December 2023 Deadlines: அலர்ட் மக்களே! ஆதார் கார்டு முதல் யுபிஐ ஐடிகள் வரை...டிசம்பருக்குள் இந்த வேலையை முடிச்சிருங்க!
December 2023 Financial Deadlines: வங்கி லாக்கர், ஆதார் கார்டு புதுப்பித்தல், மியூச்சுவல் ஃபண்ட் நியமனம் வரை இந்த மாதத்திற்குள் முடிக்க வேண்டும்.
December 2023 Financial Deadlines: வங்கி லாக்கர், ஆதார் கார்டு புதுப்பித்தல், மியூச்சுவல் ஃபண்ட் நியமனம் வரை இந்த மாதத்திற்குள் முடிக்க வேண்டும்.
ஒவ்வொரு மாதமும் புதிய விதிமுறைகள், விலை திருத்தம், வரி திருத்தம், கட்டணங்கள் மாற்றம் என புதுப்புது விதிகள் அமல்படுத்தப்படுவது வழக்கம். அந்தவகையில், டிசம்பர் மாதத்தில் பல்வேறு முக்கிய திட்டங்களுக்கான கெடு முடிவடைகிறது. இத்தகைய சூழ்நிலையில், நிலுவையில் உள்ள உங்கள் பணிகளை முடிக்க வேண்டும். சில பணிகளை நிறைவு செய்ய கடந்த பல மாதங்களாக காலக்கெடு இருந்த நிலையில், இந்த மாதத்துடன் முடிவடைகிறது. அதாவது, வங்கி லாக்கர், ஆதார் கார்டு புதுப்பித்தல், மியூச்சல் ஃபண்ட் நியமனம் வரை இந்த மாதத்தில் முடிக்க வேண்டும். இதில் பல கெடுக்கள் ஏற்கனவே நீட்டிக்கப்பட்டவை. இப்போது இந்த மாதம் இறுதியில் முடிவடைகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் கார்டு புதுப்பித்தல்:
ஆதார் அட்டையை பதிவு செய்த நாளிலிருந்து 10 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது ஆதாரை புதுப்பிக்க வேண்டும் என்று ஆதார் அமைப்பு தெரிவித்துள்ளது. அதன்படி, தங்களது ஆதார் கார்டில் உள்ள பெயர், முகவரி, பிறந்ததேதி, பாலினம், மொபைல் எண், இமெயில் போன்றவற்றை எந்த ஒரு கட்டணமும் செலுத்தாமல் இலவசமாக ஆன்லைனில் டிசம்பர் 14ஆம் தேதி வரை அப்டேட் செய்து கொள்ளலாம். அதன்பிறகு அப்டேட் செய்ய வரும்பினால் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். https://uidai.gov.in/ என்ற இணையதளத்திற்கு சென்ற டிசம்பர் 14ஆம் தேதி வரை இலவசமாக ஆதார் கார்டை அப்டேட் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கி லாக்கர்:
விலை உயர்ந்த அல்லது மதிப்பு மிக்க பொருட்களை, குறிப்பாக நகைகளை வங்கி லாக்கரில் வைக்கின்றனர். இந்நிலையில், வங்கி லாக்கர்களுக்கான புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதை ரிசர்வ் வங்கி கட்டாயமாக்கியுள்ளது. லாக்கர் ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கான கடைசி தேதியை ரிசர்வ் வங்கி முதலில் 2023 ஜனவரி 1 என வைத்திருந்தது. பின்னர், இதற்கான கடைசி தேதியை டிசம்பர் 31 ஆக வைத்துள்ளது. எனவே, வங்கி லாக்கர்களுக்கான புதிய ஒப்பந்தத்தில் டிசம்பர் 31க்குள் கையெழுத்திட வேண்டும். புதிய விதிகளின்படி, வங்கியும் வாடிக்கையாளர்களும் புதிய ஒப்பந்தத்தில் எந்த வகையான பொருட்களை வைக்கலாம் என்றும், எந்த வகையான பொருட்களை வைக்க கூடாது என்பதையும் தெளிவாக குறிப்பிட வேண்டும். வாடிக்கையாளர்கள் தொடர்ந்து பணத்தை செலுத்தினால் மட்டுமே லாக்கரில் பொருட்கள் வைக்க முடியும்.
UPI ஐடிகள் முடக்கம்:
ஒரு ஆண்டுக்கு மேலாக செயல்படாத நிலையில் உள்ள யுபிஐ ஐடிகள் மற்றும் எண்களை முடக்கப்படும் என்று நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா தெரிவித்திருக்கிறது. எனவே, டிசம்பர் 31ஆம் தேதிக்குள் உங்கள் செயல்பாட்டில் இல்லாத யுபிஐ ஐடியை மீண்டும் செயல்படுத்த வேண்டும். இல்லையெனில் முடக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
மியூச்சுவல் ஃபண்ட்:
மியூச்சுவல் ஃபண்டிற்கான நாமினியை தேர்தெடுத்து முதலீட்டாளர்கள் இணைக்க வேண்டும். தற்போது டிமேட் கணக்கு வைத்திருப்பவர்கள் மற்றும் மியூச்சல் ஃபண்ட் யூனிட் வைத்திருப்பவர்கள் நாமினியைத் தேர்வு செய்வதற்கான காலக்கெடு டிசம்பர் 31ஆம் தேதி ஆகும் என்று செபி (SEBI) தெரிவித்துள்ளது.
ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு:
தடையற்ற பென்ஷன் பேமெண்ட்களை உறுதி செய்வதற்கு அனைத்து மத்திய, மாநில ஓய்வூதியதாரர்கள் லைஃப் சான்றிதழை கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும். ஓய்வூதியம் பலன்களை தொடர்ந்து பெறுவதற்கு பென்ஷனர்கள் லைஃப் சான்றிதழை ஒவ்வொரு நவம்பர் மாதமும் சமர்ப்பிக்க வேண்டும். நவம்பர் மாதம் நேற்றுடன் முடிவடைந்து. நீங்கள் லைஃப் சான்றிதழை சமர்ப்பித்திருக்க வேண்டும். இல்லையெனில், உங்களது பென்ஷன் பேமெண்ட் தற்காலிகமாக நிறுத்திக் வைக்கப்படலாம்.