இன்று தனது 8-வது பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யும் அன்று, தான் அணிந்திருக்கும் புடவைகளால் இந்தியாவின் ஜவுளி பாரம்பரியத்தை எடுத்துக்காட்டுகிறார்.
2019-ல் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தபோது அணிந்திருந்த இளஞ்சிவப்பு நிற மங்களகிரி புடவை கைத்தறி நெசவாளர்களின் உழைப்பையும், பாரம்பரியத்தையும் பிரதிபலித்தது.
2020-ல் கொரோனா தொற்றிலிருந்து நாடு மீண்டு வந்துகொண்டிருந்தது. அந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்தபோது அவர் அணிந்திருந்த மஞ்சள் நிற புடவை பொருளாதார வளர்ச்சியை பிரதிபலித்தது.
2021 ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்தபோது சிவப்பு மற்றும் வெள்ளை நிறம் கலந்த போச்சம்பள்ளி புடவையை சீதாராமன் அணிந்திருந்தார். இந்த புடவை தயாரிக்கப்படும் தெலங்கானா மாநிலத்தின் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் குறிக்கிறது.
2022-ல் பட்ஜெட் தாக்கல் செய்தபோது பழுப்பு நிற புடவையை அணிந்திருந்தார். அந்த புடவை அவரின் தலைமைப் பண்புகளைப் பிரதிபலித்தது.
2023-ல் கருப்பு பார்டர் வைத்த சிவப்பு நிற புடவையை அணிந்திருந்தார். சீதாராமன் தேர்ந்தெடுத்த அந்த புடவை இந்திய ஜவுளி பாரம்பரியத்தின் பன்முகத்தன்மையையும் நுணுக்கத்தையும் வெளிப்படுத்தியது.
2024-ன் இடைக்கால மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு நீல நிற தசார் பட்டுப் புடவையை அணிந்திருந்தார். கலாச்சார தோற்றத்திற்கான சிறந்த தேர்வாக அந்தப் புடவை காணப்பட்டது.
2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு, புதிய தொடக்கங்கள் மற்றும் தூய்மையைக் குறிக்கும் வெள்ளை நிறப் புடவையை அணிந்திருந்தார்.
இந்த ஆண்டு தனது 8வது பட்ஜெட்டை தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் வெள்ளை நிற மதுபானி சேலையை அணிந்துள்ளார். இது பத்ம விருது பெற்ற துலாரி தேவியின் திறனை வெளிப்படுத்துகிறது.