மேலும் அறிய

பெப்சி நிறுவனத்தின் ‛லேஸ்’ உருளைக்கிழங்கு பயிரிடுவதற்கான காப்புரிமை ரத்து!

பொது நலன் கருதியும், விவசாயிகளின் உரிமையைக் கருத்தில் கொண்டும் பெப்சி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள காப்புரிமையை ரத்து செய்வதாக விவசாயிகளின் உரிமை ஆணையம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த பெப்சி நிறுவனத்தின் பிரபல உணவு தயாரிப்புகளில் ஒன்று ‘லேஸ்’ சிப்ஸ். இந்த சிப்ஸ்களை தயாரிப்பதற்காக எப்.எல் 2027 என்ற வகை உருளைக்கிழங்கு பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், இந்த வகை உருளைக்கிழங்குகளை தயாரிப்பதற்கான காப்புரிமையை பெப்சி நிறுவனம் இழந்துள்ளது.

இந்த எப்.எல்-2027 வகை உருளைக்கிழங்குகளை, பெப்சி நிறுவனத்திடம் ஒப்பந்தம் பெற்ற விவசாயிகள் மட்டுமே பயிரிட வேண்டும். வேறு விவசாயிகள் பயிரிட்டால் அவர்கள் மீது வழங்கு தொடரப்படும் என தெரிவிக்கப்பட்டது. 2009-ம் ஆண்டு முதல் குஜராத் மாநிலம் வடக்கு பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் இந்த எப்.எல் 2027 வகை உருளைக்கிழங்குகளை பயிரிட்டு வந்தனர்.  இந்த பகுதியைச் சேர்ந்த 12,000 விவசாயிகள் பெப்சி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து பயிரிட்டு வந்தது.

மேலும் படிக்க: தமிழ்நாட்டில் திருடி ஆந்திராவிற்கு கடத்த முயன்ற கழுதைகள் மீட்பு: இறைச்சிக்காக களமிறங்கிய கும்பல்!

பெப்சி நிறுவனத்தின் ‛லேஸ்’ உருளைக்கிழங்கு பயிரிடுவதற்கான காப்புரிமை ரத்து!

அதனை தொடர்ந்து, 2016-ம் ஆண்டு முதல் பயிர் வகை பாதுகாப்பு மற்றும் விவசாயிகளின் உரிமை ஆணையத்திடம் (பிபிவி மற்றும் எப்ஆர்ஏ) இந்த வகை உருளைக்கிழங்குகளை பயிரிடுவதற்கான காப்புரிமையை பெற்றது பெப்சி நிறுவனம்.

2019-ம் ஆண்டு, நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யாத நான்கு விவசாயிகள் பயிரிட்டதாக கூறி அவர்கள் மீது பெப்சி நிறுவனம், 4.2 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தது. அதனை அடுத்து, குஜராத் மாநிலம் முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். பெப்சி நிறுவனத்தை எதிர்த்தனர். 

ஆனால், அப்போது முடிவு எட்டப்படாத நிலையில், மெசர்ஸ் குருகாந்தி என்ற நிறுவனம் அதே ஆண்டு பெப்சி நிறுவனம் மீது மீண்டும் வழக்கு தொடர்ந்து. இப்போது விசாரணைக்கு வந்த இந்த வழக்கிற்கு, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பொது நலன் கருதியும், விவசாயிகளின் உரிமையைக் கருத்தில் கொண்டும் பெப்சி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள காப்புரிமையை ரத்து செய்வதாக பயிர் வகை பாதுகாப்பு மற்றும் விவசாயிகளின் உரிமை ஆணையம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. இது விவசாயிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிலையில், பெப்சி நிறுவனம் சார்பில் இதுவரை இது குறித்து எந்த விளக்கமும் தெரிவிக்கப்படவில்லை.

மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Gold Silver Price: காலையிலே ஹாப்பி! தங்கம் விலை திடீர் சரிவு - இவ்வளவு கம்மியா?
Gold Silver Price: காலையிலே ஹாப்பி! தங்கம் விலை திடீர் சரிவு - இவ்வளவு கம்மியா?
Soorasamharam 2024: பக்தர்களே! சூரசம்ஹாரம் நடைபெறாத புகழ்பெற்ற முருகன் கோயில் - ஏன் தெரியுமா? 
Soorasamharam 2024: பக்தர்களே! சூரசம்ஹாரம் நடைபெறாத புகழ்பெற்ற முருகன் கோயில் - ஏன் தெரியுமா? 
TN Rains: சென்னையில் காலை முதல் கனமழை! 10 மணி வரை 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
TN Rains: சென்னையில் காலை முதல் கனமழை! 10 மணி வரை 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
Breaking News LIVE 7th NOV 2024:  12, 13 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டின் கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.
Breaking News LIVE 7th NOV 2024: 12, 13 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டின் கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

S Ve Sekar : ”வாயத் தொறந்தாலே பொய்! அண்ணாமலைக்கு தகுதியே இல்ல” வெளுத்துவாங்கும் எஸ்.வி.சேகர்Sekar babu : Madurai Theft CCTV | ’’மதுரையை மிரட்டும் குரங்கு குல்லா கொள்ளையர்கள்’’நடுங்கவைக்கும் CCTV காட்சிகள்Karur BJP Members Join DMK : தட்டித்தூக்கிய செந்தில் பாலாஜி ஷாக்கான அண்ணாமலை ஸ்டாலின் போடும் கணக்கு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Silver Price: காலையிலே ஹாப்பி! தங்கம் விலை திடீர் சரிவு - இவ்வளவு கம்மியா?
Gold Silver Price: காலையிலே ஹாப்பி! தங்கம் விலை திடீர் சரிவு - இவ்வளவு கம்மியா?
Soorasamharam 2024: பக்தர்களே! சூரசம்ஹாரம் நடைபெறாத புகழ்பெற்ற முருகன் கோயில் - ஏன் தெரியுமா? 
Soorasamharam 2024: பக்தர்களே! சூரசம்ஹாரம் நடைபெறாத புகழ்பெற்ற முருகன் கோயில் - ஏன் தெரியுமா? 
TN Rains: சென்னையில் காலை முதல் கனமழை! 10 மணி வரை 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
TN Rains: சென்னையில் காலை முதல் கனமழை! 10 மணி வரை 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
Breaking News LIVE 7th NOV 2024:  12, 13 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டின் கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.
Breaking News LIVE 7th NOV 2024: 12, 13 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டின் கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.
Sai Pallavi - Sivakarthikeyan  : தெலுங்கு ரசிகர்களையும் பிடிச்சிட்டாங்க...தெலுங்கில் பேசி அசத்திய சிவகார்த்திகேயன், சாய்பல்லவி
தெலுங்கு ரசிகர்களையும் பிடிச்சிட்டாங்க...தெலுங்கில் பேசி அசத்திய சிவகார்த்திகேயன், சாய்பல்லவி
Thug Life : மக்களே சம்பவம் லோடிங்... இன்னும் சற்று நேரத்தில் வெளியாகும் தக் லைஃப் அப்டேட்
Thug Life : மக்களே சம்பவம் லோடிங்... இன்னும் சற்று நேரத்தில் வெளியாகும் தக் லைஃப் அப்டேட்
பெண்களுக்கு மாதம் ரூ. 3000.. இலவச பஸ் பயணம்.. ஒரே பார்முலா.. அதிரடி காட்டும் காங்கிரஸ்!
மாதம் ரூ. 3000.. இலவச பஸ் பயணம்.. பெண்களுக்கு அள்ளிக்கொடுக்கும் காங்கிரஸ்!
கருவறைக்குள் ஆ.ராசாவால் நுழைய முடியுமா? பரபரப்பை கிளப்பிய தமிழக பாஜக!
கருவறைக்குள் ஆ.ராசாவால் நுழைய முடியுமா? பரபரப்பை கிளப்பிய தமிழக பாஜக!
Embed widget