150 நாட்களில் 150க்கும் அதிகமான ரோபோட்டிக் அறுவை சிகிச்சைகள்.. அப்போலோ ஓ.எம்.ஆர் மருத்துவமனை புது சாதனை
அப்போலோ ஓம்ஆர் மருத்துவமனையில் 150 நாட்களில் 150க்கும் அதிகமான மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள் செய்து சாதனை படைத்துள்ளனர்.

இந்தியாவில் உள்ள பிரபலமான தனியார் மருத்துவமனைகளில் ஒன்று அப்பல்லோ மருத்துவமனை. சென்னை, பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள அப்போலோ ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல்ஸ், ஓ.எம்.ஆர். 150 நாட்களில் 150க்கும் மேற்பட்ட ரோபோட்டிக் முழு முழங்கால் மாற்று அறுவை சிகிச்சைகளை ( டோட்டல் நீ ரீப்ளேஸ்மென்ட்) வெற்றிகரமாக செய்துள்ளது.
ரோபோட்டிக் சிகிச்சை:
அறுவை சிகிச்சைகளில் துல்லியம் மற்றும் மருத்துவ பயனாளர் குணம் அடைவதில் புதிய தரநிலைகளை நிர்ணயித்து வருவதன் மூலம், தென்னிந்தியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் ரோபோட்டிக் டி.கே.ஆர் மையங்களில் ஒன்றாக அப்போலோ ஓ.எம்.ஆர் முன்னணி வகிக்கிறது.
இந்த அறுவை சிகிச்சைகளில் அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட மருத்துவ தொழில்நுட்ப நிறுவனமான ஸ்டிரைக்கரின் தயாரிப்பான அதிநவீன மேக்கோ ஸ்மார்ட் ரோபோட்டிக் ரோபோடிக் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அறுவை சிகிச்சை:
மிகவும் சிக்கலான முழங்கால் பிரச்சினைகள் உள்ள நோயாளிகளுக்கு, இந்த புதிய அடுத்த தொழில்நுட்பம் பெரும் பலன்களை அளித்து வருகிறது. மேலும், பாரம்பரிய முழங்கால் மாற்று அறுவை சிகிச்சையை விட குறைந்தளவு ஊடுருவுதலுடனும், பாதுகாப்பான மாற்று வழியாகவும் உள்ளது.
பாரம்பரிய முறையில் முழங்கால் முழுவதையும் மாற்றும் அறுவை சிகிச்சை என்பது மூட்டு சேதம் அல்லது முற்றிய வாத நோயான ஆர்த்ரிட்டீஸ் உள்ள நோயாளிகளுக்கு முழங்கால் வலிைப் போக்கவும், மூட்டு செயல்பாட்டை மீட்டெடுக்கவும் செய்யப்படும் ஒரு அறுவை சிகிச்சை.
பாரம்பரிய முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை என்பது மருத்துவர்கள் அவர்களாகவே முழங்கால் அமைப்பை ஒழுங்குபடுத்தி, இம்ப்ளான்ட் எனப்படும் செயற்கை உள்வைப்புகளை வைக்கும் மருத்துவ நடைமுறையாகும். முழங்காலின் சேதம் அடைந்த பகுதிகள் செயற்கை உருவ வடிவமைப்புகளால் மாற்றப்படுகின்றன. இதனால், மருத்துவ பயனாளர்களுக்கு மூட்டு பகுதியை நீட்டுவதற்கும், மடக்குவதற்கம், நடப்பதற்கும் வாய்ப்பு அளிப்பதோடு அவர்களது வாழ்க்கைத் தரம் மேம்படுகிறது.
