TN Farm Budget 2022: இலவச மின்சார திட்டத்திற்கு ரூ. 5, 157 கோடி.. அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்
இலவச மின்சார திட்டங்களுக்கு மானியமாக டான்ஜெட்கோவிற்கு ரூ. 5, 157 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அறிவித்தார்.
தமிழ்நாடு அரசின் 2022-2023ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். அந்தப் பட்ஜெட்டில் பல முக்கியமான அறிவிப்புகள் வெளியாகியின. இருப்பினும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சில அறிவிப்புகள் வெளியாகவில்லை என்று எதிர்க்கட்சிகள் மற்றும் சிலர் குற்றம்சாட்டி வந்தனர்.
TN AGRI BUDGET 2022 LIVE | MRK-வின் முழு முதல் வேளான் பட்ஜெட்.. நேரலை! | MRK Panneerselvam | DMK https://t.co/PzE9M3JKnO
— ABP Nadu (@abpnadu) March 19, 2022
இந்நிலையில் நேற்று பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு சபாநாயகர் அப்பாவு தலைமையிலான அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற்றது. அதில் சில முடிவுகள் எடுக்கப்பட்டது.அதில், இன்று வேளாண்துறையின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
#TNBudgetWithABPNadu | தமிழ்நாட்டில் காலநிலை மாற்றத்தால் 29 மாவட்டங்கள் பாதிக்கப்படும்
— ABP Nadu (@abpnadu) March 19, 2022
- வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு https://t.co/wupaoCQKa2 | #TNBudget #TNAgribudget2022 #AgriBudget #TNGovt pic.twitter.com/OjLPxj6uuk
அதன்படி, இந்த வேளாண் பட்ஜெட்டை இன்று காலை 10 மணி முதல் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டபேரவையில் தாக்கல் செய்து வருகிறார்.அவர் அறிவித்த பட்ஜெட்டில், இலவச மின்சார திட்டங்களுக்கு மானியமாக டான்ஜெட்கோவிற்கு ரூ. 5, 157 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்