குழந்தையின் கல்வி இலக்குகளை அடைவதற்கு மிக அவசியமானது. உயர்கல்வியில் முக்கிய சவால்களை சந்திக்க உங்கள் நிதிசார்ந்து தயாராக வைத்துக்கொள்வதற்கான ஒட்டுமொத்த பார்வை இங்கே விளக்கப்படுகிறது.
உயர்கல்வியின் முக்கிய சவால்கள்
- ஆன்லைன் கல்வியை நோக்கிய மாற்றம்: டிஜிட்டல் மற்றும் ஹைப்ரிட் பாடத்திட்டங்கள் நல்ல வளர்ச்சி கண்டுள்ளன. மேலும் அதற்கான செலவுகளும் அதிகரித்துள்ளன. இந்த கல்வித் திட்டங்கள் திறன்களை வளர்க்கும். ஆனால், இதன் தரமான பயிற்றுவித்தலுக்கு கூடுதலான முதலீடுகள் அவசியமானது.
- நீண்டகால முதலீடாகும் கல்வி: பல மாணவர்கள், இந்தப் போட்டியுலகில் தகுதியாளர்களாக தனித்து நிற்பதற்காக, உயர் பட்டப்படிப்புகள் மற்றும் சான்றிதழ் படிப்புகளை முடிக்கின்றனர். அதுவே கல்விக்கான செலவை தொடர்ச்சியானதாக மாற்றுகிறது. இந்தச் சவால்களை சந்திப்பதற்கு, நீண்டகால நிதிசார் திட்டமிடல் அவசியமாகிறது.
- நிதிசார் தடைகள் மற்றும் வரம்புக்குட்பட்ட அணுகல்: வளர்ச்சி என்பது ஒருபுறம் இருந்தாலும், பொருளாதார கட்டுப்பாடுகள், தரமான கல்விக்கு இன்னும் ஒரு தடைக்கல்லாகவே இருக்கிறது. உயர் கல்வி நிறுவனங்களின் கட்டணங்கள் அதிகமாக இருப்பதால், சரியாக திட்டமிடப்பட்ட சேமிப்புத் திட்டத்தை முன்னதாகவே திட்டமிடுவது, பொருளாதாரச் சுமையைக் குறைக்க அவசிய தேவையாகும்.
- குறைந்த ப்ரீமியர் நிறுவனங்கள்: ப்ரீமியர் நிறுவனங்களில் இடம் கிடைப்பதற்கான போட்டி என்பது மிகவும் அதிகம். மாணவர்களுக்கு அத்தகைய இடம் கிடைக்கவில்லையெனில், குடும்பங்கள் தனியார் அல்லது வெளிநாட்டு படிப்புகளுக்கான வாய்ப்புகளை நோக்கி செல்கிறார்கள். இரண்டுமே கட்டணம் அதிகமாக செலுத்த வேண்டிய நிலையை ஏற்படுத்துபவை.
- நடைமுறை பயிற்சிக்கான தேவை: பல பாடத்திட்டங்களுக்கு, நடைமுறை பயிற்சிகள் இல்லை. இதனால் மாணவர்கள் இண்டர்ன்ஷிப்புகளை நோக்கியும், நடைமுறை பயிற்சிகளை வழங்கும் பாடத்திட்டங்களை நோக்கியும் செல்கிறார்கள். இதனாலும் செலவுகள் அதிகரிக்கின்றன.
உங்கள் குழந்தையின் கல்வியை பாதுகாப்பதற்கான படிநிலைகள்
நிதிவளமே இருந்தாலும் கூட, சரியான திட்டமிடல்தான் கல்விச் செலவுகளைச் சமாளிப்பதற்கான முக்கியமான அம்சமாகும். இதோ ஒரு தெளிவான பாதையை எப்படி அமைக்கலாம் என்பதற்கான வழி:
- இலக்கு நிதியை அமைக்கவும்: உங்கள் குழந்தையின் கல்விக்குத் தேவையான நிதியைக் கணக்கிட்டுக்கொள்ளவும். இதன் மூலம் அந்த இலக்கை அடையத் தேவையான திட்டத்தை உங்களால் தேர்ந்தெடுக்கமுடியும்.
- சேமிப்பு அல்லது குழந்தைக்கான காப்பீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்யவும் : வாழ்க்கை காப்பீடு மற்றும் சேமிப்புகள் ஆகியவற்றுக்கு, சேமிப்பு அல்லது குழந்தைக்கான காப்பீட்டுத் திட்டத்தை தேர்ந்தெடுப்பது, குழந்தைகளின் எதிர்காலத்துக்கு பாதுகாப்பாக இருக்கும். உதாரணமாக HDFC Life Click 2 Achieve, அளிக்கும் சலுகைகள் இவை:
- உறுதியான உடனடி வருமானம் : கல்விக் கட்டணம் மற்றும் கூடுதல் செலவுகளைச் சமாளிப்பதற்கான காலத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- தனிப்பயனாக்கக்கூடிய வருமான தேர்வுகள்: குறிப்பிட்ட தேவைகளை அடிப்படையாகக் கொண்டு உங்களுக்கு தேவையான பணம் கிடைப்பதற்கான வழியைத் தேர்ந்தெடுக்கவும்.
- பணவீக்கத்துக்கு ஏற்ப பங்களிப்பை சரிசெய்துகொள்ளவும்: முன்னதாகவே சேமிக்கத் தொடங்கி, படிப்படியாக சேமிப்புப் பங்களிப்பை அதிகப்படுத்துவது, பணவீக்கம் ஏற்படும்போதும், கட்டணங்கள் அதிகரிப்பின்போதும், உங்கள் குழந்தையின் தேவைக்கேற்ப உங்களின் நிதி வளர்ச்சி இருப்பதை உறுதிசெய்யும்.
உங்கள் குழந்தையின் கல்விப் பயணத்தில் துணை நிற்பதென்பது, நீண்டகால பொறுப்பாகும். ஆனால் மிகச்சரியான திட்டம் இருந்தால், அவர்களின் கனவுகளை நோக்கி அவர்கள் செல்வதற்கு, நம்பிக்கையுடன் உங்களால் உதவமுடியும். HDFC Life Click 2 Achieve, குழந்தைகளின் எதிர்காலத்தைக் காக்கவும், அவர்களின் கனவுகளை நனவாக்கவும் சரியான பாதையை அமைத்துக்கொடுக்கிறது.
(பொறுப்புதுறப்பு): இது, விளம்பர கட்டுரையாகும். இங்கு தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளை ABP குழுமம் ஆதரிக்கவில்லை.
மேற்கூறிய கட்டுரையில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள், அறிவிப்புகள், பிரகடனங்கள், உறுதிமொழிகள், கூறப்பட்ட/குறிப்பிடப்பட்டவை போன்றவற்றிற்கு நாங்கள் எந்த வகையிலும் பொறுப்பாக மாட்டோம். அதன்படி, பார்வையாளர்கள் கவனமாக, படித்து அறிந்து தங்கள் முடிவுகளை எடுக்க அறிவுறுத்துகிறோம்.