TVS XL 100: பாட்டாளிகளின் பங்காளி TVS XL 100.. விலை லேசு.. மைலேஜ் மாஸ்!
TVS XL 100 வாகனத்தின் விலை, தரம் மற்றும் மைலேஜ் குறித்து கீழே காணலாம்.

ராயல் என்ஃபீல்ட், கேடிஎம், ஸ்ப்ளண்டர் ப்ளஸ் போன்ற வாகனங்கள் விற்பனை அதிகளவு காணப்பட்டாலும் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் விவசாயிகள், கட்டுமான வேலை செய்பவர்கள், பால் வியாபாரிகள் போன்றவர்கள் அதிகளவு விரும்புவது TVS XL 100 ஆகும்.
TVS XL 100:
விவசாயிகள் தங்களது விவசாய பொருட்களை கொண்டு செல்லவும், பால் வியாபாரிகள் பால் கேன்களை கொண்டு செல்வதற்கும் இந்த வாகனம் மிகவும் உதவிகரமாகவும் உள்ளது. அதிகளவு சரக்குகளை வைத்தாலும் நல்ல இழுக்கும் திறன் கொண்டது. இதனால், கடினமான வேலை செய்பவர்களின் முதன்மைத் தேர்வாக இந்த வாகனம் உள்ளது.
TVS XL 100-ன் விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் குறித்து கீழே காணலாம்.
1. TVS XL 100 Heavy Duty:
இந்த வாகனத்தில் ட்ரம் ப்ரேக்ஸ், ஸ்போக் வீல்ஸ் உள்ளது. 88 கிலோ எடை கொண்டது. டயூப் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஹலோஜன் முகப்பு விளக்குகள் உள்ளது. கிக் ஸ்டார்ட் வசதியே உள்ளது. கருப்பு மற்றும் பச்சை வண்ணத்தில் உள்ளது. இதன் விலை ரூபாய் 57 ஆயிரத்து 511 ஆகும்.
2. TVS XL 100 HeavyDuty i-Touchstart:
டிவிஸ் எக்ஸ் எல்-ன் இந்த வேரியண்ட் ரூபாய் 72 ஆயிரத்து 507 ஆகும். ட்ரம் ப்ரேக்ஸ், ஸ்போக் சக்கங்கள் பொருத்தப்பட்டுள்ளது. 89 கிலோ எடை கொண்டது. ட்யூப் டயர்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளது. ஹலோஜன் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி கொண்டது. கருப்பு, நீலம், சிவப்பு, ஆரஞ்ச், பச்சை நிறம் கொண்டது.
3.. TVS XL 100 HeavyDuty i-Touchstart Win Edition:
இதன் விலை ரூபாய் 75 ஆயிரத்து 982 ஆகும். ட்ரம் ப்ரேக்ஸ், ஸ்போக் சக்கரங்கள் இதில் உள்ளது. இதன் எடை 89 கிலோ ஆகும். ட்யூப் டயர்கள் உள்ளது. ஹலோஜன் விளக்குகள் இதில் பொருத்தப்பட்டுள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது. நீலம் மற்றும் சாம்பல் நிறம் கொண்டது.
4. TVS XL100 HD Alloy:
இதன் விலை ரூபாய் 76 ஆயிரத்து 353. இதில் ட்ரம் ப்ரேக், அலாய் சக்கரம் கொண்டது. இந்த வாகனத்தின் எடை 89 கிலோ. ட்யூப்லஸ் வசதி கொண்டது. டிவிஎஸ் எக்ஸ்எல் வாகனத்திலே இந்த வேரியண்ட் மட்டுமே ட்யூப்லஸ் ஆகும். எல்இடி முகப்பு விளக்குகள் கொண்டது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி கொண்டது. வெள்ளை, நீலம் மற்றும் ஆரஞ்ச் வண்ணங்களில் உள்ளது.
5.TVS XL 100 Comfort - i-Touch Start:
இந்த வாகனத்தின் விலை ரூபாய் 74 ஆயிரத்து 909 ஆகும். ட்ரம் ப்ரேக் மற்றும் ஸ்போக் சக்கரங்களை கொண்டது. 89 கிலோ எடை கொண்டது. எடை குறைவானது.
TVS XL100 மொபட்டில் 99.7 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 55 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது. 4 லிட்டர் பெட்ரோல் டேங்கர் திறன் கொண்டது. அதிகபட்சமாக 58 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லலாம். 4.3 பிஎச்பி ஆற்றல் கொண்டது. 6 ஆயிரம் ஆர்பிஎம் கொண்டது. 36 ஆயிரம் கிலோ மீட்டர் வாரண்டி உள்ளது. 3 வருடத்திற்கு வாரண்டி உள்ளது.





















