Hurun Rich List : ஹுரூன் குளோபல் ரிச் லிஸ்ட் 2022 : டாப் 10 பணக்கார பட்டியலில் இடம்பிடித்தார் முகேஷ் அம்பானி
சீன பத்திரிகையான ஹுருன் ஆண்டுதோறும் உலகப் பணக்காரர்கள் பட்டியலை வெளியிடும். அதன்படி, ஹுரூன் குளோபல் ரிச் லிஸ்ட் 2022 அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில் டாப் 10ல் இடம்பெற்ற ஒரே இந்தியர் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளார் முகேஷ் அம்பானி.
![Hurun Rich List : ஹுரூன் குளோபல் ரிச் லிஸ்ட் 2022 : டாப் 10 பணக்கார பட்டியலில் இடம்பிடித்தார் முகேஷ் அம்பானி 2022 Hurun global rich list: Mukesh Ambani only Indian in top 10 list Hurun Rich List : ஹுரூன் குளோபல் ரிச் லிஸ்ட் 2022 : டாப் 10 பணக்கார பட்டியலில் இடம்பிடித்தார் முகேஷ் அம்பானி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/16/1f727c045294fec0822958deb353eca6_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சீன பத்திரிகையான ஹுருன் ஆண்டுதோறும் உலகப் பணக்காரர்கள் பட்டியலை வெளியிடும். அதன்படி, ஹுரூன் குளோபல் ரிச் லிஸ்ட் 2022 அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில் டாப் 10ல் இடம்பெற்ற ஒரே இந்தியர் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளார் முகேஷ் அம்பானி. இந்த அறிக்கையை ஹுருன் பத்திரிகையுடன் இணைந்து M3M என்ற ரியல் எஸ்டே குரூப் செய்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரும், ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவருமாக இருப்பவர் முகேஷ் அம்பானி. இவர் இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்துவருகிறார்.
2020ஆம் ஆண்டின்படி அவருக்கு 104.7 பில்லியன் சொத்து மதிப்பு எனவும், கடந்த 2021 ஆம் ஆண்டு அவரது சொத்து மதிப்பு 21.4 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் ஹுரூன் குளோபல் ரிச் லிஸ்ட் 2022 அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில் டாப் 10ல் இடம்பெற்ற ஒரே இந்தியர் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளார் முகேஷ் அம்பானி. அவர் 9வது இடத்தைப் பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு 103 பில்லியன் டாலர் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள பில்லினர்களில் முகேஷ் அம்பானி முதலிடத்தில் இருக்கிறார். இரண்டாவது இடத்தில் $81 பில்லியன் சொத்து மதிப்புடன் அதானி இருக்கிறார். ஷிவ் நாடார் குடும்பத்தினர் $28 டாலர் சொத்து மதிப்புடன் மூன்றாம் இடத்தில் இருக்கின்றனர். $26 பில்லியன் சொத்து மதிப்புடன் சைரஸ் பூனாவாலா 4வது இடத்திலும், $25 பில்லியன் சொத்து மதிப்புடன் லக்ஷ்மி மிட்டல் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.
அடுத்தடுத்த இடங்களில் ஆர்.கே.டாமனி குடும்பம், எஸ்பி இந்துஜா குடும்பம், ஆதித்ய பிர்லா நிறுவனத்தின் குமார் மங்கலம் பிர்லா குடும்பம், திலீப் சங்வி குடும்பம் ஆகியோர் இந்திய பில்லினர்கள் பட்டியலில் டாப் 10 பட்டியலில் உள்ளனர்.
இந்தப் பட்டியலில் 10வது இடத்தில் இருக்கிறார் உதய் கோட்டக். இவர் கோட்டக் மஹிந்திரா வங்கியின் மேலாளர். இவர்தான் இந்தியாவின் பத்தாவது பில்லினர்.
உலகளவில் டாப் 3 பில்லினர் பட்டியலில் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், அமேசான் ஆன்லைன் விற்பனை தளத்தின் ஜெஃப் பெசோஸ், LVMH சிஇஓ பெர்னார்ட் அர்னால்ட் ஆகியோர் உள்ளனர். சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியாவின் தலைவர் சைரஸ் பூனாவாலா, டிமார்ட் நிறுவனர் ஆர்கே டாமனி, லக்ஷ்மி மிட்டல் ஆகியோர் புதிதாக உலகளவில் டாப் 100 பில்லினர் பட்டியலில் புதிதாக இணைந்துள்ள மூன்று இந்தியர்கள் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளனர்.
இது தவிர ஹுரூன் குளோபல் ரிச் லிஸ்ட் 2022 அறிக்கையின்படி நைக்கா நிறுவனர் ஃபல்குனி நாயர் நிகர சொத்து மதிப்பு 7.6 பில்லியன் அமெரிக்க டாலருடன் புதிதாக இந்தப் பட்டியலில் இணைந்துள்ளார்.
இந்தியாவில் ஏற்கெனவே 215 பில்லினர்கள் இருந்தனர். இந்தப் பட்டியலில் அண்மையில் புதிதாக 58 பில்லினர்கள் இணைந்தனர். இதனால் இந்தியா உலகளவில் அதிக பில்லினர்கள் கொண்ட பட்டியலில் தொடர்ந்து மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் 2022 நிலவரப்படி 249 பில்லினர்கள் உள்ளனர். மும்பையில் மட்டும் 72 பில்லினர்கள் உள்ளனர். டெல்லியில் 51 பில்லினர்கள், பெங்களூருவில் 28 பில்லினர்கள் உள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளில், இந்திய பில்லினர்கள் தங்களின் மொத்த சொத்தில் 700 பில்லியன் டாலர் சேர்த்துள்ளனர். இது ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக் குறியீடுக்கு நிகரானது. அதேபோல் யுஏஇ ஜிடிபியைவிட இரு மடங்கு அதிகம் என்று ஹுரூன் குளோபல் ரிச் லிஸ்ட் 2022 அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)