Budget 2025: வாயை திறந்த நிதியமைச்சர்.. கூச்சலிட்டு வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சிகள்! பட்ஜெட் 2025
Budget 2025: எதிர்க்கட்சிகளின் கூச்சல்களுக்கு மத்தியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையை வாசித்துக்கொண்டிருந்தார்.

மத்திய பட்ஜெட் 2025-26 தாக்கல் செய்யப்பட்டப்போது பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்ததால் நாடாளுமன்றத்தில் பரபரப்பு ஏற்ப்பட்டது.
மத்திய பட்ஜெட் 2025-26:
மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்த பாஜக அரசின் இரண்டாவது பட்ஜெட் இன்று மக்களவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். 6 துறைகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது. வரி, ஆற்றல் துறை, நகர வளர்ச்சி, கனிமவளம், நிதித்துறை , ஒழுங்குமுறை சீர்திருத்தங்கள் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
ஆனால் பட்ஜெட் உரையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாசிக்க தொடங்கியவுடன் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுப்பட்டு கூச்சலிட தொடங்கினர்.
இதையும் படிங்க: Budget 2025 LIVE: ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு 20 கோடி ரூபாய் வரை கடனுக்கு மானியம் - நிர்மலா சீதாராமன்
எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு:
எதிர்க்கட்சிகளின் கூச்சல்களுக்கு மத்தியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025 பட்ஜெட் உரையை வாசித்துக்கொண்டிருந்தார். மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்வதற்கு முன்பு எதிர்க்கட்சித் தலைவர்கள் பிரதமர் நரேந்திர மோடி அரசுக்கு எதிராக தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர்.
மக்களவையில் முதன்மையாக சமாஜ்வாதி கட்சி எம்.பி.க்கள், கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
#WATCH | #UnionBudget2025 | MPs from the opposition parties walk out of Lok Sabha as Finance Minister Nirmala Sitharaman reads her budgetary speech
— ANI (@ANI) February 1, 2025
She began her budgetary speech amid protests by Samajwadi Party MPs including party chief Akhilesh Yadav
(Source - Sansad TV) pic.twitter.com/O0qcgw3BS4
ஏன் வெளிநடப்பு?
வெளிநடப்பு குறித்து சமாஜ்வாடி கட்சி தலைவரும், அக்கட்சியின் எம்.பி.யுமான அகிலேஷ் யாதவ் கூறுகையில், "...தற்போது பட்ஜெட்டை விட முக்கியமான விஷயம் ஒன்று உள்ளது - மகா கும்ப மேளாவில் உள்ளவர்கள் இன்னும் தங்கள் உறவினர்களை தேடி அலைகின்றனர். முதல்வர் பலமுறை அங்கு சென்றுள்ளார், . உள்துறை அமைச்சர் அங்கு சென்றார், துணை ஜனாதிபதி இன்று செல்கிறார், பிரதமரும் அங்கு செல்வார்.
#WATCH | Delhi | #BudgetSession | Samajwadi Party chief and the party's MP Akhilesh Yadav says, "...There is a more important thing than budget at the moment - people in Maha Kumbh are still looking and searching for their relatives. The CM has been there many times, the Union… pic.twitter.com/wunzc8vbUv
— ANI (@ANI) February 1, 2025
மகா கும்பத்தில் பலர் இறந்தனர், இறந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கையை அரசாங்கம் வழங்கத் தவறிவிட்டது. இந்துக்கள் தங்கள் உயிரை இழந்துள்ளனர். இந்த விவகாரத்தில் அரசு விழித்துக்கொள்ள வேண்டும் நான் முன்பு சொன்னேன்,இராணுவத்தை அங்கு பணிகளில் ஈடுப்படுத்தி இருக்க வேண்டும், துறவிகள் ஷாஹி (அம்ரித்) ஸ்னான் இல்லை என்று மறுப்பது இதுவே முதல் முறை. என்றார்






















