Stock Markets: இந்திய பங்குச் சந்தையின் கருப்பு நாள்? சென்செக்ஸ் 2,700, நிஃப்டி 850 புள்ளிகள் சரிவு, கதறும் ஆசிய முதலீட்டாளர்கள்
Stock Markets: இந்திய பங்குச் சந்தையின் கருப்பு தினமாக இன்று மாறக்கூடும் என முதலீட்டாளர்கள் கலக்கத்தில் உள்ளன.

Stock Markets: இந்திய பங்குச் சந்தை இன்று காலை தொடங்கியது முதலே கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
பங்குச் சந்தைகள் கடும் சரிவு:
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கைகளால், முதலீட்டாளர்கள் பங்குச் சந்தைகளில் இருந்து விலகி பாதுகாப்பான சொத்துக்களில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். இது நீடித்த வர்த்தகப் போரின் அச்சங்களைத் தூண்டி, புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மையை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இந்திய பங்குச்ச ந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50, இன்று கடுமையாக சரிவுடன் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே, இன்று காலை சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் தலா 3 சதவீதம் சரிவைக் கண்டன. இந்த அளவிலான சரிவு கடைசியாக 10 மாதங்களுக்கு முன்பு ஜூன் 7, 2024 அன்று பதிவானது குறிப்பிடத்தக்கது.
2,700 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்:
தேசிய பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 10 மணி நிலவரப்படி, 2 ஆயிரத்து 7800 புள்ளிகள் சரிந்து 72 ஆயிரத்து 509 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. அதேநேரம், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி புள்ளிகள் சுமார் 930 புள்ளிகள் சரிந்து 21 ஆயிரத்து 975 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. ஆட்டோமொபைல் துறை, மருத்துவத்துறை மற்றும் ஐடி துறைகள் கடும் சரிவை சந்தித்துள்ளன.
சரிவில் ஆசிய பங்குச் சந்தை:
திங்களன்று ஆசிய சந்தைகள் தொடங்கியது முதலே சரிவைச் சரிந்தன. ஜப்பான் பங்குச்சந்தை குறியீட்டெண் 6.5 சதவீதம் சரிந்தது. எதிர்பார்த்ததை விட கடுமையான வரிகளைத் தொடர்ந்து அமெரிக்காவில் மந்தநிலை கவலைகள் தீவிரமடைந்தன. சீனாவில், CSI 300 ப்ளூ-சிப் குறியீடு 4.5 சதவீதம் சரிந்தது, அதே நேரத்தில் ஹாங்காங்கின் ஹேங் செங் குறியீடு ஆரம்ப வர்த்தகத்தில் 8 சதவீதம் சரிந்தது. தென் கொரியாவின் கோஸ்பி 4 சதவீதத்திற்கும் அதிகமாகவும், கோஸ்டாக் 3 சதவீதத்திற்கும் அதிகமாகவும் சரிந்தது. சிங்கப்பூரின் பெஞ்ச்மார்க் குறியீடு 7 சதவீதம் சரிந்து, மார்ச் 2020க்குப் பிறகு அதன் மோசமான ஒருநாள் சரிவை பதிவை செய்துள்ளளது. மலேசிய பங்குச் சந்தைகள் 4 சதவீதத்திற்கும் மேலாக சரிந்து 16 மாதக் குறைந்த அளவை எட்டின,. தைவானின் சந்தை அதன் முதல் வர்த்தக அமர்வில் கிட்டத்தட்ட 10 சதவீதம் சரிந்தது.
உலகளாவிய சந்தைகள் சரிவு
இதனிடையே வரியை விதித்த அமெரிக்காவும் கடும் இழப்புகளை சந்தித்துள்ளது. அதன்படி, நாஸ்டாக் ஃபியூச்சர்கள் 4.0 சதவீதம் சரிந்தன, இது கடந்த வாரத்தின் கிட்டத்தட்ட 6 டிரில்லியன் அமெரிக்க டாலர் சந்தை இழப்புகளைக் கூட்டியது. இந்த தாக்கம் ஐரோப்பாவிற்கும் நீட்டிக்கப்பட்டது. EURO STOXX 50 ஃபியூட்சர்ஸ் 3.0 சதவீதம் சரிந்தன, FTSE ஃபியூட்சர்ஸ் 2.7 சதவீதம் சரிந்தன மற்றும் DAX ஃபியூட்சர்ஸ் 3.5 சதவீதம் சரிந்தன. உலகளவில் மந்தமான வளர்ச்சிக் கண்ணோட்டம் எண்ணெய் விலையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 1.35 அமெரிக்க டாலர்கள் குறைந்து 64.23 டாலராகவும், யுஎஸ் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் பீப்பாய்க்கு 1.40 டாலர்கள் குறைந்து 60.60 டாலராகவும் உள்ளது.





















