மேலும் அறிய

Union Budget 2022 : இந்த முறை திருக்குறளும் இல்லை, தமிழும் இல்லை... மகாபாரதத்தை கையில் எடுத்த நிர்மலா சீதாராமன் !

எப்பொழுதும் தமிழ் மற்றும் தமிழின் மிகப்பெரிய இலக்கியங்களான திருக்குறள் மற்றும் ஆத்திச்சூடிகளில் இருந்து வரிகளை எடுத்து முன்னுதாரமாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவிப்பார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது. இரு அவைகளின் கூட்டத்தில் பேசிய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்  “கற்க கசடற” என தொடங்கும் திருக்குறளை சுட்டிக் காட்டி புதிய கல்வி கொள்கை குறித்து பேசினார். அவரை தொடர்ந்து  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார். நேற்று தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் 27 முறை தமிழகம் என்ற சொல் இடம்பெற்றது. இன்று நிர்மலா சீதாராமன் தனது நான்காவது பட்ஜெட்டை தாக்கல்  செய்தார். 

இந்தநிலையில், எப்பொழுதும் தமிழ் மற்றும் தமிழின் மிகப்பெரிய இலக்கியங்களான திருக்குறள் மற்றும் ஆத்திச்சூடிகளில் இருந்து வரிகளை எடுத்து முன்னுதாரமாக தெரிவிப்பார். அதேபோல், இந்தாண்டும் தமிழ் சார்ந்த ஏதாவது ஒரு இலக்கியங்கள் முன்னுதாரமாக சொல்லப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு முற்றிலும் மாறாக மகாபாரதம் 18 பருவங்களில் பன்னிரண்டாவது பருவமான சாந்தி பருவத்தை மேற்கோள் காட்டி நிர்மலா சீதாராமன் பேசினார். 

இந்த ஆண்டு வரி செலுத்தும் அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்து, அஸ்தினாபுரத்தின் அரசனாகத் தருமருக்கு முடிசூட்டும்போது அரசை எப்படி வழிநடத்த வேண்டும் என பீஷ்மர் வழங்கிய அறிவுரை இந்த பருவத்தில் இடம்பெற்றுள்ளது. அதில், மன்னன் எந்தவொரு ஆசையையும் துறந்து, தர்மத்திற்கு வழியில் அரசை ஆளவும், அதே வழியில் மக்களிடம் வரிகளை வசூலித்து மக்களின் நலனுக்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

முன்னதாக, கடந்த ஆண்டு, 2021  ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது, “ இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த  வகுத்தலும் வல்லது அரசு”  என்ற குறளை மேற்கோள் காட்டி பேசினார்.

அதேபோல அப்போது, பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
    அணியென்ப நாட்டிவ் வைந்து  என்ற குறளையும் சுட்டிக்காட்டினார்

2020-ம் வருடத்தில் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்தபோது  "பூமி திருத்தி உண்" என ஆத்திச்சூடி மேற்கோளுடன் பேசினார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்.2019 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கலின்போது புறநானூற்றிலிருந்து பிசிராந்தையாரின் யானை புக்க புலம் போல என தொடங்கும் பாடலை மேற்கோள்காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

SPB Road: எஸ்.பி பாலசுப்பிரமணியம் சாலை பெயர் அறிவிப்பு- ரசிகனாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்.!
SPB Road: எஸ்.பி பாலசுப்பிரமணியம் சாலை பெயர் அறிவிப்பு- ரசிகனாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்.!
Breaking News LIVE, Sep 25: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
Breaking News LIVE, Sep 25: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
விவசாயிகளே உஷார்... மழை வெளுத்து வாங்க போது... நெல் பயிருக்கு காப்பீடு செய்ய கடைசி தேதி!
விவசாயிகளே உஷார்... மழை வெளுத்து வாங்க போது... நெல் பயிருக்கு காப்பீடு செய்ய கடைசி தேதி!
Crime: ஏடிஎம் கார்டை திருடி நூதன முறையில் பணம் திருட்டு: மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
Crime: ஏடிஎம் கார்டை திருடி நூதன முறையில் பணம் திருட்டு: மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Savukku Shankar : சவுக்கு சங்கர் குண்டாஸ் ரத்து! உடனே விடுதலை பண்ணுங்க.. ஆனாThanjavur Mayor Angry : ”வேலை நேரத்துல PHONE-ஆ”டென்ஷனாகி பிடுங்கிய மேயர் பதறிய பெண் அதிகாரிKenisha Reveals Jayam Ravi Relationship : ”DIVORCE நோட்டீஸ் அனுப்பிட்டு! ஜெயம் ரவி என்னிடம் வந்தார்”Jayam Ravi Aarthi Issue | வீட்டுக்குள் விடாத ஆர்த்தி?ஜெயம் ரவி பரபரப்பு புகார்!”காரை மீட்டு கொடுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SPB Road: எஸ்.பி பாலசுப்பிரமணியம் சாலை பெயர் அறிவிப்பு- ரசிகனாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்.!
SPB Road: எஸ்.பி பாலசுப்பிரமணியம் சாலை பெயர் அறிவிப்பு- ரசிகனாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்.!
Breaking News LIVE, Sep 25: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
Breaking News LIVE, Sep 25: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
விவசாயிகளே உஷார்... மழை வெளுத்து வாங்க போது... நெல் பயிருக்கு காப்பீடு செய்ய கடைசி தேதி!
விவசாயிகளே உஷார்... மழை வெளுத்து வாங்க போது... நெல் பயிருக்கு காப்பீடு செய்ய கடைசி தேதி!
Crime: ஏடிஎம் கார்டை திருடி நூதன முறையில் பணம் திருட்டு: மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
Crime: ஏடிஎம் கார்டை திருடி நூதன முறையில் பணம் திருட்டு: மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
Mahavishnu Controversy: மகாவிஷ்ணு விவகாரம்: பணிமாறுதல் செய்யப்பட்ட 2 தலைமை ஆசிரியர்களுக்கும் மீண்டும் சென்னையில் பணி?
Mahavishnu Controversy: மகாவிஷ்ணு விவகாரம்: பணிமாறுதல் செய்யப்பட்ட 2 தலைமை ஆசிரியர்களுக்கும் மீண்டும் சென்னையில் பணி?
இலங்கை அதிபருக்கு நெகிழ்ச்சியுடன் தமிழில் வாழ்த்து சொன்ன பிரான்ஸ் அதிபர் மேக்ரான்!
இலங்கை அதிபருக்கு நெகிழ்ச்சியுடன் தமிழில் வாழ்த்து சொன்ன பிரான்ஸ் அதிபர் மேக்ரான்!
Special Bus: காலாண்டு விடுமுறை! ஊருக்குப் போக இத்தனை சிறப்பு பேருந்துகளா? முழு விவரம்
Special Bus: காலாண்டு விடுமுறை! ஊருக்குப் போக இத்தனை சிறப்பு பேருந்துகளா? முழு விவரம்
"50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க இலக்கு நிர்ணயித்துள்ளேன்" - முதலமைச்சர் ஸ்டாலின்
Embed widget