அதிகரிக்கும் ஆயுட்காலம்:
இதற்கு நேர் எதிராக ரோபோட்டிக் முறையில் மேற்கொள்ளப்படும் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை, 3டி இமேஜிங் மற்றும் கணினி வழிநடத்தும் கருவிகளைப் பயன்படுத்தி முழங்கால் மாற்று அறுவை சிகிச்சையை மிகத் துல்லியமாக திட்டமிட்டு செயல்படுத்த உதவுகிறது. இதன்மூலம், அந்தந்த மருத்துவ பயனாளரின் உடலமைப்பிற்கு ஏற்ற வகையில் துல்லியமாக திட்டமிட்டு அறுவை சிகிச்சையை மேற்கொள்ள முடிவதால் திசு சேதமடைவது குறைக்கப்படுகிறது. ரத்த இழப்பும் குறைகிறது. முழங்காலில் வைக்கப்படும் இம்ப்ளான்டின் ஆயுட்காலமும் அதிகரிக்கிறது.
மூத்த ஆலோசகர் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் - டாக்டர் வெங்கடரமணன் சுவாமிநாதன், டாக்டர் தாமோதரன் பிஆர், டாக்டர் செந்தில் கமலசேகரன், டாக்டர் மதன் திருவேங்கடா ஆகியோருடன் அவர்களது குழுவினரும் சேர்ந்து இந்த மைல்கல் சாதனையை படைத்திருக்கிறார்கள்.
மூட்டு சிகிச்சையில் முன்னேற்றம்:
ரோபோட்டிக் அறுவை சிகிச்சைகளுக்குப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் குறித்து அப்போலோ ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல்ஸ் ஓ.எம்.ஆர்.ன் மூத்த ஆலோசகர் மற்றும் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வெங்கடரமணன் சுவாமிநாதன் கூறுகையில், ரோபோடிக் தொழில்நுட்ப உதவியுடன் செய்யப்படும் முழங்கால் முழுவதையும் மாற்றும் அறுவை சிகிச்சை என்பது ஒரு தொழில்நுட்ப மேம்பாடு மட்டுமல்ல.
எலும்பியல் பராமரிப்பில் மூட்டு சிகிச்சையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் முன்னேற்றமாகும். வழக்கமான பாரம்பரிய முறையிலான அறுவை சிகிச்சை நோயாளிகளுக்கு சிக்கலான ஒன்றாக கருதப்படும் சூழல்களில் கூட, அவர்களுக்கு ரோபோட்டிக் தொழில்நுட்ப உதவியுடனான இந்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை எளிதில் செய்ய முடியும்.
முதியோர்களில் எண்ணிக்கை அதிகரிக்கும் சூழலில், இந்த நவீன தொழில்நுட்பம் வலியைக் குறைப்பதோடு மிக விரைவாக மீண்டு வர உதவுவதோடு, முழங்காலின் இதயத்தை மேம்படுத்துகிறது. மேலும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்த உதவுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
150 ரோபோட்டிக் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை:
இந்த நிகழ்ச்சியில் பேசிய அப்போலோ மருத்துவமனையில் சென்னை மண்டல தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் இளங்குமரன் கலியமூர்த்தி, 150 நாட்களில் 150 ரோபோட்டிக் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து முடிப்பது என்பது மருத்துவ துறையில் ஒரு மைல்கல் சாதனை. மேலும், இது புதுமையான மருத்துவ சிகிச்சைகளுக்கான வாய்ப்புகளை கிடைக்கச் செய்வதிலும், மருத்துவ பயனாளர்களுக்கே முன்னுரிமை வழங்குவதிலும் அப்போலோ கொண்டிருக்கும்.
எங்களது உறுதிப்பாட்டின் பிரதிபலிப்பாகவும் அமைந்திருக்கிறது. அப்போலோ ஓஎம்ஆர் மருத்துவமனையில் மருத்துவ பயனாளர்களுக்கு மிகத் துல்லியமான பராமரிப்பை வழங்கவும், அவர்களது எதிர்ப்புகளை பூர்த்தி செய்யவும் ரோபோட்டிக் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை போன்ற அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களை ஒருங்கிணைப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
மருத்துவ நிபுணத்துவத்தை புதுமையுடன் இணைப்பதன் மூலம் நாங்கள் தொடர்ந்து முன்னேற இலக்கை கொண்டிருக்கிறோம். இதன் விளைவாக எங்கள் மருத்துவ பயனாளர்களின் வாழ்க்கைத் தரத்தை சிறப்பானதாக மாற்றுவோம். இவ்வாறு அவர் பேசினார்.
