மேலும் அறிய

Top 10 bikes in india 2024: கடந்த ஆண்டு வெளியான இருசக்கர வாகன டாப் 10 பட்டியல்

இருசக்கர வாகனங்கள் சந்தையில் 2024 கடந்த ஆண்டு வெளியான இருசக்கர வாகன டாப் 10 பட்டியல்.

இந்திய இருசக்கர வாகனங்கள் சந்தையில் 2024 கடந்த ஆண்டு ஏராளமான மோட்டார்சைக்கிள் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இதில் முற்றிலும் புதிய மாடல்களும், ஏற்கனவே விற்பனை செய்யப்படும் பைக்குகளின் மேம்பட்ட மாடல்களும் இடம்பெற்று இருந்தன.

அந்த வகையில், கடந்த ஆண்டு வெளியான இருசக்கர வாகன டாப் 10 பட்டியல் 

Bajaj Pulsar n125 

பஜாஜ் நிறுவனம் பல்சர் என்125 மோட்டார்சைக்கிளை கடந்த அக்டோபர் மாதம் அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 94,707 (X-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இதில் 124.53 CC சிங்கில் சிலிண்டர் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 12 ஹெச்.பி. பவர், 11 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

Kawasaki ninja ZX-4RR

கவாசகி நிறுவனத்தின் டாப் எண்ட் மாடல்களில் ஒன்றாக இந்த பைக் கடந்த நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. ரூ. 9.42 லட்சம் (X-ஷோரூம்) விலையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த பைக்கில் 399 CC இன்லைன்-4 எஞ்சின் உள்ளது. இது 77 ஹெச்.பி. பவர், 39 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும்.

Honda sp 125 (2025)

2025 ஹோண்டா எஸ்.பி. 125 மாடல் கடந்த டிசம்பர் 23 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை ரூ. 91,771 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் 124CC சிங்கில் சிலிண்டர் ஃபியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கில் மைலேஜை சிக்கனப்படுத்தும் ஐடில் ஸ்டாப் சிஸ்டம் உள்ளது.

Honda sp 160 (2025)

2025 ஹோண்டா எஸ்.பி. 160 மோட்டார்சைக்கிள் கடந்த டிசம்பர் 24 ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை ரூ. 1.21 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் 162.71 CC சிங்கில் சிலிண்டர் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 9.7 கிலோவாட் பவர், 14.8 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

Kawasaki ninja 1100SX

இந்திய சந்தையில் கடந்த டிசம்பர் 19 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட நிஞ்சா 1100SX ரூ. 13.39 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் கிடைக்கிறது. இதில் 1099 CC இன்லைன் 4-சிலிண்டர் எஞ்சின் உள்ளது. இது 135 ஹெச்.பி. பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் ஏ.பி.எஸ்., டிராக்ஷன் கண்ட்ரோல், குரூயிஸ் கண்ட்ரோல் வசதிகள், பவர் மோட் வழங்கப்படுகிறது.

Triumph speed twin 900

டிரையம்ப் நிறுவனம் கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி அறிமுகம் செய்த புதிய ஸ்பீடு டுவின் 900 மாடலில் 900 CC பேரலல் டுவின் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 65 ஹெச்.பி. பவர், 80 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் விலை ரூ. 8.89 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Royal Enfield can classic 350

இந்திய சந்தையில் கடந்த நவம்பர் 23 ஆம் தேதி இந்த பைக் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை ரூ. 2.35 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த பைக்கிலும் கிளாசிக் 350 மாடலில் உள்ள எஞ்சினே வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் டிஜிட்டல் அனலாக் கன்சோல், டிரிப்பர் நேவிகேஷன், யு.எஸ்.பி. சார்ஜிங் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

KTM 1290 Adventure R

கே.டி.எம். நிறுவனம் தனது 1290 சூப்பர் அட்வென்ச்சர் ஆர் மோட்டார்சைக்கிளை கடந்த நவம்பர் 14 ஆம் தேதி அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 22.74 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் 1301 CC, டுவின் சிலிண்டர் லிக்விட் கூல்டு எஞ்சின் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பை-டைரக்ஷனல் குயிக் ஷிஃப்டர், ஸ்லிப்பர் கிளட்ச், ரைடு மோட்கள் என ஏராளமான வசதிகள் வழங்கப்பட்டு இருக்கிறது.

