மேலும் அறிய
Advertisement
Budget 2024 Highlights: மாநிலங்களுக்கு வட்டியில்லா கடன் முதல் 2 கோடி வீடுகள் வரை - பட்ஜெட் 2024ன் முக்கிய அம்சங்கள்!
Budget 2024 Highlights in Tamil: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த முக்கிய அறிவிப்புகள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Budget 2024 Highlights: இந்தியா முழுவதும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று புதிய நாடாளுமன்றத்தில் காலை 11 மணிக்கு தாக்கல் செய்தார். இந்தநிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த முக்கிய அறிவிப்புகள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
விவரங்கள் பின்வருமாறு:
- கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுக்கும் வகையில் 9 முதல் 14 வயதுடைய சிறுமிகளுக்கு தடுப்பூசி போடும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
- மாநிலங்களுக்கு வட்டியில்லா கடனாக ரூ.1.3 லட்சம் கோடி வழங்கப்படும்.
- ஒரு கோடி வீடுகளுக்கு சோலார் மின் வசதி ஏற்படுத்தி தரப்படும்.
- வீட்டின் மொட்டை மாடியில் சோலார் அமைத்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசம்.
- அங்கன்வாடி பண்யாளர், உதவியாளர்களுக்கு ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்.
- சுற்றுலாத்துறையில் ஆன்மீக சுற்றுலாவுக்கு பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்.
- விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
- பால் உற்பத்தியை அதிகரிக்க திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
- தொழில் தொடங்க வட்டியில்லா கடன் வழங்குவதற்காக ரூ. 1 லட்சம் கோடியில் புதிய நிதியம் அமைக்கப்படும்.
- பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளுக்கு கிராமப்புறங்களில் 2 கோடி வீடுகள் புதிதாக கட்டித்தரப்படும்.
- 40,000 சாதாரண ரயில் பெட்டிகள் வந்தே பாரத் ரயில் பெட்டிகளாக தரம் உயர்த்தப்படும்.
- உள்நாட்டு சுற்றுலா மேம்படுத்தவும், வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் முன்னுரிமை அளிக்கப்படும்.
- துறைமுகங்கள் மற்றும் தொழிற்சாலைகளை இணைக்கும் வகையில் 3 முக்கிய ரயில்வே பெரு வழித்தடங்கள் அமைக்கப்படும்.
- பெருநகரங்களில் மெட்ரோ ரயில் சேவையை விரிவுப்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும்.
- உதான் திட்டத்தின் கீழ் புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்.
- புதிய சாலை, ரயில் துறைமுகங்களுக்கான வழித்தடங்கள் ஏற்படுத்தப்படும்.
- 3 கோடி பெண் லட்சாதிபதிகளை உருவாக்க மத்திய அரசு இலக்கு
- நேரடி மற்றும் மறைமுக வரி விதிப்பில் எந்த மாற்றமும் இல்லை. பழைய நிலையே தொடரும்.
- ஏற்கனவே உள்ள மருத்துவமனைகளில் புதிதாக மருத்துவக்கல்லூரிகள் அமைக்கப்படும்.
என பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டது.
சமீபத்திய வர்த்தக செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் வணிக செய்திகளைத் (Tamil Business News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
திருவண்ணாமலை
தமிழ்நாடு
ஆட்டோ
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion