search
×

Drone Hubs: நாட்டில் புதிதாக பத்து ட்ரோன் பயிற்சி மையங்கள் - தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் தகவல்!

Drone Hubs: இந்தியாவில் புதிதாக ட்ரோன் பயிற்சி மையங்கள் திறக்கப்பட உள்ளன.

FOLLOW US: 
Share:

தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் (The National Skill Development Corporation- NSDC) மற்றும் ட்ரோன் டெஸ்டினேஷன் ( Drone Destination) என்ற நிறுவனம் ஆகியவை இணைந்து இந்தியாவில் புதிதாக பத்து ட்ரோன் மையங்களைத் தொடங்க கையெழுத்து ஒப்பந்தம் செய்துள்ளன. 

இந்த மையங்கள் ரிமோட் பைலட் சான்றிதழுக்கான பயிற்சியை வழங்குவதோடு மட்டுமல்லாமல், கணக்கெடுப்பு மற்றும் மேப்பிங், சொத்துக்கள் ஆய்வு, கண்காணிப்பு, ஒளிப்பதிவு உள்ளிட்ட பல வகையான பயன்பாட்டு அடிப்படையிலான பயிற்சிகளையும் வழங்கும்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில், விமானிகளுக்குப் பயிற்சி, ஆளில்லா வான்வழி வாகனங்களை பராமரித்தல் மற்றும் ஆளில்லா விமானத்தை வாடகைக்கு எடுப்பது உள்ளிட்ட விரைவான, திறமையான ட்ரோன் விமானிகளை உருவாக்குவது, மலிவு விலையில் ட்ரோன் சேவைகளை வழங்குவதற்காக நாட்டில் உள்ள ஒவ்வொரு தாலுகாவிலும் ட்ரோன் மையத்தை நிறுவ இருப்பதாக  ட்ரோன் டெஸ்டினேஷன் தலைமை நிர்வாக அதிகாரி சிராக் சர்மா கூறியுள்ளார்.

ட்ரோன் டெஸ்டினேஷன் மூலம் பயிற்சி பெறவும், உயர்தர திறன்களைப் பெறவும் ஆர்வமுள்ள விமானிகளுக்கு NSDC அதனுடன் தொடர்புடைய NBFC-கள் மூலம் கடன் உதவிகள் வழங்கப்படும். "அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் நாட்டிற்கு மூன்று லட்சத்திற்கும் அதிகமான ட்ரோன் பைலட்டுகள் தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் இந்த கோரிக்கையைப் புரிந்துகொண்டு, பெரிய அளவிலான வேலைவாய்ப்பிற்குத் தேவையான திறன் உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கும் உதவுவதற்காகவும் ட்ரோன் டெஸ்டினேஷன் போன்ற முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட தேசிய திறன் மேம்பாட்டு கழகம் உறுதியுடன் தெரிவித்துள்ளது.  என்று அதன் தலைமை செயல் அதிகாரி  வேத் மணி திவாரி கூறியுள்ளார்.

நாட்டில் கிடைக்கும் எந்தவொரு சான்றிதழ் திட்டத்திற்கும் ட்ரோன் பயிற்சி முதலீட்டின் மூலம் அதிக வருமானத்தை ஈட்ட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. NSDC உடனான எங்கள் கூட்டாண்மை இளைஞர்களுக்கு இரட்டிப்புப் பலனளிக்கும்.  ஏனெனில் விரைவில் நாடு முழுவதும் அதிகமான ட்ரோன் மையங்கள் இருக்கும்.  மேலும் இந்த புதிய  துறையில் திறன் மேம்பாட்டிற்காக ஆர்வமுள்ள விமானிகள் கடன்களைப் பெறலாம். கடன்கள் கிடைப்பது பெரும் மாற்றத்தை உருவாக்கும்.  தொழில்நுட்ப வளர்ச்சியின் ஒரு பகுதியாக இருக்க விரும்பும் ஆர்வலர்களின் தளத்தை விரிவுபடுத்த ட்ரோன் புரட்சியை உண்மையிலேயே உதவும் என்று சர்மா குறிப்பிட்டுள்ளார்.

