Stock Market Update: மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்: ஏற்றத்துடன் முடிந்த பங்குச்சந்தை; 600 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்!
Stock Market Update: இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளது.
Stock Market Update: இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது.
பங்குச்சந்தை நிலவரம்:
மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 603.91 அல்லது 0.92 % புள்ளிகள் உயர்ந்து 64,958.69 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 181.15 அல்லது 0.94% உயர்ந்து 19,411.75 ஆக வர்த்தகமாகியது. கடந்த சில வாரங்களாகவே இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி நிலையில், கடந்த வாரத்தில் இரண்டு நாள்கள் ஏற்றத்துடன் வர்த்தகமானது. வாரத்த்தின் முதல் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது. காலை வர்த்தநேர தொடக்கத்தில் 300 புள்ளிகள் அதிகரித்த சென்க்சென்ஸ், வர்த்தக நேர முடிவில் 600 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது. நிப்ஃடி 19 ஆயிரம் புள்ளிகளில் வர்த்தகமாகியது. பண்டிகை நாளான தீபாவளி நெருங்கும் நேரத்தில் பங்குச்சந்தை லாபத்துடன் வர்த்தகமாகியது முதலீட்டாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லாபத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்
டிவிஸ் லேப்ஸ், ஹீரோ மோட்டர்கார்ப், ஈச்சர் மோட்டர்ஸ், லார்சன், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் ஃபினான்ஸ், பவர்கிரிட் கார்ப், டாடா ஸ்டீல், ஓ.என்.ஜி.சி., ஏசியன் பெயிண்ட்ஸ், கோல் இந்தியா, டாக்டர். ரெட்டி லேப்ஸ், ஹிண்டால்கோ, அல்ட்ராடெக் சிமெண்ட், அம் அண்ட் எம், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, க்ரேசியம், ஜெ.எஸ்.டபுள்யூ, இன்ஃபோசிஸ், பாரதி ஏர்டெல்,, அதானி போர்ட்ஸ், டி.சி.எஸ்., ரிலையன்ஸ், சன் பார்மா, அதானி எண்டர்பிரைசிஸ், ஹெச்.டி.எஃப். சி. வங்கி, ஐ.டி.சி., கோடாக் மஹிந்திரா வங்கி, விப்ரோ, மாருது சுசூகி உள்ளிட்ட நிறுவனங்கள் பங்குகள் லாபத்துடன் வர்த்தகமாகின.
நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்
பாரத ஸ்டேட் வங்கி, டைட்டன் கம்பெனி, சிப்ளா, ஹெச்.டி.எஃப்.சி. லைஃப் உள்ளிட்ட நிறுவனங்கள் நஷ்டத்தில் வர்த்தகமாகி வருகின்றன.
NSE -யில் சரிவடைந்த நிறுவனங்களில் விவரம் - சைபர் மீடியா ரெஸ், எஸ்.இ.பி.சி. நிட்கோ, பஜாஜ் ஹிந்துஸ்தா, டீப் எனர்ஸ் ரெஸ், க்யூபிக்ஸ் டியூபிங்க் ஆகியவையும் தி இன்வெஸ்மெண்ட், சிக்கோ இண்டஸ்ரி, மஹா ராசத் அபெக்ஸ், ஹிந்துஸ்தான் மீடியா, உஜ்வான் ஸ்மால், அசோகா மெட்காஸ்ட், மசிக்ரா செமிக் உள்ளிட்ட நிறுவனங்கள் லாபத்துடன் வர்த்தகமாகி வருகிறது. 2214 பங்குகள் லாபத்துடனும் 1098 பங்குகள் சரிவுடனும் 131 பங்குகள் மாற்றமின்றியும் நிறைவடைந்தது. முன்னணி துறைகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகின.
மேலும் வாசிக்க..
SL Cricket Board: இலங்கை கிரிக்கெட் அணியில் பிரச்னை என்ன? கூண்டோடு கலைக்கப்பட்டது ஏன்? மீண்டு வருமா?
KH234 Update: அட.. கமல் - மணிரத்னத்தின் KH234 போஸ்டரில் ‘பாரதியார்’ குறியீடு.. இத கவனிச்சீங்களா?