மேலும் அறிய

LIC Share Low: எல்.ஐ.சி. பங்குகளுக்கு என்னாயிற்று? தொடர் சரிவு! பங்குதாரர்கள் அதிர்ச்சி! நிபுணர்களின் அறிவுரை!

LIC: எல்.ஐ.சி. -யின் பங்கின் விலை 6 சதவீதம் சரிவு.

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை இன்சுரன்ஸ் நிறுவனமான எல்.சி.சி. யின்(Life Insurance Corporation of India (LIC)) பங்கு விலை 6 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. ஒரு பங்கின் விலை ரூ. 668 ஆக வர்த்தமாகிறது. எல்.ஐ.சி. பங்கு மதிப்பு தொடர்ந்து பத்தாவது முறையாக குறைந்துள்ளது. இந்தியாவிலேயே 7-வது பெரும் நிறுவனமான எல்.ஐ.சி. யின் பங்கு வீழ்ச்சி பங்குச்சந்தையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

எல்.ஐ.சி பொதுபங்கு வெளியீடு மே 4-ம் தேதி தொடங்கி மே.9 ஆம் தேதி வரை நடைபெற்றது. ரூ.902-949 விலையில் பங்கு வெளியிடப்பட்டது. மொத்தம் 31.6 கோடி பங்குகள் விற்கப்பட்டது. இதில் ஊழியர்களுக்கு 5 சதவீதமும், தனிநபர் காப்பீடுதாரர்களுக்கு 10 சதவீதமும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. எல்.ஐ.சி நிறுவனத்தின் மதிப்பு, பங்கு வெளியீட்டின் போது ரூ. 6.02 லட்சம் கோடியாக இருந்தது. தொடர் சரிவு காரணமாக அதன் மதிப்பு ரூ. 1.40 லட்சம் கோடி குறைந்திருக்கிறது. 

ரஷ்யா-உக்ரைன் போர், பங்குச்சந்தைகளின் வீழ்ச்சி உள்ளட்டவைகள் எல்.ஐ.சி. பங்கு மதிப்பிழப்பிற்கு காரணமாக கூறப்படுகிறது. 

ஒரு மாதத்தில் ரூ.1.65 லட்சம் கோடி மதிப்பு இழப்பு:

மத்திய அரசு விளக்கம்:
 
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அரசின் முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மை துறை ( Department of Investment and Public Asset Management -DIPAM) செயலாளர் துஹின் கண்டா பாண்டே (Tuhin Kanta Pandey)  எல்.ஐ.சி. நிறுவனத்தின் பங்கு வீழ்ச்சி தற்காலிகமானது என்றும்  இந்த நிலை விரைவில் மாறக் கூடியதுதான்; மாறும் என்றும்  தெரிவித்துள்ளார்.  முதலீட்டாளர்களின் மதிப்பை உயர்த்தும் முயற்சி நடவடிக்கைகளை எல்.ஐ.சி. நிர்வாகம் மேற்கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளார். 
 
நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?

பணவீக்கம், வட்டி விகித உயர்வு, பங்குச் சந்தை தொடர் சரிவு, உள்ளிட்டவைகள் எல்ஐசி பங்கு விலை வீழ்ச்சிக்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. பங்குகளின் விலை குறைவாக உள்ள நிலையில் முதலீட்டாளர்கள் சந்தை நிலவரத்தை கவனித்து செயல்படுமாறு அறிவுறுத்தியுள்ளனர். இந்த நிலை மாறும் வரை காத்திருந்து முதலீட்டாளர்கள் செயல்படுவது தேவையற்ற இழப்புகளில் இருந்து பாதுகாக்கும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
 
பங்குகளின் விலை சில நாட்களில் உயர வாய்ப்புள்ளதாகவும் கூறுகின்றனர். தற்போதைய மதிப்பு குறைவானது குறைந்த கால முதலீடு செய்தவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். நீண்ட கால முதலீடு செய்தவர்களுக்கு இது பாதிக்காது எனவும் தெரிவிக்கின்றனர். மேலும் சில நாட்கள் கழித்து பங்குகள் உயரும் போது, தற்போது குறைந்த அளவில் பங்குகள் வாங்கியவர்களுக்கு, இந்த விலை குறைவான லாபத்தை கொடுக்கும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.
 
