Gold rate today: ஒரே நாளில் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை.! ஒரு கிராமுக்கே இவ்வளவு உயர்வா.?
தங்கத்தின் விலை தினந்தோறும் புதிய விலையை தொட்டு வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதன் காரணமாக நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தினந்தோறும் அதிகரித்து வரும் தங்கம் விலை
தங்கத்தின் மீதான மதிப்பு எப்போதும் குறையாது. எனவே தங்கத்தின் மீதான முதலீடு உலகநாடுகளில் அதிகரித்து வருகிறது. இதில் குறிப்பாக இந்திய மக்களுக்கு நகைகள் மீது அதீத ஆர்வம் காரணமாக மற்ற நாடுகளை விட இந்தியாவில் தங்கத்தை அதிகளவு மக்கள் வாங்கி சேமித்து வருகிறார்கள். திருமண நிகழ்வுகள் மற்றும் விஷேச நாட்களில் அதிகளவில் தங்க நகைகளை அணிய இந்திய மக்கள் விரும்புவார்கள். எனவே இந்திய திருமணங்களில் தங்க நகைகள் முக்கிய இடம்பிடித்து வருகிறது. இதன் காரணமாகவே தங்கத்திற்கான மதிப்பானது தினந்தோறும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை
கடந்த 2025ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலையானது 59ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. இது கடந்த ஒரு வருடத்தில் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. அந்த வகையில் ஒரு லட்சத்தை தாண்டியுள்ள தங்கம் விலை இன்னும் சில மாதங்களில் 2 லட்சத்தை தொடும் என அதிர்ச்சி தகவலை நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் வாரத்தின் முதல் நாள் மற்றும் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக மக்கள் நகைகளை வாங்க அதிகளவு நகைக்கடைகளில் கூடி வரும் நிலையில், இன்று நகைப்பிரியர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அந்த வகையில் இன்று தங்கத்தின் விலையானது கிராமுக்கு 220 ரூபாய் உயர்ந்து 13ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு சவரனுக்கு 1,760 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 4ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதன் காரணமாக நகைப்பிரியர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
இதே போல வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 12 ரூபாய் உயர்ந்து 287 ரூபாய்க்கு விற்பனையாகிவருகிறது. ஒரு கிலோவிற்கு 12ஆயிரம் ரூபாய் உயர்ந்துள்ளது. ஒர கிலோ தற்போது 2 லட்சத்து 87 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.





















