Volkswagen Taigun Booking: ஃபோக்ஸ்வாகன் டைகூன் உற்பத்தி தொடங்கியது: இதோ புக்கிங் தகவல்கள்!
ஃபோக்ஸ்வாகன் கார் நிறுவனம் தனது புதிய படைப்பான டைகூன் எஸ்யுவி கார்களின் உற்பத்தியைத் தொடங்கியுள்ளது. வாடிக்கையாளர்கள் டீலர்களிடமோ அல்லது நேரடிய கார் நிறுவனத்தின் இணையதளத்திலோ இந்த காரை புக் செய்யலாம்.
ஃபோக்ஸ்வாகன் கார் நிறுவனம் தனது புதிய படைப்பான டைகூன் எஸ்யுவி கார்களின் உற்பத்தியைத் தொடங்கியுள்ளது. வாடிக்கையாளர்கள் டீலர்களிடமோ அல்லது நேரடிய கார் நிறுவனத்தின் இணையதளத்திலோ இந்த காரை புக் செய்யலாம்.
முன்னதாக, இம்மாத துவக்கத்திலேயே ஃபோக்ஸ்வாகன் ட்விட்டர் வாயிலாக கைகூன் எஸ்யுவி புக்கிங்குக்கு அழைப்பு விடுத்திருந்தது. இருப்பினும், டைகூன் ஸ்குவாட் திட்டத்தில் ஒப்பந்தமான வாடிக்கையாளர்கள் மட்டுமே இந்த புக்கிங்கை செய்யமுடியும்.
இது குறித்து ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வாகன் இந்தியா பிரைவேட் லிமிடட்டின் நிர்வாக இயக்குநர் குருபிரதாப் போபாராய் கூறுகையில், டைக்கூர் உற்பத்தியைத் தொடங்கியதன் மூலம் ஃபோக்ஸ்வாகன் வரலாற்றில் இன்னொரு மைல்கல்லை நோக்கிய பயணம் இன்று தொடங்கியுள்ளது.
டைகூன், ஜெர்மன் இன்ஜினீயரிங் தொழில்நுட்ப சக்தியுடன் இந்திய சாலைகளுக்கு ஏற்றமாதிரியும், இந்திய வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது. மத்திய ரக எஸ்யுவி மாடல் கார்களின் மீது இந்திய சமூகத்துக்குப் புதிய ஈர்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அதனைப் பூர்த்தி செய்யும் வகையில் டைகூன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஃபோக்ஸ்வாகன் டைகூன்: இன்ஜின், கியர்பாக்ஸ் சிறப்பம்சங்கள்
ஸ்கோடா குஷாக்குக்கு நிகராக ஃபோக்ஸ்வாகன் டைகூனின் இன்ஜின் திறன் சிறப்பானதாக அமைந்துள்ளது. இதில் இரண்டு டர்போ பெட்ரோல் இன்ஜின்கள் உள்ளன. ஒவ்வொன்றும் 115 hp திறன் கொண்டுள்ளது. 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் மற்றும் 150 hp, 1.5 லிட்டர், 4 சிலிண்டர் யூனிட். இரண்டு இன்ஜின்களும் 6-speed மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. இது ஸ்டாண்டர்ட் ஆப்ஷன். இதுதவிர 1.0 TSI, 6-speed டார்க் கன்வர்ட்டர் தானியிங்கி ஆப்ஷனும் உள்ளது. 1.5 TSI, 7-speed டூயல் க்ளட்ச் ஆட்டோமேடிக் ஆப்ஷனும் உள்ளது.
ஃபோக்ஸ்வாகன் டைகூன்: விலை என்ன?
ஃபோக்ஸ்வாகன் டைகூன் ஷோரூம் விலை 10.50 முதல் 17 லட்சம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்கோடா குஷாக்குக்கு நிகராக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், நிஸான் கிக்ஸ், ஸ்கோடா குஷாக் ஆகியனவற்றுக்கு போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
MQB A0 IN பிளாட்பார்மை அடிப்படையாகக் கொண்டு இதே செக்மென்ட்டில் ஃபோக்ஸ்வாகன் பேட்ஜ் உடன் வரும் எஸ்யூவிதான் டைகூன் (Taigun). வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படும் T-Cross எஸ்யூவி-யின் டிசைனைக் கொண்டுள்ளது டைகூன்.
பயணிகளுக்கு சிறப்பான இடவசதி மற்றும் சொகுசை மையமாக வைத்தே இந்த எஸ்யுவி உருவாக்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறது ஃபோக்ஸ்வாகன் ஸ்கோடா நிறுவனம்.
ஃபோக்ஸ்வாகனின் புதிய படைப்பான டைகூன் எஸ்யுவி கார்களுக்கு இந்தியாவில் பண்டிகை காலத்தில் நல்ல வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.