மேலும் அறிய

Share Market Adani: ஆரம்பமே பேரிடி.. ரூ.53 ஆயிரம் கோடியை இழந்த அதானி குழுமம், பங்குச் சந்தையில் 17% வரை சரிவு

Share Market Adani: ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையின் எதிரொலியாக, அதானி குழுமம் பங்குச் சந்தையில் ரூ.53 ஆயிரம் கோடி இழப்பைச் சந்தித்துள்ளது.

Share Market Adani: ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையின் எதிரொலியாக, அதானி குழுமத்தின் பங்குகள் சரிவைச் சந்தித்துள்ளன.

அதானி குழுமம் - ரூ.53,000 கோடி இழப்பு

பங்குச் சந்தையில் பங்குஜ்களின் சரிவால், அதானி குழுமத்தில் முதலீடு செய்தவர்களுக்கு ரூ.53 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அதானி குழும நிறுவன பங்குகள் விலை 17 சதவிகிதம் வரை சரிந்துள்ளது. அதானி கிரீன் எனர்ஜி நிறுவன பங்குகள் விலை 7 சதவிகிதம் சரிந்து ரூ.1,656-க்கு வர்த்தகமானது. அதானி வில்மர் மற்றும் அதானி எண்டர்பிரைசஸ்  நிறுவன பங்குகளின் விலை 3 சதவிகிதம் வரை சரிந்தது. அதானி டோட்டல் கேஸ் நிறுவன பங்குகள் 13 சதவிகிதம் வரை சரிந்து ரூ.753-க்கு குறைந்தது. என்டிடிவி நிறுவன பங்குகளின் மதிப்பு 11 சதவிகிதம் குறைந்து ரூ.186.15 ஆக வீழ்ந்தது.  அதானி பவர் நிறுவன பங்குகளின் விலை 4 சதவிகிதமும் சரிந்தது. அதிகபட்சமாக அதானி எனர்ஜி சொல்யூசன் நிறுவனத்தின் பங்குகள் 17.06 சதவிகிதம் வரை சரிந்து, ரூ.915.70-க்கு விற்பனையானது. இன்று காலை வணிகம் தொடங்கியதும் அதானி பங்குகள் சரிவைச் சந்தித்தாலும், அது மெல்ல மெல்ல தற்போது எழுச்சி கண்டு வருகிறது. இதனால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பங்குச்சந்தை சரிவு:

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 424 புள்ளிகள் சரிந்து, 79 ஆயிரத்து 281 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 153 புள்ளிகள் குறைந்து 24 ஆயிரத்து 213 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

குற்றச்சாட்டும், கடந்த கால இழப்பும்:

ஹிண்டர்ன்பர்க் வெளியிட்ட அறிக்கையில், “அதானி குழும முறைகேட்டிற்குப் பயன்படுத்திய வெளிநாட்டு நிறுவனங்களில், இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் தலைவர் (SEBI) மாதபி புச்சுக்கு சொந்தமான பங்குகள் இருந்தன. முறைகேட்டில் உடந்தை என்பதனாலேயே அதானி முழுமம் மீது செபி தலைவர் நடவடிக்கை எடுக்கவில்லை” என குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், செபி தலைவர் மாதபி புச் மற்றும் அதானி குழுமம் சார்பில் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில்,  அதானி குழும பங்குகள் சரிவை சந்தித்துள்ளன. முன்னதாக கடந்த ஆண்டு ஹிண்டர்ன்பர்க் வெளியிட்ட குற்றச்சாட்டுகளில், அதானி குழுமம் சந்தை மூலதன மதிப்பில் 6 லட்ச கோடி ரூபாயை இழந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நாட்டிலேயே நாமதான் டாப்.. வாவ் சொல்ல வைக்கும் அரசு பேருந்துகள்.. விருதுகளை வாரிக்குவித்த தமிழ்நாடு!
நாட்டிலேயே நாமதான் டாப்.. வாவ் சொல்ல வைக்கும் அரசு பேருந்துகள்.. விருதுகளை வாரிக்குவித்த தமிழ்நாடு!
நான் இந்தி இசையா? உயிரையும் கொடுப்பான் பாஜக தொண்டன் - தமிழிசை ஆவேசம்
நான் இந்தி இசையா? உயிரையும் கொடுப்பான் பாஜக தொண்டன் - தமிழிசை ஆவேசம்
"அய்யோ மாட்டிக்கிட்டோமே" சோதனை செய்த போலீஸ்.. வசமாக சிக்கிய கடத்தல்காரர்.. கடைசியில் ட்விஸ்ட்
Sun TV: டிஆர்பி ரேட்டிங்கில் அதளபாதாளத்தில் கிடக்கும் சன் டிவி சீரியல்கள் இதுதான்!
Sun TV: டிஆர்பி ரேட்டிங்கில் அதளபாதாளத்தில் கிடக்கும் சன் டிவி சீரியல்கள் இதுதான்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

