LIC | எல்.ஐ.சியில் ரூ.28 லட்சம் வரை முதிர்வுத்தொகை.. இந்தத் திட்டம் பற்றித் தெரிஞ்சுக்கோங்க..!
பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சியில் பல்வேறு திட்டங்கள் இருந்தாலும், 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆயுள் காப்பீட்டினை அதிகரிக்கும் மற்றும் 28 லட்சம் வரை முதிர்வு தொகையினை ஜூவன் பிரகதி திட்டம் வழங்குகிறது.
எல்ஐசியில் ஜூவன் பிரகதி திட்டத்தில் பாலிசிதாரருக்கு விபத்து காப்பீடு மற்றும் செயல்திறன் இழப்புக்கு ரைடர் பாலிசி வசதி வழங்கப்படுகிறது.
பல ஆண்டுகளாக இன்சூரன்ஸ் என்றாலே அனைவரின் நினைவுக்கு வருவது எல்.ஐ.சி மட்டும் தான். சாமானிய மக்கள் முதல் அனைத்து தரப்பட்ட மக்களிடம் எல்.ஐ.சியில் பாலிசி ஒன்று நிச்சயம் இல்லாமல் இருக்காது. ஆம் விபத்து போன்ற அவசரக்காலங்களில் அனைவருக்கும் உதவியாக இருக்கும் என்பதால் அனைவரும் இன்சூரன்ஸ் வைத்திருப்பார்கள். குறிப்பாக பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சியில் பல்வேறு திட்டங்கள் இருந்தாலும், 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆயுள் காப்பீட்டினை அதிகரிக்கும் மற்றும் 28 லட்சம் வரை முதிர்வு தொகையினை பெறக்கூடிய ஜூவன் பிரகதி திட்டத்தினை பற்றி இன்று நாம் தெரிந்துக்கொள்வோம்.
ஜூவன் பிரகதி திட்டத்திற்கான வயது வரம்பு என்ன?
எல்.ஐ.சியின் ஜூவன் பிரகதி திட்டத்தினை பெற நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த பட்சம் 12 வயதாகவும், அதிகபட்ச வயதாக 45 ஆக இருக்க வேண்டும். இந்த பாலிசி குறைந்தப் பட்சம் 12 ஆண்டுகளாகவும், அதிகபட்சம் 20 ஆண்டுகளாகவும் உள்ளது. இதோடு பாலிசியின் முதிர்வு காலம் 65 ஆண்டுகள் ஆண்டுகள் ஆகும்.இந்த பாலிசிக்கான தவணைத்தொகையை மாதம் அல்லது காலாண்டுக்கு ஒருமுறை, அரையாண்டு ஒருமுறை, ஆண்டுக்கு ஒரு முறை SSC/ECS மூலம் செலுத்துக்கொள்ளலாம். இதில் விபத்து காப்பீடாக குறைந்த பட்சம் ரூ. 10 ஆயிரமும், அதிகபட்சம் ரூ. 1 கோடியும் க்ளைம் செய்துகொள்ள முடியும். மேலும் இந்த பாலிசிதாரர் இறந்துவிட நேரிட்டால், இறப்புக்கான அடிப்படை காப்புத்தொகை மற்றும் போனஸ் கிடைக்கும்.
இதோடு ஜூவன் பிரகதி பாலிசியில் செலுத்தும் பிரீமியம் தொகையினை ஆண்டு பிரீயமாக தேர்ந்தெடுத்தால் 2 சதவீத தள்ளுபடியும், அரையாண்டுக்கு ஒரு முறை பிரீமியம் செலுத்தினால் உங்களது பிரீமியத்தில் 1 சதவீதம் தள்ளுபடி கிடைக்கிறது. ஒரு வேளை இந்த பாலிசியின் மூலம் முதிர்வுத்தொகை ரூ. 2 லட்சம் எனில், 12 வயதில் ரூ.9663ம், 20 வயதில் ரூ.9741ம், 30 வயதில் ரூ.9947ம் மற்றும் 40 வயதில் ரூ.10,662 பிரீமியம் செலுத்த வேண்டும். இதேப்போல் முதிர்வுத்தொகை ரூ. 5 லட்சம் எனில், 12 வயதில் ரூ. 23,157 ம், 20 வயதில் 23,353 ரூபாயும், 30 வயதில் 23 ஆயிரத்து 868 ரூபாய், மற்றும் 40 வயதில் ரூ. 25, 656 பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும். மேலும் இத்திட்டத்தின் மூலம் ரூ. 28 லட்சம் முதிர்வு தொகை பெற வேண்டும் எனில், தினசரி 200 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். கூடுதலாக இந்த திட்டத்தில் 15ஆயிரம் ரூபாய் பென்ஷன் கிடைக்கும்.
எல்ஐசியின் ஜூவன் பிரகதி திட்டத்தின் முக்கிய பயன்கள்:
0-5 ஆண்டிற்கான பாலிசியில் அடிப்படை காப்பீட்டில் 100 %
6-10 ஆண்டிற்கான பாலிசியில் அடிப்படைக்காப்பீட்டில் 125%
11-15 ஆண்டிற்கான பாலிசியில் அடிப்படைக்காப்பீட்டில் 150 %
16-20 ஆண்டிற்கான பாலிசியில் அடிப்படைக்காப்பீட்டில் 200% வரை பலன் கிடைக்கிறது.
மேலும் இறுதியில், இந்த பாலிசியில் காப்பீட்டு பயன் (SA) போனஸ் மற்றும் இறுதி கூடுதல் போனஸ் அனைத்தும் சேர்ந்ததாக இருக்கும்.
உதாரணமாக 30 வயதில் 20 ஆண்டுகாலத்திற்காக முதிர்வு தொகை ரூ.10 லட்சம் என வைத்துக்கொண்டால் ஆண்டு பிரீமியம் 50,667 ரூபாயாகும். இதோடு ஆண்டிற்கான போனஸ் 8 லட்சம் ரூபாயாகும்.