Gold Silver Price: நான்கே நாட்களில் தங்கம் விலை இவ்வளவு கம்மியா? உடனே கிளம்புங்க!
தங்கம் விலை தொடர்ந்து உச்சத்திற்கு சென்று கொண்டிருந்த நிலையில், தங்கம் கடந்த நான்கு நாட்களில் மட்டும் ரூபாய் 2 ஆயிரத்து 720க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை தங்கம் என்பது ஆபரணப் பொருட்களாக மட்டுமின்றி அத்தியாவசிய பொருட்களாகவும் பல குடும்பங்களுக்கு உள்ளது. ஏனென்றால் நெருக்கடியான பல சூழ்நிலைகளில் சாதாரண குடும்பங்களுக்கு தங்க நகைகளில் அடமானம் வைத்து பணமாக பெற்றுக்கொள்ள உதவுகிறது.
தங்கம் விலை:
தங்கம் தவிர்க்க முடியாத தேவைப்பொருளாக மாறியுள்ள சூழல் காரணமாக இந்தியாவில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டெ சென்று வருகிறது. குறிப்பாக, 2000ம் ஆண்டுக்கு பிறகு தங்க நகைகளின் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலே இருந்து வருகிறது.
இந்த சூழலில், ரஷ்யா – உக்ரைன் போர், இஸ்ரேல் – ஹமாஸ் போர் ஆகியவற்றின் காரணமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் நிதி கூட்டமைப்பு தங்களது வட்டிவிகிதத்தை குறைத்த நிலையில், முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்தது. இதனால், தொடர்ந்து தங்கம் விலை அதிகரித்து வருகிறது. தங்கம் விலை உச்சத்திற்குச் சென்று கொண்டிருப்பதை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய அரசு கடந்த நிதிநிலை அறிக்கையில் தங்கம் மீதான இறக்குமதி வரியை குறைத்தது. இதன் காரணமாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு 3 நாட்களுக்கு தங்கம் விலை குறைந்த நிலையில் மீண்டும் உச்சத்திற்குச் சென்றது.
4 நாட்களில் அதிரடி குறைவு:
தொடர்ந்து உச்சத்திற்கு தங்கம் விலை சென்று கொண்டிருந்த நிலையில் தற்போது 60 ஆயிரத்தை நோக்கி தங்கம் விலை சென்றது. இதனால், சாமானிய மக்கள் மிகப்பெரிய அச்சத்திற்கு ஆளாகினர். இந்த நிலையில், கடந்த 3 நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.
கடந்த 10ம் தேதி 22 காரட் ஆபரணத்தஙகம் ரூபாய் 58 ஆயிரத்து 200க்கு சவரன் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், அதற்கு அடுத்தடுத்த 4 நாட்களில் தங்கம் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. சென்னையில் இன்று 22 காரட் தங்கம் ரூபாய் 55 ஆயிரத்து 480க்கு விற்கப்படுகிறது. கடந்த 4 நாட்களில் மட்டும் தங்கம் விலை ரூபாய் 2 ஆயிரத்து 720 குறைந்துள்ளது. இதனால், பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
தங்கம் விலை ரூபாய் 55 ஆயிரத்து 480க்கு விற்கப்பட்டாலும் செய்கூலி, சேதாரம் ஆகியவற்றின் மதிப்பு சுமார் 10 ஆயிரம் அளவிற்கு இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால், தங்கம் விலை மேலும் குறைந்தால் மட்டுமே பொதுமக்கள் நிம்மதி அடைவார்கள். அடுத்து வரும் நாட்களிலும் தங்கம் விலை மேலும் குறையும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.