![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Budget 2023: மத்திய அரசின் கடைசி பட்ஜெட்.. உட்கட்டமைப்பு துறையின் பக்கம் திரும்புமா மோடியின் கவனம்! எதிர்பார்ப்பது என்ன?
மத்திய அரசின் பட்ஜெட்டில், உட்கட்டமைப்பு துறைக்கு எவ்வளவு நிதி (Budget 2023 Expectations) ஒதுக்கப்பட உள்ளது, புதிய திட்டங்கள் என்ன என்பது தொடர்பான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
![Budget 2023: மத்திய அரசின் கடைசி பட்ஜெட்.. உட்கட்டமைப்பு துறையின் பக்கம் திரும்புமா மோடியின் கவனம்! எதிர்பார்ப்பது என்ன? Union Budget 2023 Infrastructure Sector Budget Expectations Know More Details Budget 2023: மத்திய அரசின் கடைசி பட்ஜெட்.. உட்கட்டமைப்பு துறையின் பக்கம் திரும்புமா மோடியின் கவனம்! எதிர்பார்ப்பது என்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/18/bc128fe6e3e3eb436e4f1b0f2c8f57f0_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மத்திய அரசின் பட்ஜெட்:
மத்திய அரசின் 2023-24ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். தொடர்ந்து, ஐந்தாவது முறையாக அவர் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான அரசு அமைந்தது முதலே, நாட்டின் ஒருங்கிணைந்த வளர்ச்சியே தங்களது இலக்கு என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அந்த வகையில் பொதுத்தேர்தலுக்கு முன்னதாக, மோடி தலைமையிலான அரசு தாக்கல் செய்ய உள்ள கடைசி முழு பட்ஜெட் இது என்பதால், இந்த பட்ஜெட்டிலும் உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருநாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி என்பது, அதன் உட்கட்டமைப்பையே சார்ந்து இருக்கும் என்பதால், அதுதொடர்பான திட்டங்கள் மீது எப்போதும் கூடுதல் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
பட்ஜெட்டின் இலக்கு:
அடுத்த நிதியாண்டிற்கான பட்ஜெட் முதலீடு, நட்பு கொள்கைகள், கருவிகள், உள்கட்டமைப்பை உருவாக்க வணிக மூலதனத்தை ஈர்க்கும் வாய்ப்புகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மூலதன செலவு அதிகரிக்க வாய்ப்பு:
அடுத்த நிதியாண்டிற்கான மத்திய அரசின் பட்ஜெட்டில் , நெடுஞ்சாலைகள், ரயில்வே மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு ஆகியவற்றின், உட்கட்டமைப்புக்கான மூலதனச் செலவை 25-30 சதவிகிதம் வரை அரசு அதிகரிக்கக் கூடும் என துறைசார் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். உட்கட்டமைப்பு வளர்ச்சி மீது அரசு தொடர்ந்து கவனம் செலுத்தும் எனவும், இந்த செலவானது ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியில் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
சாலை மேம்பாட்டிற்கு கூடுதல் நிதி?
அடுத்த நிதியாண்டிற்கான மத்திய அரசு பட்ஜெட்டில், சாலை மற்றும் நெடுஞ்சாலைகளுக்கான நிதி, கடந்த நிதியாண்டை காட்டிலும் 10 முதல் 12 சதவிகிதம் வரை கூடுதலாக நிதி ஒதுக்கப்படலம் என எதிர்பார்கப்படுகிறது. முந்தைய ஆண்டுகளில் சாலை மேம்பாட்டிற்காக ரூ.1.6 முதல் 1.8 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது. மின்சார வாகனங்களுக்கான சாலையோர சார்ஜிங் மையங்களை அமைக்கவும் அரசு கவனம் செலுத்தும் என தகவல் வெளியாகியுள்ளது. இதோடு, சாலைப் பாதுகாப்பு போன்ற மென்மையான அம்சங்களில் கூர்மையான கவனம் செலுத்தி, கணிசமான நிதியை ஒதுக்கக்கூடும்.
ரயில்வேதுறை திட்டங்கள் என்ன?
அதேநேரம், ரயில்வேதுறைக்கு 30 சதவிகிதம் வரையில் நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ரயில்வே துறைக்கான மூலதனச் செலவும் ரூ.2 லட்சம் கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரத்யேக சரக்கு வழித்தடங்கள் மற்றும் அதிவேக ரயில் திட்டங்கள் நடைபெற்று வருவதால், தேசிய இரயில் திட்ட இலக்குகளை அடைவதற்காக பல முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கதி சக்தி திட்டத்துடன் இரயில் திட்டங்களை அதிக அளவில் ஒருங்கிணைப்பதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற முக்கிய துறைகள்:
முக்கிய துறைமுகங்கள் முழுவதும் டெர்மினல்களை பணமாக்குதல் மற்றும் முக்கிய அல்லாத துறைமுகங்கள் முழுவதும் சாலை மற்றும் இரயில் இணைப்பு வழங்குவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படலாம். விமானப் போக்குவரத்தைப் பொறுத்தவரை, உள்நாட்டு இணைப்பை மேம்படுத்துதல் மற்றும் டிரோன் விண்வெளியில் அதிக ஸ்டார்ட்-அப்களை ஊக்குவித்தல் ஆகியவை முக்கிய கருப்பொருளாக இருக்கக் கூடும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)