Indian Stock Market: அமெரிக்காவின் நடவடிக்கையால் சரிவில் செல்லும் மும்பை பங்குச் சந்தை...சரிவில் ஏர்டெல்
இன்றைய நாள் முடிவில், மும்பை பங்கு சந்தை சரிவுடனும், தேசிய பங்கு சந்தை ஏற்றத்துடனும் நிறைவடைந்துள்ளது.
![Indian Stock Market: அமெரிக்காவின் நடவடிக்கையால் சரிவில் செல்லும் மும்பை பங்குச் சந்தை...சரிவில் ஏர்டெல் Indian Stock Market in Down Trend Due to federal reserve interest rate hike dollar rate know Details Indian Stock Market: அமெரிக்காவின் நடவடிக்கையால் சரிவில் செல்லும் மும்பை பங்குச் சந்தை...சரிவில் ஏர்டெல்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/05/2052322d70494b97e4410a79ba89f4a81670235553400571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
அமெரிக்க மத்திய வங்கியானது, வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கான தன்மையுடன் காணப்படுவதால், மும்பை பங்கு சந்தையில் அதன் தாக்கம் ஏற்பட்டுள்ளது.
பங்கு சந்தை நிலவரம்:
இந்நிலையில், மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 33.90 புள்ளிகள் சரிந்து 62, 834.60 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்கு சந்தை குறியீடான நிஃப்டி, 4.95 புள்ளிகள் அதிகரித்து 18, 701.05 புள்ளிகளாக உள்ளது.
Sensex declines 33.9 points to settle at 62,834.60; Nifty gains marginally by 4.95 points to 18,701.05
— Press Trust of India (@PTI_News) December 5, 2022
அமெரிக்க டாலரின் மதிப்பானது, கடந்த சில நாட்களாக சரிவுடன் காணப்படுகிறது. இந்நிலையில், டாலரின் மதிப்பை வலுப்படுத்தும் பொருட்டு, அமெரிக்க மத்திய வங்கியானது, வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கான சூழல் நிலவுகிறது.
இதன் காரணமாக, இந்திய பங்கு சந்தை சற்று தடுமாற்றத்துடனே காணப்படுகிறது. மேலும் இந்திய ரிசர்வ் வங்கியின் கூட்டாமானது, இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் வட்டி விகிதத்தை உயர்த்துமா, குறைக்குமா என்பது , வரும் 8 ஆம் தேதி தெரிய வரும். அதன் பொருட்டு, இந்திய பங்கு சந்தையில் பெரும் தாக்கம் ஏற்படும் என்பதால், கூட்டத்தின் முடிவுகள் குறித்து வர்த்தகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
மேலும், சீனாவில் கொரோனா தாக்கம் முழுமையாக முடியவில்லை. பொருளாதாரம் இயல்பு நிலைக்கு வரவில்லை என்ற கவலை முதலீட்டாளர்களுக்கு இருக்கிறது என கூறப்படுகிறது. கச்சா எண்ணெய் விலையிலும் பெரும் தாக்கம் ஏற்பட்டது. இதனால், கச்சா எண்ணெய் விலை குறையும் சூழல் நிலவுகிறது. இதனால், டாலர் மதிப்பு பாதிப்படையும் தன்மை காணப்படுகிறது.
ரூபாய் மதிப்பு:
Rupee falls 47 paise to close at 81.80 (provisional) against US dollar
— Press Trust of India (@PTI_News) December 5, 2022
இன்று டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சற்று குறைந்துள்ளது. இந்நிலையில், அமெரிக்க டாலருக்கு எதிரான, இந்திய ரூபாய் மதிப்பானது 47 காசுகள் குறைந்து 81.80 ரூபாயாக ஆக உள்ளது.
Also Read: Oyo Layoff: 600 ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறதா OYO...? என்ன காரணம் தெரியுமா..?
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)