2 மணி நேரத்திற்கும் குறைவு:
பாரம்பரிய அறுவை சிகிச்சையில் மருத்துவ பயனாளர் 2 முதல் 4 நாட்களில் நடக்கத் தொடங்குவார். அவர் முழுமையாக மீண்டு இயல்பு நிலைக்கு வர 6 முதல் 8 வாரங்கள் ஆகும். ஆனால், ரோபோட்டிக் உதவியுடன் செய்யப்படு் அறுவை சிகிச்சையில் நோயாளி அறுவை சிகிச்சை நடந்த 24 மணி நேரத்திற்குள் நடக்கத் தொடங்க முடியும்.
குறைந்த வலி அல்லது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய வலி இல்லாமலும் கூட, 4 வாரங்களுக்குள் அன்றாட செயல்களில் ஈடுபட முடியும். பாரம்பரி முறையில் அறுவை சிகிச்சைக்கு 3 மணி நேரம் தேவைப்படும். ஆனால், ரோபோட்டிக் டிகேஆர் அறுவை சிகிச்சை 2 மணி நேரத்திற்கும் குறைவாகவே எடுக்கும்.
1983ல் டாக்டர் பிரதாப் சி ரெட்டி சென்னையில் முதல் அப்போலோ மருத்துவமனையைத் தொடங்கியதன் மூலம், இந்திய மருத்துவ உலகில் அப்போலோ ஒரு மிகப்பெரிய மருத்துவ புரட்சியை ஏற்படுத்தியது.
அப்போலோ:
இன்று இந்தியாவின் மிகவும் நம்பகமான ஒருங்கிணைந்த மருத்துவ நல குழுமமாக திகழும் அப்போலோ மருத்துவமனைகள், 10 ஆயிரத்து 400க்கும் அதிகமான படுக்கை வசதிகளுடன், 74 மருத்துவமனைகள், 6 ஆயிரத்து 600க்கும் அதிகமான மருந்தகங்கள், 264-க்கும் அதிகமான கிளினிக்குகள் மற்றும் 2,182க்கும் அதிகமான டயக்னோஸ்டிக் மையங்கள், 800க்கும் அதிகமான டெலி மெடிசின் மையங்கள் என இந்தியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த மருத்துவ சேவை வழங்கும் நிறுவனமாக அப்போலோ முன்னணியில் உள்ளது.
3 லட்சத்திற்கும் அதிகமான அஞ்சியோப்ளாஸ்ட்களும், 2 லட்சத்திற்கும் அதிகமான இதய அறுவைச் சிகிச்சைகளையும் செய்திருப்பதன் மூலம் உலகின் முன்னணி இதய நோய் சிகிச்சை மையமாக முக்கியத்துவம் பெற்றிருப்பதோடு, புற்றுநோய் சிகிச்சையில் உலகின் மிகப்பெரிய தனியார் மருத்துவமனையாகவும் திகழ்கிறது.
நவீன கால தொழில்நுட்பங்கள், மருத்துவ கருவிகள், சிகிச்சை நடைமுறைகளின் மூலம் உலகத்திலேயே சிறந்த ஆரோக்கிய சேவையை நோயாளிகள் பெறும் வண்ணம் அப்போலோ ஆராய்ச்சிகளில் தொடர்ந்து பெரும் முதலீடு செய்து வருகிறது. அப்போலோ மருத்துவமனைகள் குழுமத்தின் 1 லட்சத்து 20 ஆயிரம் உறுப்பினர்கள் நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சைகளைத் தந்து வருகின்றனர்.





















