Union Budget 2022: வருமான வரி செலுத்துபவரா நீங்கள்? பட்ஜெட்டில் உங்களுக்கு சொன்னது இதுதான்!
புதிதாக அறிவிக்கப்பட்ட அறிவிப்பின்படி, சட்டம் வரி செலுத்துவோர் தங்கள் சரியான ஐடிஆர் தாக்கல் செய்ய மதிப்பீட்டு ஆண்டு முடிவில் இருந்து இரண்டு ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்பட இருக்கிறது.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து நேற்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8-8.5 சதவிகிதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இன்று மக்களவையில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
இந்நிலையில் மக்களவையில் நிர்மலா சீதாராமன் தன்னுடைய பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கினார். அந்த பட்ஜெட் உரையில், வருமான வரி குறித்து பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதில், தனிப்பட்ட வரி செலுத்துவோர், வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யும் போது வருமானத்தை அறிவிக்கத் தவறினால், அவர்கள் புதுப்பிக்கப்பட்ட வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
தற்போது, நிதியாண்டில் பல்வேறு ஆதாரங்களில் இருந்து யாரேனும் சம்பாதித்த வருமானத்தின் சரியான படத்தை வழங்குவதற்காக, தனிநபர் தனது ஐடிஆரைப் புதுப்பிக்க டிசம்பர் 31 வரை அவகாசம் அளித்தது. இந்தநிலையில், புதிதாக அறிவிக்கப்பட்ட அறிவிப்பின்படி, சட்டம் வரி செலுத்துவோர் தங்கள் சரியான ஐடிஆர் தாக்கல் செய்ய மதிப்பீட்டு ஆண்டு முடிவில் இருந்து இரண்டு ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்பட இருக்கிறது.
To provide an opportunity to correct an error, taxpayers can now file an updated return within 2 years from the relevant assessment year.#Budget #BudgetSession2022 #tax #STT pic.twitter.com/XnMh0zrSYO
— Negotium (@teamnegotium) February 1, 2022
அதேபோல், மாநில மற்றும் மத்திய அரசு ஊழியர்களின் தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) கணக்கில் உள்ள முதலாளியின் பங்களிப்பில் வரி விலக்கு வரம்பை 14 சதவீதமாக அதிகரிக்கவும் பட்ஜெட் உரையில் தெரிவிக்கப்பட்டது. 2022-23 மத்திய பட்ஜெட்டில் தனியார் கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு கூடுதல் கட்டணத்தில் 12 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாகக் குறைப்பதாகவும் அறிவித்தார்.அப்பொழுது, ஜிஎஸ்டி வசூலுக்கான ஆரோக்கியமான குறிகாட்டியாக இதைக் கருதலாம் எனவும், 2022 ஜனவரி மாதத்திற்கான மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.1,40,986 கோடியாக உள்ளது. இது ஜிஎஸ்டி தொடங்கப்பட்ட ஆண்டுகளில் இருந்து அதிகபட்சமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்