Whatsapp Update: இனி வாட்ஸ்-அப் ஸ்டேட்டசையும் ரிப்போர்ட் அடிக்கலாம்..! வருகிறது புது வசதி..!
வாட்ஸ்-அப் செயலியில் பயனாளர்களின் ஸ்டேட்டஸ் தொடர்பாக புகாரளிக்கும் புதிய வசதி விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்-அப் செயலியில் பயனாளர்களின் ஸ்டேட்டஸ் தொடர்பாக, புகாரளிக்கும் புதிய வசதி விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாட்ஸ்-அப் செயலி:
பொதுமக்கள் பலரும் ஆப்பிள் சாதனங்களை விரும்பி வாங்க முக்கிய காரணம் அதில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் தான். அதனை மேலும் மேம்படுத்தும் வகையில் தான், ஆப்பிள் பயனாளர்களுக்கு என மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்-அப் செயலியிலும் பல்வேறு சிறப்பு மற்றும் கூடுதல் அம்சங்கள் வழங்கப்படுகின்றன. அந்த வரிசையில் தான், சக பயனாளர்களில் ஸ்டேட்டஸ் குறித்து புகாரளிக்கும் புதிய வசதி சோதனை முறையில் நடைபெற்று வருவதாகவும், விரைவில் பயன்பட்டிற்கு வர உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ரிப்போர்ட் ஆப்ஷன்:
புதிய அப்டேட்டின்படி, சக வாட்ஸ்-அப் பயனாளர்கள் பதிவிடும் ஸ்டேட்டஸ்களில் ஏதேனும் விதிமுறை மீறல்கள் இருந்தால் யார் வேண்டுமானாலும் புகாரளிக்கலாம். அந்த புகார் மதிப்பாய்வு குழுவிற்கு அனுப்பப்பட்டு அராய்ந்து உரிய நடவடிக்கை எடுகப்படும். இதற்காக ஸ்டேட்டஸ் அப்டேட் பக்கத்தில் “REPORT” எனும் புதிய ஆப்ஷன் வழங்கப்பட உள்ளது. இது, செய்திகள், மீடியா, இருப்பிடப் பகிர்வு, அழைப்புகள் மற்றும் நிலை புதுப்பிப்புகள் அனைத்தும் எல்லா சாதனங்களிலும் என்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் மூலம் பாதுகாக்கப்படுவதை இந்த அம்சம் உறுதி செய்கிறது.
இதன் மூலம், செய்திகள் மற்றும் தனிப்பட்ட அழைப்புகளின் விவரங்களை WhatsApp, Meta அல்லது மூன்றாம் தரப்பு ப்ராக்ஸி வழங்குநர் உட்பட யாரும் அணுக முடியாததாக இருக்கும் என கூறப்படுகிறது. தற்போதைய சூழலில் பீட்டா பயனாளர்களுக்கு மட்டுமே இந்த அம்சம் கிடைக்கப்பெற, விரைவில் அனைத்து ஐஓஎஸ் பயனாளர்களுக்கும் இந்த புதிய அப்டேட் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
குறுந்தகவலை எடிட் செய்யும் வசதி:
இதனிடையே, வாட்ஸ்-அப் செயலியில் புதிய அப்டேட்டாக அனுப்பிய குறுந்தகவலை எடிட் செய்யும் புதிய வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம், குறுந்தகவலை அனுப்பிய 15 நிமிடத்திற்குள் அதனை எடிட் செய்து, ஏதேனும் ஒரு தகவலை சேர்க்கலாம் அல்லது நீக்கலாம். இதன் காரணமாக குறிப்பிட்ட பகுதியை நீக்குவதற்காக, இனி யாரும் ஒட்டுமொத்த குறுந்தகவலையும் நீக்க வேண்டிய அவசியம் இருக்காது என கூறப்படுகிறது.
அண்மையில் வழங்கப்பட்ட அப்டேட்கள்:
ஆண்ட்ராய்ட் பயனாளர்களை போன்று பிக்சர் - இன் - பிக்சர் மோட் ஆப்ஷன் ஆப்பிள் பயனாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஆப்பிள் பயனாளர்களும் இனி வாட்ஸ்-அப்பில் வீடியோ கால் பேசிக்கொண்டே, மற்ற செயலிகளையும் வழக்கம்போல் பயன்படுத்தலாம். அதோடு, புகைப்படங்களில் தரத்தை மாற்றும் ஆப்பிள் பயனாளர்களுக்கான புதிய வசதியையும் மெட்டா நிறூவனம் சோதனைக்கு உட்படுத்தியுள்ளது.