WhatsApp Payment ல் UPI எண் மறந்தாலும் கவலை வேண்டாம்.. இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க!
தற்போது வாட்ஸ் அப் பேமெண்ட் சேவையானது சுமார் 160 க்கும் மேற்பட்ட ஆதரவு வங்கிகளுடன் பரிவர்த்தனைகளை மேற்கொண்டுவருகிறது.
WhatsApp Payment ல் UPI எண்ணை மாற்றுவதற்கு முன்னதாக, வாட்ஸ் அப்பில் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணானது, உங்களது வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள அதே எண்ணாக இருப்பதை எப்போதும் உறுதி செய்துக்கொள்ளுங்கள்.
வங்கிகளில் பணம் எடுப்பதற்கோ? அல்லது பணம் செலுத்துவதற்கோ? மணிக்கணக்கில் வங்கி வாசலில் காத்திருந்த காலங்கள் எல்லாம் மலையேறிப்போச்சு. தற்போது வளர்ந்துவரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்பவும், மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும் விதமாக யுபிஐ அடிப்படையில் Google pay, Paytm மற்றும் Phone pe போன்றவற்றைப்பயன்படுத்தி பணத்தை அனுப்பி வருகிறோம். இந்நிலையில் தான் மெட்டாவுக்கு ( முகநூல்) சொந்தமான செய்தியிடல் தளமான வாட்ஸ் அப் நிறுவனமும் மக்களின் வசதிக்காக பணம் செலுத்தும் Whatsapp payment முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
வாட்ஸ் அப் பேமண்ட் முறை யை வாட்ஸ் அப் நிறுவனம் கடந்த 2018 ஆம் ஆண்டின் துவக்கத்தில் சுமார் 1மில்லியன் பயனர்களுடன் நாட்டில் அதன் கட்டண பரிவர்த்தனை சேவையை தொடங்கியது. தற்போது இந்த சேவையை சுமார் 160 க்கும் மேற்பட்ட ஆதரவு வங்கிகளுடன் பரிவர்த்தனைகளை இயக்க Unified Payment Interface (UPI) ஐ பயன்படுத்தி National Payments Corporation of India (NPCI) உடன் கூட்டு சேர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக யுபிஐ அடிப்படையிலான பேமெண்ட் பிளாட்ஃபார்மையும் வாட்ஸ் அப், 4-6 இலக்க எணணைப்பயன்படுத்த வழிவகை செய்துள்ளது. இதனை நீங்கள் ஒவ்வொரு முறையும் பணம் செலுத்தும் போது பயன்படுத்த வேண்டிருக்கும்.
ஆனால் சில சமயங்களில் நிறைய பின் நம்பர்களை நம்மால் நினைவில் வைத்துக்கொள்ளாமல் மறந்துவிடுவோம். அப்படி நீங்கள் உங்களது யுபிஐ பின் நம்பரை மறந்துவிட்டீர்கள் என்றால் கவலை வேண்டாம். இதோ இந்த வழிமுறைகளைப் பின்பற்றி உங்களது யுபிஐ எண் சுலபமாக மாற்றலாம் அல்லது புதிதாகத் தொடங்கிக் கொள்ளலாம்.
வாட்ஸ் அப் பேமெண்ட் யுபிஐ எண் மாற்றும் முறை:
முதலில் வாட்ஸ் அப்பைத்துவக்கி, அப்ளிகேசஷனில் மேலும் விருப்பங்கள் (Tap to more) என்ற ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும்.
இப்போது, ‘UPI பின்னை மாற்று’ அல்லது ‘UPI பின்னை மறந்துவிட்டீர்களா’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
இதனையடுத்து யுபிஐ பின்னை (Change UPI pin) மாற்றுவதற்கு ஏற்கனவே உள்ள யுபிஐ எண்ணை உள்ளிட்டு புதிய பின் எண்ணை நீங்கள்உள்ளீடு செய்ய வேண்டும்.
ஒரு வேளை உங்களது பழைய யுபிஐ எண் மறந்துவிட்டால், relevant option யை தேர்ந்தெடுத்து continue என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
இதனையடுத்து அதில் உங்கள் வங்கிச்சான்றுகளை உள்ளிடுமாறு கேட்கப்படும். இதனையடுத்து உங்களது வங்கிக்கணக்கு விவரங்களை உள்ளிட்டதும், உங்கள் வாட்ஸ் அப் கட்டணச் சேவைக்கான புதிய யுபிஐ பின்னைத் தேர்ந்தெடுக்கலாம். மேலும் சில சமயங்களில் CVV எண்ணும் கேட்கப்படும்.