Royal enfield bear 650 

ராயல் என்பீல்டு நிறுவனம் தனது பியர் 650 மோட்டார்சைக்கிளை கடந்த நவம்பர் 5 ஆம் தேதி அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 3.39 லட்சம் (X-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதில் 650 CC பேரலல் டுவின் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது.

ktm 1390 super duke r

இந்திய சந்தையில் கே.டி.எம். 1390 சூப்பர் டியூக் ஆர் மோட்டார்சைக்கிள் கடந்த நவம்பர் 14 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை ரூ. 22.96 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதில் 1350 CC வி டுவின் எஞ்சின் வழங்கப்பட்டுள்ளது. இது 190 HP பவர், 145 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

CNG Vehicles: சென்னையில் கிடுகிடுவென உயரும் சிஎன்ஜி வாகனங்கள்..! REFILL நிலையங்கள் பற்றாக்குறை - தீர்வு?
சென்னையில் கிடுகிடுவென உயரும் சிஎன்ஜி வாகனங்கள்..! REFILL நிலையங்கள் பற்றாக்குறை - தீர்வு?
kia SUV: உள்ளூர் தயாரிப்பு..! பட்ஜெட்டில் வாட்டசாட்டமான 2 எஸ்யுவிக்கள் - தென்கொரிய கார்களின் முழு விவரங்கள்
உள்ளூர் தயாரிப்பு..! பட்ஜெட்டில் வாட்டசாட்டமான 2 எஸ்யுவிக்கள் - தென்கொரிய கார்களின் முழு விவரங்கள்
Tata Aeris வாங்கலாமா? வேண்டாமா? இந்த காரின் பிளஸ் & மைனஸ் என்ன? - முழு அலசல் இதோ
Tata Aeris வாங்கலாமா? வேண்டாமா? இந்த காரின் பிளஸ் & மைனஸ் என்ன? - முழு அலசல் இதோ
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!

வீடியோ

Abhijeet Dipke : ”பாட்டி இறந்ததை சொல்லலயா?”பொய் சொன்னாரா அபிஜீத் திப்கேவீடியோ ஆதாரத்துடன் வந்த போலீஸ்
Car bike accident : மொத்தமாக பறந்த பைக்! நூலிழையில் தப்பிய இளைஞர்! பகீர் சிசிடிவி காட்சி
Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை, பச்சை பயிறு கொள்முதலில் சுணக்கம்’ கேக் வாங்க டெண்டர் விட்ட தவெக அரசு..!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை கொள்முதலில் சுணக்கம்’ கேக் டெண்டருக்கு துரிதம்..!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
‘பத்தா’ படத்திற்கு கேரளாவில் அமோக வரவேற்பு! விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பதிவு!
‘பத்தா’ படத்திற்கு கேரளாவில் அமோக வரவேற்பு! விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பதிவு!
13 வருடங்களில் ஒருமுறை கூட இதை செய்யாத பிரதமர் மோடி: பீட்டர் அல்போன்ஸ் சரமாரி தாக்குதல்!
13 வருடங்களில் ஒருமுறை கூட இதை செய்யாத பிரதமர் மோடி: பீட்டர் அல்போன்ஸ் சரமாரி தாக்குதல்!
Kerala Accident: 3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
CNG Vehicles: சென்னையில் கிடுகிடுவென உயரும் சிஎன்ஜி வாகனங்கள்..! REFILL நிலையங்கள் பற்றாக்குறை - தீர்வு?
சென்னையில் கிடுகிடுவென உயரும் சிஎன்ஜி வாகனங்கள்..! REFILL நிலையங்கள் பற்றாக்குறை - தீர்வு?
TVK Vs EPS: ”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
Embed widget