Bank Holidays November: நவம்பர் மாதத்தில் எத்தனை நாள் வங்கி விடுமுறை தெரியுமா?
நவம்பர் மாதத்தில் நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு 17 நாட்கள் விடுமுறை தினங்கள் ஆகும். இது மாநிலங்களுக்கு மாநிலங்களுக்கு மாறுபடும்.
நாடு முழுவதும் உள்ள பல்வேறு வங்கிககளுக்கும் சேர்த்து நடப்பு நவம்பர் மாதத்தில் 17 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளது. இருப்பினும் இந்த விடுமுறை மாநிலங்களுக்கு ஏற்ப மாறுபடும். அந்தந்த பண்டிகைகளை கொண்டாடும் மாநிலங்களில் உள்ள வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட உள்ளது.
இதன்படி, நவம்பர் 1-ந் தேதியான இன்று கன்னட ராஜ்யோஸ்த்சவா பண்டிகையையும், குட் பண்டிகையும் கொண்டாடும் கர்நாடகம் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களில் உள்ள வங்கிகள் செயல்படாது. கர்நாடக மாநிலத்தில் நாளை மறுநாள் நரகா சதுர்தஷி பண்டிகை என்பதால் அன்றைய தினமும் வங்கிகள் செயல்படாது.
வரும் 4-ந் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ளது. தமிழ்நாட்டில் தீபாவளி என்று கொண்டாடப்படும் இந்த பண்டிகை பிற மாநிலங்களில் தீபாவளி அமாவசை எனப்படும் லஷ்மி பூஜை, காளி பூஜா என்ற பெயரிலும் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளிலும் அன்றைய தினம் விடுமுறை ஆகும்.
அன்றைய தினத்தில் பஞ்சாப், குஜராத், மிசோரம், மகாராஷ்ட்ரா, மத்திய பிரதேசம், ஒடிசா, அசாம், ஆந்திரா, கேரளா, மேற்குவங்காளம், டெல்லி, கோவா, பீகார், ஜம்மு-காஷ்மீர். உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், மேகலாயா, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் உள்ள வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட உள்ளது. தீபாவளி தினத்தன்று நாட்டில் உள்ள பெரும்பான்மையான வங்கிகளுக்கு விடுமுறை ஆகும்.
தீபாவளிக்கு மறுதினமான நவம்பர் 5-ந் தேதி தீபாவளி ( பாலி பிரதிபடா), கோவர்த்தன பூஜா என்ற பெயரில் சில மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. இதனால், கர்நாடக, சிக்கிம், ராஜஸ்தான், மகாராஷ்ட்ரா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் உள்ள வங்கிகளுக்க விடுமுறை ஆகும்.
நவம்பர் 10-ந் தேதி சாத்பூஜா, சூர்யபஷ்தி தலாசாத் என்ற பண்டிகை பீகார் மற்றும் உத்தரகாண்டில் கொண்டாடப்பட உள்ளதால் அந்த மாநிலங்களில் உள்ள வங்கிகளுக்கு அன்றைய தினம் விடுமுறை ஆகும். நவம்பர் 11 பீகாரில் சாத்பூஜாவும், நவம்பர் 12-ந் தேதி மேகலாயாவில் வங்காளா திருவிழாவும் கொண்டாடப்பட உள்ளதால் அன்றைய தினம் அந்த மாநிலங்களுக்கு வங்கிகள் விடுமுறை ஆகும்.
நவம்பர் 19-ந் தேதி கார்த்திகா பூர்ணிமா, குருநானக் ஜெயந்தி கொண்டாடப்பட உள்ளதால் மத்திய பிரதேசம், சண்டிகர்,ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர், உத்தரபிரதேசம், மேற்குவங்காளம், பீகார், மகாராஷ்ட்ரா, டெல்லி, இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை ஆகும். நவம்பர் 22-ந் தேதி கனகதாச ஜெயந்தி கர்நாடகாவிலும், நவம்பர் 23-ந் தேதி மேகலாயவில் செங்க் குட்ஸ்னமும் என்பதால் அன்றைய தினம் அந்த மாநிலங்களில் வங்கி விடுமுறை ஆகும்.
இதுதவிர, வரும் 7, 14, 21 மற்றும் 28 ஆகிய தேதிகளில் ஞாயிறு என்பதாலும், 13 மற்றும் 28 இரண்டாவது, நான்காவது சனிக்கிழமை என்பதாலும் வங்கி விடுமுறை ஆகும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்