Budget 2024 Top 10 Announcements: இன்றைய இடைக்கால பட்ஜெட் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் டாப் 10 அறிவிப்புகள்..!
Budget 2024 Highlights in Tamil: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் இடம்பெற்ற பல முக்கிய அம்சங்களில், மிக முக்கியமான டாட் 10 அறிவிப்புகளைத் தற்போது பார்ப்போம்.
Budget 2024 Highlights: நாடாளுமன்றத்தில் 6-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வளர்ச்சி பாய்ச்சலில் இந்தியா வீறு நடைபோட்டு வருவதாக புள்ளி விவரங்கள், தமது பேச்சின் போது தெரிவித்தார். மேலும், அடுத்த ஐந்து ஆண்டுகளில், இந்தியாவின் வளர்ச்சிப் பயணம் எதிர்பாராத வகையில் இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். அதேபோல், புதிய வரிகள் ஏதும் விதிக்கப்படவில்லை. அதேபோல், எந்த வரிகுறைப்பும் ஏதும் இல்லாத பட்ஜெட் உரையாக இருந்தது. இந்த பட்ஜெட்டில் இடம்பெற்ற பல முக்கிய அம்சங்களில், மிக முக்கியமான டாட் 10 அறிவிப்புகளைத் தற்போது பார்ப்போம்.
1. வருமான வரியில் எந்த மாற்றமும் இல்லை. கடந்த ஆண்டு நடைமுறையே தொடரும்.
2. நேரடி வரிவதிப்பு மற்றும் மறைமுக வரி விதிப்பில் எந்த மாற்றமும் இல்லை. எனவே, எந்தப் பொருளுக்கும் விலை உயர்வும் இல்லை. விலை குறைப்பும் இல்லை.
3. மாநில அளவிலான சுற்றுலாத் துறை முன்னேற்றத்திற்கு வட்டி இல்லா கடன் வழங்கப்படும்.
4. உதான் திட்டத்தின் கீழ் மேலு் 517 புதிய விமான வழித்தடங்கள் உருவாக்கப்படும்.
5. 40 ஆயிரம் சாதாரண ரயில் பெட்டிகள், வந்தே பாரத் ரயில் பெட்டிகளாக மாற்றப்படும்.
6. ஆயுஷ்மான் பாரத் சுகாதாரத்திட்டத்தின் பயனாளிகள் பட்டியலில் அனைத்து அங்கன்வாடி மற்றும் ஆஷா திட்ட ஊழியர்கள் சேர்ப்பு.
7. பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், நடுத்தர வர்க்கத்தினருக்காக மேலும் 2 கோடி வீடுகள் கட்டப்படும்.
8. புதிய சூரியஒளி திட்டத்தின் கீழ், 1 கோடி வீடுகளுக்கு 300 யூனிட் மின்சாரம் இலவசம்.
9. கிழக்கு பகுதியை, இந்திய வளர்ச்சியின் பயணத்தில், டிரைவராக இருக்கும் வகையில் முன்னுரிமை கொடுக்க திட்டம்.
10. அடுத்த 5 ஆண்டுகளில் எதிர்பாராத முன்னேற்றத்தை நோக்கி இந்தியா பயணிக்கும்.
இது இடைக்கால பட்ஜெட்டாக என்றாலும், தேர்தல் வர இருப்பதால், பலராலும் சலுகைகள் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பெரிய கவர்ச்சித் திட்டங்கள் ஏதுமில்லா பட்ஜெட்டாக முதல் பார்வையில் இந்தப் பட்ஜெட் இருந்தது என்றால் மிகையில்லை.