மேலும் அறிய

Yamaha R15M | வெளிவருகிறது Yamaha R15M! - என்னென்ன அம்சங்கள் தெரியுமா?

யமஹா நிறுவனத்தின் அடுத்த வெளியீட்டிற்காக அனைவரும் காத்துக் கொண்டிருக்கையில், தற்போது யமஹா R15M சாலைகளின் தென்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியாகியுள்ள யமஹா R15M பைக்கின் படங்கள் வைரலாகி வருகின்றன. 

யமஹா R15M முந்தைய மாடல்களில் இருந்து இன்னும் மேம்பட்டதாகவும், புதிய அம்சங்களோடு இருப்பதாக தெரிய வந்துள்ளது. ப்ளூ, சில்வர் ஆகிய இரண்டு வண்ணங்களில் இந்த மாடல் கிடைக்கும். யமஹா R15M பைக்கின் முக்கிய அம்சமாக, அதன் எக்ஸ்ஹாஸ்ட் பொருத்தப்பட்டிருக்கிறது. இதற்கு முன் வந்த மாடல்களிலும் சிறப்பான எக்ஸ்ஹாஸ்ட் இருந்த போதும், தற்போதைய மாடலின் எக்ஸ்ஹாஸ்ட் முந்தையவற்றை விட மேலும் சிறப்பாக இருக்கும். வழக்கமான dual-LED headlamp செட்டப்பில் இருந்து மாற்றம் செய்துள்ள யமஹா நிறுவனம், இதில்  single projector-type headlamp செட்டப்பைத் தேர்ந்தெடுள்ளது. மேலும், இந்த மாடலின் அழகைக் கூட்ட, அதன் இரு பக்கமும் LED DRL விளக்குகள் சேர்க்கப்பட்டுள்ளன. 

Yamaha R15M | வெளிவருகிறது Yamaha R15M! - என்னென்ன அம்சங்கள் தெரியுமா?

ரஷ்லேன் இணைய இதழில் வெளியாகியுள்ள தரவுகளின் படி, யமஹா R15M ஸ்டைல் அதிகமுள்ள பைக்காக இருக்கப் போவதாகக் கூறப்பட்டுள்ளது. இதில் ப்ளூடூத் வசதியுடன் கூடிய பேனல் பொருத்தப்பட்டுள்ளதோடு, அதில் USB வசதியும் சேர்க்கட்டுள்ளது. இந்த அம்சங்களால் இந்த பைக் முந்தைய மாடல்களில் இருந்து வித்தியாசப்படுவதோடு, பல்வேறு புதிய மாறுதல்களால் இன்னும் சிறப்பாகச் செயல்படும் எனத் தெரிகிறது. வாகனத்தின் ஸ்போர்ட்ஸ் லுக்கை மேம்படுத்த, அதன் ஃபோர்க்குகளின் வண்ணம் கோல்டன் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இந்தத் தரவுகள் தெரிவிக்கின்றன. கறுப்பு வண்ண அல்லாய் ரிம்களுடன் யமஹா R15M மிகச்சிறப்பான டிசைன்களைக் கொண்டிருக்கிறது. ஒப்பீட்டளவில் இது ஏற்கனவே வெளியான வெற்றிகரமான மாடலான யமஹா R7 பைக்கைப் போல டிசைன் செய்யப்பட்டுள்ளது. 

ரஷ்லேன் இதழின் இந்தத் தரவுகளின்படி, யமஹா R15M பைக், வழக்கம்போல 155cc சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்ட் எஞ்சினைப் பயன்படுத்தவுள்ளது. இந்த எஞ்சின் VVA டெக்னாலஜியின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. 6 கியர்களைக் கொண்டிருக்கும் இந்த வாகனத்தின் எஞ்சின் 18 bhp ஆற்றலைக் கொண்டது. தற்போதைய யமஹா R15 V3 மாடலை விட குறைவான ஆற்றலாக இருப்பதால், இது இந்த மாடலின் மைனஸாகக் கருதப்படுகிறது. எனினும் யமஹா R15M பைக்கின் டார்க் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இதன் விலை மற்றும் வேறு அம்சங்கள் பற்றி விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.   

Yamaha R15M | வெளிவருகிறது Yamaha R15M! - என்னென்ன அம்சங்கள் தெரியுமா?

கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு அதிகரித்திருக்கும் விலைகளின் காரணமாக, யமஹா R15M பைக் சுமார் 1.56 முதல் 1.58 லட்ச ரூபாய் வரை விலை நிர்ணியிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!

Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்

Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!

Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்

ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?

இந்தியர்களே! இனி இலங்கைக்கு போக விசா தேவையில்லை - இன்று முதல் அமல்

கபிலன் வைரமுத்து எழுதிய மாக்கியவெல்லி காப்பியத்தை வெளியிட்ட பாரதிராஜா..

Embed widget