![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
இனி Provident Fund கணக்கிலிருந்தே LIC பிரீமியத்துக்கு பணம் கட்டலாம் - EPFO புது விதிகள்.. செம்ம ஹேப்பி நியூஸ்..
EPFO-வில் வழங்கப்படும் விண்ணப்பம் 14-ஐ பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும், அனுப்பும்போது சம்பந்தப்பட்டவரின் EPF கணக்கில் குறைந்தது இரண்டு வருடத்திற்கான LIC பிரீமியம் திட்டத்திற்கான பணம் இருக்க வேண்டும்
![இனி Provident Fund கணக்கிலிருந்தே LIC பிரீமியத்துக்கு பணம் கட்டலாம் - EPFO புது விதிகள்.. செம்ம ஹேப்பி நியூஸ்.. EPFO rules allow LIC Premium payment from EPF account இனி Provident Fund கணக்கிலிருந்தே LIC பிரீமியத்துக்கு பணம் கட்டலாம் - EPFO புது விதிகள்.. செம்ம ஹேப்பி நியூஸ்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/11/ebdee7b2974f7b2dc943ff9613e69cd9_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
EPFO சமூகப் பாதுகாப்பிற்கான உலகின் மிகப்பெரும் அமைப்பு. தொழிலாளர்களுக்கான பென்ஷன், PF திட்டம் மற்றும் அத்தியாவசிய இன்சூரன்ஸ் திட்டம் போன்றவற்றை ஒழுங்குமுறை செய்வது இதன் பணி. தற்போது LIC பிரீமியம் திட்டத்திற்கான பணத்தை EPF கணக்கிலிருந்தே செலுத்தலாம்.
அதற்கு EPFO-வில் வழங்கப்படும் விண்ணப்பம் 14-ஐ பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் என்றும் அப்படி அனுப்பும்போது சம்பந்தப்பட்டவரின் EPF கணக்கில் குறைந்தது இரண்டு வருடத்திற்கான LIC பிரீமியம் திட்டத்திற்கான பணம் இருக்க வேண்டும் எனவும் வரி மற்றும் முதலீட்டு வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆப்டிமா மனி மேனேஜர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பங்கஜ் மத்பால் இந்த திட்டம் குறித்தும் அதன் செய்முறை குறித்தும் குறிப்பிட்டுள்ளார். LIC பிரீமியம் கட்டணத்தை ஒரு EPFO உறுப்பினர் தனது EPF கணக்கின் வழியாகவே செலுத்த முடியும், அதற்கு பதினான்காம் எண் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும், மேலும் அப்படி அனுப்பும்போது EPF கணக்கில் இரண்டு வருடத்திற்கான LIC பிரீமியம் கட்டணம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
‘இந்த திட்டத்தைப் பெற EPF கணக்கையும் LIC பிரீமியம் திட்டத்தையும் இணைக்க வேண்டும். மேலும் இந்த வசதி LIC பிரீமியம் திட்டத்திற்கு மட்டுமானதே, பிற முதலீட்டு திட்டங்களுக்கு இந்த வசதி கிடையாது என்பதை விண்ணப்பிப்பவர்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்’ என்று ட்ரான்சென்ட் கேப்பிடலின் முதலீட்டு இயக்குநர் கார்த்திக் ஜவேரி தெரிவித்தார்.
கோவிட் தொற்றால் பொருளாதார ரீதியாக பலவீனமடைந்திருப்பவர்களுக்கு இந்த வசதி பயனுள்ளதாக இருக்கும். எனினும், பொருளாதார சிக்கல்கள் முடியும்வரை இந்த வசதியைப் பயன்படுத்திக்கொண்டு, அதன் பின்னர் இந்த வசதியைத் திரும்பப் பெறுவதுதான் சரியான முடிவாக இருக்கும் என்று மும்பையைச் சேர்ந்த முதலீட்டு வல்லுநர் பல்வந்த் ஜெயின் தெரிவித்தார்.
Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..
இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..
Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?
முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!
Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..
மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)