Union Budget 2022: ‛கிருஷ்ணா-பெண்ணாறு- காவேரி நதிகள் இணைக்கப்படும்’ -நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!
மத்திய பட்ஜெட் தாக்கல் : கிருஷ்ணா நதி - பெண்ணாறு- காவேரி நதிகள் இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து நேற்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8-8.5 சதவிகிதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இன்று மக்களவையில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
இந்நிலையில் மக்களவையில் நிர்மலா சீதாராமன் தன்னுடைய பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கினார். அதில்,கிருஷ்ணா நதி - பெண்ணாறு- காவேரி நதிகள் இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க:வருமான வரி செலுத்துபவரா நீங்கள்? பட்ஜெட்டில் உங்களுக்கு சொன்னது இதுதான்!
மேலும், ஐந்து நதி இணைப்புகளுக்கான வரைவுக்கான விரிவான திட்ட அறிக்கைகள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார். இணைக்கப்பட இருக்கும் நதிகளில் விவரம் பின்வருமாறு :தாமன் கங்கா-பிஞ்சல்; பர் தபி-நர்மதா; கோதாவரி-கிருஷ்ணா; கிருஷ்ணா-பெண்ணாறு மற்றும் பெண்ணாறு-காவேரி
Draft DPRs of 5 River Links Finalised.Ken betwa link project - irrigation, electricity generation already in implementation.
— All India Radio News (@airnewsalerts) February 1, 2022
▪️Damanganga - Pinjal
▪️Par-Tapi-Narmada, ▪️godavari-krishna, ▪️krishna- pennar and ▪️pennar-kaveri: FM @nsitharaman #Budget2022 pic.twitter.com/blApUXAE27
இந்த திட்டத்தின்கீழ், பயனடையும் மாநிலங்களுக்கு இடையே ஒருமித்த கருத்து எட்டப்பட்டவுடன், அவற்றை செயல்படுத்துவதற்கு மத்திய அரசு ஆதரவு அளிக்கும். அதேபோல், கென்-பெட்வா நதிகளை இணைக்கும் திட்டத்தையும் அறிவித்த நிதியமைச்சர், 44,605 கோடி செலவில் இந்தத் திட்டம் மேற்கொள்ளப்படும் என்றும், இந்த திட்டத்தால் 900,000 விவசாயிகள் பயனடைவார்கள் என்றும் அவர் கூறினார்.
மேலும் படிக்க: Union Budget 2022 Highlights in Tamil: பட்ஜெட் தொடங்கியது முதல் முடிவு வரை... முக்கிய அறிவிப்புகளின் தொகுப்பு இதோ...!
#BudgetWithABPNadu | பட்ஜெட்டில் விவசாய அறிவிப்புகள்! முழு வீடியோ#UnionBudget2022 | #Budget2022 | #BudgetSession2022 | #Budget | #NirmalaSitharaman #FMSitharaman pic.twitter.com/4tjnY4feb8
— ABP Nadu (@abpnadu) February 1, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்