Google Pay மூலம் தங்கம் வாங்கலாம், விற்கலாம்.. இதையெல்லாம் தெரிஞ்சுகோங்க..
கூகுள் பே மூலம் தங்கம் வாங்கும், விற்கும் முன்னர் இதைத் தெரிந்து கொள்ளுங்கள். இப்போதெல்லாம் தங்கம் வாங்குவதையும் விற்பதையும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் லகுவாக்கி உள்ளன.
கூகுள் பே மூலம் தங்கம் வாங்கும், விற்கும் முன்னர் இதைத் தெரிந்து கொள்ளுங்கள். இப்போதெல்லாம் தங்கம் வாங்குவதையும் விற்பதையும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் லகுவாக்கி உள்ளன. தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவோர் இனி நேரடியாக நகைக்கடைக்குத் தான் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. கூகுள் பே, பேடிஎம், போன்ற டிஜிட்டல் தளங்களிலேயே தங்கத்தை வாங்கலாம்.
டிஜிட்டல் தங்கம் என்பது பாதுகாக்க எளிதானது. நீங்கள் அந்தத் தங்கத்தை உங்கள் கைகளில் வைத்துக் கொள்ளப் போவதில்லை என்பதாலேயே பாதுகாப்பானது. அதேபோல் தேவைப்படும் போது ஆன்லைனிலேயே நீங்கள் இந்த தங்கத்தை விற்பனை செய்து கொள்ளலாம்.
கூகுள் ப்ளே, தங்கத்தை டிஜிட்டல் முறையில் வாங்கி விற்க MMTC-PAMP India Pvt. Ltd மூலம் உதவுகிறது. கூகுள் ஆப்பில் ஒரு கோல்ட் டிஜிலாக்கர் உள்ளது. அதில் நீங்கள் உங்களின் அனைத்து தங்கத்தையும் சேமித்து வைக்கலாம். சரி இந்த கோல் லாக்கரை எப்படிப் பயன்படுத்துவது என்பது பற்றி சொல்லித் தருகிறோம் வாருங்கள்.
கூகுள் பே மூலம் தங்கம் வாங்குவது எப்படி?
Step 1: Google Pay அப்ளிகேஷனைத் திறந்து கொள்ளுங்கள்.
Step 2: ஸ்க்ரீனின் கீழே இருக்கும் நியூ பேமென்ட் என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
Step 3: சேர்ச் பாரில் தேடி “Gold Locker” என்பதை கிளிக் செய்து என்டர் கொடுங்கள்.
Step 4: கோல்ட் லாக்கரில் டேப் செய்யுங்கள்.
Step 5: அதில் பை ( Buy) என்று டைப் செய்யுங்கள். அப்போது திரையில் தற்போதைய தங்க விலை நிலவரம் வரியுடன் சேர்த்து எவ்வளவு என்பது காட்டப்படும்.
Step 6: திரையில் தோன்றிய விலை 5 நிமிடங்கள் லாக் மோடில் இருக்கும். நீங்கள் தங்கம் வாங்க ஆரம்பத்ததில் இருந்து 5 நிமிடங்கள் திரையில் இருக்கும்.
Step 7: இப்போது எவ்வளவு தொகைக்கு தங்கம் வேண்டும் என்பதை டைப் செய்யுங்கள் INR ₹ (Rs) என்ற இடத்தில், அடைப்புக்குறிக்குள் தொகையை டைப் செய்யுங்கள்.
Step 8: வியாபாரத்தை முடிக்க டிக் மார்க்கில் க்ளிக் செய்யுங்கள்
Step 9: உங்களின் வியாபாரம் முடிந்தவுடன், சில நிமிடங்களில் உங்களின் வங்கிக் கணக்கில் அந்தத் தொகை எடுக்கப்பட்டதாகக் காண்பிக்கும்.
ஒருநாளைக்கு ரூ.50,000 என்ற அளவில் தங்கத்தை வாங்கிக் கொள்ளலாம். குறைந்தபட்சமாக ரூ.1 க்கு தங்கம் வாங்கலாம். ரூ.49,999 ஐ தாண்டி மேற்கொள்ளப்படும் வியாபாரத்துக்கு கேஒய்சி கட்டாயம்.
தங்கத்தை கூஉள் பே மூலம் விற்பனை செய்வது எப்படி?
Step 1: Google Pay அப்ளிகேஷனைத் திறந்து கொள்ளுங்கள்.
Step 2: ஸ்க்ரீனின் கீழே இருக்கும் நியூ பேமென்ட் என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
Step 3: சேர்ச் பாரில் தேடி “Gold Locker” என்பதை கிளிக் செய்து என்டர் கொடுங்கள்.
Step 4: கோல்ட் லாக்கரில் டேப் செய்யுங்கள்.
Step 5: அதில் செல் (Sell) என்று டைப் செய்யுங்கள். தற்போதைய தங்க விற்பனை தொகை திரையில் தெரியும்.
Step 6: இந்த விலை 8 நிமிடங்கள் லாக்கில் இருக்கும்.
Step 7: நீங்கள் விற்பனை செய்ய விரும்பும் தங்கத்தின் அளவை, மில்லிகிராம் அளவில் குறிப்பிடுங்கள். அப்போது சந்தை விலை ரூபாய் மதிப்பில் தெரியும்.
Step 8: டிக் மார்க்கில் க்ளிக் செய்து விற்பனை செய்யுங்கள்
Step 9: விற்பனை உறுதியானதுமே உங்கள் வங்கிக் கணக்கில் பணம் வந்து சேர்ந்துவிடும்.
வங்கிக் கணக்கை வைத்திருப்பவர் உயிரிழக்கும் பட்சத்தில், கோல்ட் லாக்கரில் இருந்து அந்த நபரின் வாரிசுதாரர் தங்கத்தைப் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் அந்த வாரிசும், கூகுள் பே, MMTC-PAMP வைத்திருப்பவராக இருக்க வேண்டும். அவர்களின் கணக்கு சரிபார்க்கப்பட்ட பின்னரே அவர்களிடம் தங்கம் ஒப்படைக்கப்படும்.