இனி உங்கள் செல்லப் பிராணிகளும் பிளேனில் பயணம் செய்யலாம்.. எப்படித் தெரியுமா?
செல்லப்பிராணிகளை உள்ளே அனுமதிப்பதன் மூலம், ஆகாசா ஏர் , ஏர் இந்தியா, ஜெட் ஏர்வேஸ், ஸ்பைஸ்ஜெட் மற்றும் விஸ்தாரா போன்ற பல விமான நிறுவனங்களின் குழுவில் இணைகிறது
நவம்பர் 1, 2022 முதல் நாய்கள் மற்றும் பூனைகள் உள்ளிட்ட செல்லப்பிராணிகளை ஆகாசா ஏர் தனது விமானங்களில் அனுமதிக்கும். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.இதுநாள் வரை விமானங்களில் அல்லாமல் கார்கோக்களில்தான் செல்லப்பிராணிகள் பயணம் செய்து வந்தன.
கேபினில் பயணம் செய்யும் செல்லப்பிராணிகளுக்கான முன்பதிவு மற்றும் விமானங்களில் அதற்கு தேவையான சரக்குகள் அனுமதிக்கு அக்டோபர் 15 முதல் தொடங்கும். மறைந்த ராகேஷ் ஜுன்ஜுன்வாலா ஆதரவு விமான நிறுவனமான ஆகாசா செய்தியாளர் கூட்டத்தில் இதுதொடர்பாகப் பேசுகையில் இதற்கான ஒவ்வொரு விமானமும் 15 நாட்களுக்கு ஒருமுறை இயக்கப்படும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
"அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய (Inclusive Transport) பயண அனுபவத்தை உருவாக்குவதற்கான எங்கள் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக நாங்கள் இப்போது ஆகாசா விமானங்களில் உங்க செல்லப்பிராணிகளை அனுமதிக்கிறோம்" என்று ஆகாசா ஏர் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சிஎம்ஓ பெல்சன் குடின்ஹோ கூறினார்.
செல்லப்பிராணிகளை உள்ளே அனுமதிப்பதன் மூலம், ஆகாசா ஏர் , ஏர் இந்தியா, ஜெட் ஏர்வேஸ், ஸ்பைஸ்ஜெட் மற்றும் விஸ்தாரா போன்ற பல விமான நிறுவனங்களின் குழுவில் இணைகிறது. இண்டிகோ மற்றும் ஏர் ஏசியா ஆகிய இரண்டு உள்நாட்டு விமான ஆபரேட்டர்கள் செல்லப்பிராணிகளை சேவை செய்யும் (Service pets)விலங்குகளாக இல்லாவிட்டால் விமானத்தில் அனுமதிப்பதில்லை என்பது கவனிக்கத்தக்கது. ஆகஸ்ட் 7 அன்று அதன் செயல்பாடுகளைத் தொடங்கிய பின்னர் இந்த அறிவிப்பு தற்போது வெளியாகியிருக்கிறது. இது ராகேஷ் ஜுன்ஜுன்வாலா மற்றும் வினய் துபே ஆகியோரால் நிறுவப்பட்டது. இந்த நிறுவனம் அகமதாபாத், புது தில்லி, சென்னை, பெங்களூரு மற்றும் கொச்சி போன்ற பல நகரங்களில் விமானங்களை இயக்குகிறது" என்கின்றனர் குழுவினர்.
செய்தியாளர் சந்திப்பின்போது, ”ஆகாசா ஏர் சிஇஓ வினய் துபே, விமான நிறுவனம் நல்ல மூலதனம் பெற்றுள்ளதாகவும், புதிய முதலீட்டாளர்கள் யாரையும் தற்போது எதிர்பார்க்கவில்லை என்றும் கூறினார். 60 நாட்களில் விமான சேவையின் செயல்பாடு திருப்திகரமாக இருப்பதாக” துபே கூறினார்.
View this post on Instagram
"எங்கள் செயல்திறனில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், திருப்தியுடன் இருக்கிறோம்," என்று அவர் கூறினார். தற்போது, ஆறு விமானங்களைக் கொண்ட செல்லப்பிராணிகளுக்கான விமானங்களின் எண்ணிக்கை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 18ஐத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக ஆகாசா தனது விமானிகளுக்கு ஸ்பைஸ் ஜெட் விமானிகளைவிட அதிகம் சம்பளம் தருவதாக செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.