Budget Session LIVE: அதானி, பிரதமரின் நண்பர் இல்லையெனில், விசாரணைக்கு உத்தரவிடவேண்டியதுதானே? - ராகுல் காந்தி
Budget Session Parliament: நாடாளுமன்றத்தில் நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்த செய்திகளை உடனுக்குடன் இங்கு காணலாம்.

Background
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரின் விவாதம் சுமூகமாக நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த ஆண்டுக்கான முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31ஆம் தேதி தொடங்கியது.இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 1 ஆம் தேதி 2023 -2024 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து 3 நாட்களாக நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் விவாதத்தில் அதானி குழும விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சிகள் அவையை நடத்த விடாமல் போராட்டம் நடத்தினர். இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கடந்த மூன்று வேலை நாட்களிலும் தொடர்ச்சியாக ஒத்திவைக்கப்பட்டது.
தொடர்ந்து மூன்று நாட்கள் முடங்கிய நிலையில், 4வது நாளான நேற்று காலை 11 மணிக்கு வழக்கம்போல நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது. அப்போது எதிர்க்கட்சிகள் அதானி குழும பிரச்சினையை எழுப்ப முயன்றன. அதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா கேள்வி நேரத்தை எடுத்துக்கொள்ளுமாறு தெரிவித்தார். ஆனால் எதிர்கட்சிகள் தொடர்ந்து தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தியதால் மதியம் 12 மணி வரை சபை நடவடிக்கைகளை சபாநாயகர் ஒத்திவைத்தார்.
பின்னர் ஆம் ஆத்மி தவிர பிற கட்சிகள் அவை நடவடிக்கையில் பங்கேற்றனர். மக்களவையில் பேசிய ராகுல்காந்தி,
ஒன்றிய அரசின் கொள்கைகளால் நாடு முழுவதும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அனைத்து துறைகளிலும் அதானி புகுந்து விடுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் தற்போது நாடு முழுவதும் அதானி விவகாரம் குறித்து பேசப்படுகிறது. மேலும், தனது ஒற்றுமை பயணத்தின் போது குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள் என அனைவரது கருத்துக்களையும் காது கொடுத்து கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. அதானிக்கும் பிரதமர் மோடிக்கும் என்ன தொடர்பு என ராகுல்காந்தி கேள்வியெழுப்பினார்.
ஒற்றுமை நடைபயணத்தின் போது மக்களின் ஆழமான கருத்துக்களை கேட்க முடிந்தது. மேலும், ஒற்றுமை பயணத்தின் போது என்னிடம் பேசிய பலர் நாட்டின் பணவீக்கம் குறித்தும், வேலையின்மை குறித்து பேசினர். அக்னி வீர் திட்டம் இந்திய ராணுவத்தை பலவீனப்படுத்தும் திட்டம் என மக்கள் அஞ்சுகின்றனர். அதானி இத்தனை சொத்துக்களை சேர்க்க யார் உதவியது? ஒரு சில ஆண்டுகளிலேயே அதானி சொத்து மதிப்பு மளமளவென உயர்ந்தது எப்படி? விமான நிலையங்களை அமைக்கும் திட்டங்களை ஏன் அதானியிடம் மத்திய அரசு திணித்து கொடுக்கிறது எனவும் ராகுல் காந்தி கேள்வியெழுப்பினார்.
இந்நிலையில் இன்றைய தினம் நாடாளுமன்றம் எவ்வித இடையூறுமின்றி நடைபெறும் என அரசு தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.
அதானி, பிரதமரின் நண்பர் இல்லையெனில், விசாரணைக்கு உத்தரவிடவேண்டியதுதானே? - ராகுல் காந்தி
அதானி, பிரதமரின் நண்பர் இல்லையெனில், விசாரணைக்கு உத்தரவிடவேண்டியதுதானே? - ராகுல் காந்தி
பிரதமர் உரையை புறக்கணித்த எதிர்க்கட்சிகள்..!
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி உரையாற்றிக் கொண்டிருந்தபோது, எதிர்கட்சிகள் உறுப்பினர்கள், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.





















