PF பயனாளிகளா? பணத்தைத்திரும்பப் பெற வரி விலக்கு நிர்ணயம் இப்படி தான்... முழு விபரம்!
எந்த வரி விகிதமும் இல்லாமல் முழுமையாக பணம் எடுக்க வேண்டும் என்றால், பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் ஊழியர் ஏதாவது ஒரு நிறுவனத்தில் 5 ஆண்டுகள் சேவையை முடித்திருக்க வேண்டும்.
மாத சம்பளம் வாங்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும் அவர்கள் பணிபுரியும் நிறுவனங்களிலிருந்து இபிஎஃப் எனப்படும் வருங்கால வைப்பு நிதி வழங்கி வருகிறது. பொதுவாக மாதந்தோறும் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டு, அவர்களது பிஎஃப் கணக்கில் செலுத்தப்படுகிறது. இந்தப்பணத்தை ஒவ்வொரு ஊழியர்களும் வேலையை விட்டு வெளியே செல்லும் போது அல்லது அவசரத் தேவைகளுக்காக பிஎஃப் அட்வான்ஸாகப் பெற்றுக்கொள்கின்றனர். குறிப்பாக கொரோனா சமயத்தில் பெரும்பாலான ஊழியர்கள் வேலையில்லாமல் திண்டாடியப்போது அவர்களுக்கு பிஎஃப் தொகை மிகுந்த பயனளித்தது. இந்நேரத்தில் நீங்கள் ஏதாவது ஒரு நிறுவனத்தில் ஊழியராக இருந்து பணியை விட்டு வெளியேறினால், இபிஎஃப் பெறுவதற்கு எப்படி வரி விதிக்கப்படும் என இப்போது தெரிந்துக்கொள்வோம்ஃ
EPF ல் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் வரி விகிதங்களின் தகவல்கள்:
வருங்கால வைப்பு நிதியில் முதலீடுகள் Exempt-Exempt-Exempt அதாவது EEE என வகைப்படுத்தப்படுகிறது. அதாவது பொருள் முதலீட்டில் விலக்கு, வட்டியில் விலக்கு மற்றும் முதிர்வு காலத்தில் விலக்கு என உள்ளது. ஆனால் இதில் பல்வேறு நிபந்தனைகள் உள்ளன.
இந்த நடைமுறையின் கீ்ழ் ஒருவர் எந்த வரி விகிதமும் இல்லாமல் முழுமையாக பணம் எடுக்க வேண்டும் என்றால், பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் ஊழியர் ஏதாவது ஒரு நிறுவனத்தில் 5 ஆண்டுகள் சேவையை முடித்திருக்க வேண்டும். ஒரு வேளை 5 ஆண்டுகளுக்கு சேவையைத்தொடராமல் அதற்கு முன்னதாக பணம் பெற வேண்டும் என்றால், அதற்கு சில நிபந்தனைகள் உள்ளன. அதன்படி, பணியாளரின் உடல்நலக்குறைவு காரணமாக வேலை நிறுத்தப்பட்டால், முதலாளியின் வணிகத்தின் சுருக்கம்அல்லமு பணியாளரின் கட்டிப்பாட்டிற்கு அப்பாற்பட்ட பிற காரணங்கள் உள்ளன. மேலும் ஊழியர் வேலையில்லாமல் இருக்க வேண்டும் அல்லது பிஎப் கணக்கிலிந்து முழுமையாக பணத்தை எடுக்க குறைந்தபட்சம் 2 மாதங்கள் இருக்க வேண்டும்.
இதோடு மட்டுமின்றி ஊழியர் வருங்கால வைப்பு நிதி மற்றும் இதர ஒதுக்கீடு சட்டத்தின் படி, 5 ஆண்டு தொடர்ச்சியான காலத்தைக்கணக்கிடும் போது, முந்தைய பணியாற்றிய நேரமும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. மேலும் ஒருவரின் வேலைவாய்ப்பு 5 ஆண்டுகள் நிறைவடைந்தால், அது 4 ஆண்டுகள் 11 மாதங்கள் மற்றும் 28 நாள்கள் என்று உள்ளது. மேலும் பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதித்திட்டம், 1952 ன் படி 68 HH படி, வேலையை விட்டு வெளியேறிய பிறகு வேலையின்மை காலம் 2 மாதங்களுக்கு குறைவாக இருந்தால், EPF நிதியில் 75 சதவீதம் வரை திரும்பப்பெறும் விதி உள்ளது. இதில் மீதமுள்ள 25 சதவீத நிலுவைத்தொகையை 2 மாத காலம் முடிந்தப்பிறகு திரும்பப்பெறலாம் என்ற விதிமுறைகள் உள்ளன. ஆனால் திரும்பப் பெறுவதில் வரி விலக்கு பெறுவதற்கு, 3 மாத அடிப்படை ஊதியங்கள் மற்றும் அகவிலைப்படிகள் அல்லது 75% வரையிலான கடன் தொகையை திரும்பப் பெற முடியாத முன்பணமாகத் திரும்பப் பெறத் தகுதியுள்ளது என்ற விதிகள் தற்போது நடைமுறையில் உள்ளது.