வார்த்தையை விட்ட அண்ணாமலை! அதிருப்தியில் EPS! குழப்பத்தில் பாஜக சீனியர்கள்Rajendra Balaji Vs Mafoi Pandiarajan | மிரட்டிய ராஜேந்திர பாலாஜி!EPS-யிடம் போட்டு கொடுத்த மாஃபா தூதுவிடும் தவெக!Daughter in law Surprise: வைர நெக்லஸ்..தங்க கட்டிகள்..1 கோடியில் BIRTHDAY GIFT!மாமியாருக்கு SURPRISE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நாட்டிலேயே நாமதான் டாப்.. வாவ் சொல்ல வைக்கும் அரசு பேருந்துகள்.. விருதுகளை வாரிக்குவித்த தமிழ்நாடு!
நாட்டிலேயே நாமதான் டாப்.. வாவ் சொல்ல வைக்கும் அரசு பேருந்துகள்.. விருதுகளை வாரிக்குவித்த தமிழ்நாடு!
நான் இந்தி இசையா? உயிரையும் கொடுப்பான் பாஜக தொண்டன் - தமிழிசை ஆவேசம்
நான் இந்தி இசையா? உயிரையும் கொடுப்பான் பாஜக தொண்டன் - தமிழிசை ஆவேசம்
"அய்யோ மாட்டிக்கிட்டோமே" சோதனை செய்த போலீஸ்.. வசமாக சிக்கிய கடத்தல்காரர்.. கடைசியில் ட்விஸ்ட்
Sun TV: டிஆர்பி ரேட்டிங்கில் அதளபாதாளத்தில் கிடக்கும் சன் டிவி சீரியல்கள் இதுதான்!
Sun TV: டிஆர்பி ரேட்டிங்கில் அதளபாதாளத்தில் கிடக்கும் சன் டிவி சீரியல்கள் இதுதான்!
வாவ்… 118 கி.மீ... சென்னையில் மேலும் 3 வழித்தடம்! 128 மெட்ரோ நிலையங்கள்! வெளியான அதிரடி அறிவிப்பு
வாவ்… 118 கி.மீ... சென்னையில் மேலும் 3 வழித்தடம்! 128 மெட்ரோ நிலையங்கள்! வெளியான அதிரடி அறிவிப்பு
WhatsApp Admin Shot: அடப் பாவிங்களா.! வாட்ஸ்அப் குரூப்பிலிருந்து தூக்கியதால் அட்மின் சுட்டுக்கொலை.. எங்கு தெரியுமா.?
அடப் பாவிங்களா.! வாட்ஸ்அப் குரூப்பிலிருந்து தூக்கியதால் அட்மின் சுட்டுக்கொலை.. எங்கு தெரியுமா.?
BJP TN Leader Sarathkumar?: என்னது.!! நம்ம நாட்டாம பாஜக தலைவர் ஆகப்போறாரா.? அப்போ அண்ணாமலையோட கதி.?!
என்னது.!! நம்ம நாட்டாம பாஜக தலைவர் ஆகப்போறாரா.? அப்போ அண்ணாமலையோட கதி.?!
L Murugan:
L Murugan: "பெண்கள் சாலையில் நடக்க முடிவதில்லை" பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை -எல்.முருகன் ஆவேசம்.
Embed widget