TN Budget 2022: 21 மொழிகளில் பெரியாரின் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு : ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு
பெரியாரின் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு 21 மொழிகளில் ரூ. 5 கோடியில் வெளியிடப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் 2022-23ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து வருகிறார். சென்னை, புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டப்பேரவையில் இன்று காலை 10 மணிக்கு பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு பேச வாய்ப்பு அளிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வாய்ப்பு கேட்டார்.
ஆனால், சபாநாயகர் அப்பாவு பேசுவதற்கு வாய்ப்பு அளிக்க மறுத்தார். இதனால், அ.தி.மு.க.வினர் அமளியில் ஈடுபட்டனர். அ.தி.மு.க.வினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் நிதிநிலை அறிக்கையை படித்து வந்த நிதியமைச்சர் பட்ஜெட் வாசிப்பதை சில நிமிடங்கள் நிறுத்தி அமர்ந்தார்.
#TNBudgetWithABPNADU | பெரியாரின் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு 21 மொழிகளில் ரூ.5 கோடியில் வெளியிடப்படும் - பிடிஆர்https://t.co/wupaoCQKa2 #TNBudget2022 #TNAssembly #TNGovt #tamilnadubudget pic.twitter.com/i5NDo7TWyV
— ABP Nadu (@abpnadu) March 18, 2022
அதனைதொடர்ந்து, அதிமுக வெளிநடப்பு செய்ததால் நிதிநிலை அறிக்கையை தொடர்ந்து நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வாசிக்க தொடங்கினார். பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தநிலையில், தற்போது பெரியாரின் சிந்தனைகள் குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், பெரியாரின் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு 21 மொழிகளில் ரூ. 5 கோடியில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், நம்நாட்டின் பன்முக பண்பாட்டை பாசிச சக்திகள் அழிக்க முயற்சிக்கும் நிலையில், தமிழ் சமுதாயத்தை வெற்றிகரமாக வழிநடத்த வேண்டிய வரலாற்று கடமை இந்த அரசுக்கு உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்