TN Budget 2022: தமிழ்நாடு ஒலிம்பிக் பதக்கம் தேடல் திட்டம் - ரூ.25 கோடி நிதி ஒத்துக்கீடு
தமிழ்நாடு ஒலிம்பிக் பதக்கம் தேடல் திட்டத்திற்கு 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
![TN Budget 2022: தமிழ்நாடு ஒலிம்பிக் பதக்கம் தேடல் திட்டம் - ரூ.25 கோடி நிதி ஒத்துக்கீடு TN Budget 2022: Tamilnadu Olympic Medal hunt scheme gets 25 crore Rupees allocation in TN Budget TN Budget 2022: தமிழ்நாடு ஒலிம்பிக் பதக்கம் தேடல் திட்டம் - ரூ.25 கோடி நிதி ஒத்துக்கீடு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/18/0d594ab95f85e54a3eecc665eb7cc093_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாடு பட்ஜெட் 2022-ஐ நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்து வருகிறார். பட்ஜெட் உரையை தாக்கல் செய்ய தொடங்கிய உடன் அதிமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சில நேரம் நிதியமைச்சரின் பட்ஜெட் உரை நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். இதைத் தொடர்ந்து மீண்டும் நிதியமைச்சர் தன்னுடைய உரையை வாசிக்க தொடங்கினார்.
இந்நிலையில் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலன் தொடர்பாகவும் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தன்னுடைய உரையில் தெரிவித்துள்ளார். அதன்படி தமிழ்நாடு ஒலிம்பிக் பதக்கம் தேடல் என்ற திட்டத்திற்கு 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்தியாவில் முதல் முறையாக நடைபெற செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்து தரப்படும் என்று நிதியமைச்சர் கூறியுள்ளார். இந்த செஸ் விளையாட்டு போட்டிகளில் 180 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பட்ஜெட் அறிவிப்பு 2022-23#TNAssembly | #TNBudget2022 |#CMMKSTALIN | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan @ptrmadurai@jeyaseelan_vp pic.twitter.com/KBWs1Osnjs
— TN DIPR (@TNDIPRNEWS) March 18, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)