Volkswagen Taigun | இந்தியாவில் விற்பனைக்கு வந்தது ஃபோக்ஸ்வேகன் டைகுன்.. என்னென்ன வசதிகள்?
அண்மையில் விற்பனைக்கு அறிமுகமான Volkswagen Taigun மிட்-சைஸ் எஸ்யூவி காரின் வேரியண்ட் வாரியாக வசதிகளின் விபரம் வெளியாகியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவலை பார்க்கலாம்.
பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டைகுன் (Taigun) காரை நேற்று இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இது ஓர் நடுத்தர எஸ்யூவி ரக கார் மாடலாகும். இந்த கார் இரு விதமான ட்ரிம்களில் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும். டைனமிக் லைன் (Dynamic Line) மற்றும் பெர்ஃபார்மன்ஸ் லைன் (Performance Line) ஆகிய இரு விதமான ட்ரம்களிலேயே டைகும் கிடைக்கும். ஒவ்வொரு ட்ரிம்மிலும் பல தரப்பட்ட வேரியன்ட்களை ஃபோக்ஸ்வேகன் வழங்க இருக்கின்றது.
டைனமிக் லைன் (Dynamic Line):
டைனமிக் லைன் ட்ரிம்மில் கிடைக்கும் ஃபோக்ஸ்வேகன் டைகுன், 1.0 லிட்டர் 3 சிலிண்டர் டர்போசார்ஜட் பெட்ரோல் எஞ்ஜின் ஆப்ஷனில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கும். இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 115 பிஎஸ் மற்றும் 178 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த ட்ரிம்மில் ஒட்டுமொத்தமாக மூன்று விதமான ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இரண்டு விதமான 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்விலும், ஒற்றை 6 ஸ்பீடு தானியங்கி கியர்பாக்ஸ் தேர்விலும் அது கிடைக்கும்.
கம்ஃபோர்ட் லைன் (Comfortline)
விலை - ரூ. 10.50 லட்சம் (மேனுவல் டிரான்ஸ்மிஷன்)
அனைத்து வேரியன்ட்களை காட்டிலும் மிக மிக ஆரம்ப நிலை தேர்வாக இது இருக்கின்றது. ஆகையால், பிற வேரியன்ட்களை காட்டிலும் சற்று குறைவான அம்சங்களே இதில் இடம் பெற்றிருக்கும். குரோம் பூச்சுக் கொண்ட க்ரில், முன் மற்றும் பின் பக்கத்தில் டிஃப்யூசர், எல்இடி டிஆர்எல்கள் உடன் கூடிய ஹாலோஜென் ஹெட்லேம்ப், கருப்பு நிற ரூஃப் ரெயில், எல்இடி இன்டிகேட்டர் உடன் கூடிய எலெக்ட்ரிக்கல்லி அட்ஜெஸ்டபிள் ஓஆர்விஎம்கள், 16 இன்ச் வீல் மற்றும் இன்ஃபினிட்டி எல்இடி வால் பகுதி மின் விளக்கு உள்ளிட்டவை இந்த தேர்வில் இடம் பெற்றிருக்கின்றன. இத்துடன், இரு நிறங்கள் கொண்ட இருக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன. பின் பக்கத்திற்கு ஏசி, மல்டி ஃபேஸ் பட்டன்கள் கொண்ட ஸ்டியரிங் வீல், மேனுவல் ஏசி, 7 இன்ச்சிலான தொடு திரை, இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் (ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதிக் கொண்டது) மற்றும் ஆறு ஸ்பீக்கர்கள் ஆகிய அம்சங்கள் இக்காரின் உட்பகுதியில் இடம் பெற்றிருக்கின்றன. தொடர்ந்து, பாதுகாப்பு அம்சங்களாக இரு ஏர் பேக், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், பிரேக் அசிஸ்ட் மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் உள்ளிட்டவை ஃபோக்ஸ்வேகன் டைகுன் கம்ஃபோர்ட் லைன் தேர்வில் வழங்கப்பட்டுள்ளன.
இவை இரண்டும் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ள வேரியன்ட்கள் ஆகும். இது தவிர அந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் மற்ற வேரியண்ட்கள் பல வசதிகளுடன் வந்துள்ளன. ஆனால் இந்தியாவில் இதுவரை அறிமுகப்படுத்தவில்லை. அவை,
ஹைலைன் (Highline) - விலை ரூ. 12.80 லட்சம் (மேனுவல் டிரான்ஸ்மிஷன்), ரூ. 14.10 லட்சம் (தானியங்கி டிரான்ஸ்மிஷன்)
டாப்லைன் (Topline) - விலை ரூ. 14.57 லட்சம் (மேனுவல் டிரான்ஸ்மிஷன்), ரூ. 15.91 லட்சம் (தானியங்கி டிரான்ஸ்மிஷன்)
ஜிடி (GT) - விலை ரூ. 15 லட்சம் (மேனுவல் டிரான்ஸ்மிஷன்)
ஜிடி ப்ளஸ் (GT Plus) - விலை ரூ. 17.50 லட்சம் (டிஎஸ்ஜி)