Commercial LPG Price : அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது வர்த்தக சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
Commercial LPG Price : ஈரான்- அமெரிக்கா போர் காரணமாக வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் வர்த்தக சமையல் எரிவாயு விலையானது தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், இன்று வர்த்தக சிலிண்டர் விலையானது குறைந்துள்ளது.

சமையல் எரிவாயு தட்டுப்பாடு- பொதுமக்கள் பாதிப்பு
நவீன காலத்திற்கு ஏற்ப மக்களும் மாறி வரும் நிலையில், சமையல் செய்வதற்கு விறகு, மண்ணெண்ணெய் மக்களை பயன்படுத்தி வந்த நிலையில் இதற்கு மாற்றாக சமையல் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்த தொடங்கினர். இதனால் மண்ணெண்ணெய் மற்றும் விறகு பயன்பாடு பெரும்பாலும் குறைக்கப்பட்டது. இந்த நிலையில், எரிவாயு சிலிண்டர் உற்பத்தி செய்ய தேவையான கச்சா எண்ணெய் வளைகுடா நாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால் கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக அமெரிக்கா- ஈரான் போர் காரணமாக ஹார்மூஸ் ஜலசந்தி மூடப்பட்டது.
அமெரிக்கா, ஈரான் போர்- வர்த்தகம் பாதிப்பு
இதனையடுத்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு கச்சா எண்ணெய், பெட்ரோல்,டீசல் உள்ளிட்ட வர்த்தகம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 4 மாதங்களாக சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டது. பொதுமக்கள் வீட்டில் பயன்படுத்தும் சமையல் எரிவாயு புக் செய்யவும் கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. சமையல் எரிவாயு விலையும் பல மடங்கு அதிகரித்தது. அந்த வகையில் ஓட்டல்களில் பயன்படுத்தப்படும் வணிக சமையல் எரிவாயு விலையானது பல மடங்கு அதிகரிக்கப்பட்டது.
இதனால் ஓட்டல்களில் உணவுப்பொருட்களின் விலையானது அதிகரித்தது. ஒரு இட்லி 12 ரூபாய்க்கும், தோசை 50 ரூபாய் என கடுமையாக உயர்ந்தது. இந்த நிலையில் அமெரிக்கா- ஈரான் இடையே சற்று அமைதியான நிலை ஏற்பட்டுள்ளதால் ஹார்மூஸ் மூலம் கப்பல் போக்குவரத்தும் நடைபெற்று வருவதால் சிலிண்டர் விலையானது குறைந்து வருகிறது.அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் சமையல் எரிவாயு விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகிறது.
வர்த்தக சிலிண்டர் விலை ரூ.202 குறைந்தது
அந்த வகையில், இன்று ஆகஸ்ட் 1ஆம் தேதி அதிரடியாக வர்த்தக சிலிண்டர் விலையானது குறைத்துள்ளது. டெல்லி மற்றும் சென்னையில் 19 கிலோ வர்த்தக எல்பிஜி சிலிண்டர்களின் விலை ரூ.202- குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் பிற வணிக நிறுவனங்களுக்கு சற்று விலை குறைப்பால் நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் ரூ.3,108-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.202 குறைந்து ரூ.2,906-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரம் 14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
ட்ரெண்டிங் செய்திகள்





