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Jio, Airtel New Plans: இனி டேட்டாவிற்கு பணம் கட்ட வேண்டாம்... புதிய பிளான்களை அறிமுகம் செய்த ஏர்டெல், ஜியோ...
இனி டேட்டாவிற்கு பணம் கட்ட வேண்டாம்... புதிய பிளான்களை அறிமுகம் செய்த ஜியோ, ஏர்டெல்....
உலகுக்கே வழிகாட்டிய தமிழ்நாடு; ’’இங்குதான் இரும்பின் காலம் தொடங்கியது’’ ஆதாரம் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்
உலகுக்கே வழிகாட்டிய தமிழ்நாடு; ’’இங்குதான் இரும்பின் காலம் தொடங்கியது’’ ஆதாரம் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்
AISSEE 2025; மத்திய அரசின் சைனிக் பள்ளிகளில் சேரலாம்; விண்ணப்பிக்க இன்றே கடைசி- எப்படி?
AISSEE 2025; மத்திய அரசின் சைனிக் பள்ளிகளில் சேரலாம்; விண்ணப்பிக்க இன்றே கடைசி- எப்படி?
துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல்! குக்கரில் வெந்த மனைவி .. கொடூரனாக மாறிய கணவன்...
துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல்! குக்கரில் வெந்த மனைவி .. கொடூரனாக மாறிய கணவன்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Lorry accident | சாலையை கடக்க முயன்ற தம்பதி அடித்து தூக்கிய சரக்கு லாரி பகீர் CCTV காட்சி! | MaduraiTVK Member Audio | RN Ravi Praised Tamilnadu | ”தமிழ்நாடு தான் BESTபெண்கள் பாதுகாப்பா இருக்காங்க” RN ரவி புகழாரம் | DMKCongress: Delhi-க்கு படையெடுக்கும்  தலைவர்கள் பதற்றத்தில் காங்கிரஸ்! இறங்கி அடிக்கும் ஆம் ஆத்மி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jio, Airtel New Plans: இனி டேட்டாவிற்கு பணம் கட்ட வேண்டாம்... புதிய பிளான்களை அறிமுகம் செய்த ஏர்டெல், ஜியோ...
இனி டேட்டாவிற்கு பணம் கட்ட வேண்டாம்... புதிய பிளான்களை அறிமுகம் செய்த ஜியோ, ஏர்டெல்....
உலகுக்கே வழிகாட்டிய தமிழ்நாடு; ’’இங்குதான் இரும்பின் காலம் தொடங்கியது’’ ஆதாரம் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்
உலகுக்கே வழிகாட்டிய தமிழ்நாடு; ’’இங்குதான் இரும்பின் காலம் தொடங்கியது’’ ஆதாரம் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்
AISSEE 2025; மத்திய அரசின் சைனிக் பள்ளிகளில் சேரலாம்; விண்ணப்பிக்க இன்றே கடைசி- எப்படி?
AISSEE 2025; மத்திய அரசின் சைனிக் பள்ளிகளில் சேரலாம்; விண்ணப்பிக்க இன்றே கடைசி- எப்படி?
துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல்! குக்கரில் வெந்த மனைவி .. கொடூரனாக மாறிய கணவன்...
துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல்! குக்கரில் வெந்த மனைவி .. கொடூரனாக மாறிய கணவன்...
TVK Posting: அதுக்குள்ளவா விஜய்..! சாதிக்கும், பணத்துக்கும் பதவிகளை விற்கும் தவெக? ரேட்டு என்ன தெரியுமா?
TVK Posting: அதுக்குள்ளவா விஜய்..! சாதிக்கும், பணத்துக்கும் பதவிகளை விற்கும் தவெக? ரேட்டு என்ன தெரியுமா?
TN Governor: நீதிமன்றம் கொடுத்த நெருக்கடி..! உடனே சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் கொடுத்த ஆளுநர் ஆர்.என். ரவி
TN Governor: நீதிமன்றம் கொடுத்த நெருக்கடி..! உடனே சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் கொடுத்த ஆளுநர் ஆர்.என். ரவி
RRB Group D:  32,438 பணியிடங்கள்!  மிஸ் பண்ணிடாதீங்க! ரயில்வேயில் சேர பொன்னான வாய்ப்பு இது தான்! முழு விவரம்
RRB Group D: 32,438 பணியிடங்கள்! மிஸ் பண்ணிடாதீங்க! ரயில்வேயில் சேர பொன்னான வாய்ப்பு இது தான்! முழு விவரம்
CM Stalin: தமிழ்நாடே எதிர்பார்ப்பு ..! முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன அறிவிப்பு இதுதானா? யாருக்கு என்ன பலன்?
CM Stalin: தமிழ்நாடே எதிர்பார்ப்பு ..! முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன அறிவிப்பு இதுதானா? யாருக்கு என்ன பலன்?
Embed widget