"பிரதமர்  நரேந்திர மோடியின் தொலைநோக்கு திட்டமான - '‘har haath mein smart phone, har khet mein drone, har ghar samradhi’ . இதன் மூலம் விவசாயத்தில் ட்ரோன் பயபடுத்துவதால் இந்திய விவசாயத்தில் புரட்சியை ஏற்படுத்த கூடும்.  விளைச்சலை அதிகரிக்கவும் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யவும் இந்தியாவின் வயல்களில் விளைச்சலை அதிகரிக்க லட்சக்கணக்கான ட்ரோன் பைலட்டுகள் தேவைப்படும்.  துல்லியமான விவசாயத்தை நோக்கி முன்நகர்வோம். விவசாய வருவாயை அதிகரிப்பது இளைஞர்கள் கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு வேலை தேடி அலைவதை நிறுத்தவும், அதற்கு பதிலாக ட்ரோன் மூலம் விவசாயம் செழித்திட செய்யும் என்றும் தேசிய திறன் மேம்பாட்டு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மணி திவாரி தெரிவித்துள்ளார்.

Published at : 18 Oct 2022 09:40 PM (IST) Tags: India The National Skill Development Corporation NSDC 10 Drone Hubs Train Youth in Drone Technologies

தொடர்புடைய செய்திகள்

Cylinder Price: காலையிலேயே மகிழ்ச்சியான செய்தி.. வணிக சிலிண்டர் விலை ரூ.30 குறைந்தது!

Cylinder Price: காலையிலேயே மகிழ்ச்சியான செய்தி.. வணிக சிலிண்டர் விலை ரூ.30 குறைந்தது!

அடிச்சது ஜாக்பாட்.. தேசிய பங்கு சந்தையில் சாதனை படைத்த Kay Cee Energy நிறுவனத்தின் பங்குகள்

அடிச்சது ஜாக்பாட்.. தேசிய பங்கு சந்தையில் சாதனை படைத்த Kay Cee Energy நிறுவனத்தின் பங்குகள்

Leo: விஜய்யின் லியோ படத்தை தியேட்டரில் பார்த்து ரசித்த முதலமைச்சர்!

Leo:  விஜய்யின் லியோ படத்தை தியேட்டரில் பார்த்து ரசித்த முதலமைச்சர்!

Meson Valves IPO Listing : அடிச்சது ஜாக்பாட்.. மேசான் வால்வு நிறுவனத்தின் பங்குகளை போட்டி போட்டு வாங்கிய முதலீட்டாளர்கள் 

Meson Valves IPO Listing : அடிச்சது ஜாக்பாட்.. மேசான் வால்வு நிறுவனத்தின் பங்குகளை போட்டி போட்டு வாங்கிய முதலீட்டாளர்கள் 

HBD Arun Vijay: பிரமாண்டமாக உருவாகும் ‘அச்சம் என்பது இல்லையே’.. பிறந்தநாள் பரிசாக போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

HBD Arun Vijay: பிரமாண்டமாக உருவாகும் ‘அச்சம் என்பது இல்லையே’.. பிறந்தநாள் பரிசாக போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

டாப் நியூஸ்

BJP: “ஆபரேஷன் சக்ஸஸ், பேஷன்ட் டெட்” சம்பவம்! ஒரு வெற்றிகரமான தோல்வியின் கதை!

BJP: “ஆபரேஷன் சக்ஸஸ், பேஷன்ட் டெட்” சம்பவம்! ஒரு வெற்றிகரமான தோல்வியின் கதை!

Kangana Ranaut: கங்கனாவுக்கு கன்னத்திலே பளார்! விமான நிலையத்தில் தாக்கிய பெண் பாதுகாப்பு அதிகாரி - ஷாக்

Kangana Ranaut: கங்கனாவுக்கு கன்னத்திலே பளார்! விமான நிலையத்தில் தாக்கிய பெண் பாதுகாப்பு அதிகாரி - ஷாக்

Rahul Gandhi: பங்குச் சந்தையில் மிகப் பெரிய முறைகேடு நடைபெற்றுள்ளது - ராகுல் காந்தி

Rahul Gandhi: பங்குச் சந்தையில் மிகப் பெரிய முறைகேடு நடைபெற்றுள்ளது - ராகுல் காந்தி

PM Narendra Modi: தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர்.. ஜூன் 9ம் தேதி பதவியேற்கும் மோடி..? ஏஎன்ஐ தகவல்!

PM Narendra Modi: தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர்.. ஜூன் 9ம் தேதி பதவியேற்கும் மோடி..? ஏஎன்ஐ தகவல்!