மேலும் அறிய

Top 10 Bikes Of 2023: 2023ம் ஆண்டின் சிறந்த டாப் 10 பைக்குகள் - டிரையம்ப் தொடங்கி கேடிஎம் வரையிலான பட்டியல்

Top 10 Bikes Of 2023: நடப்பாண்டில் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகமாகி, நல்ல வரவேற்பை பெற்ற டாப் 10 மோட்டார்சைக்கிள்களின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

Top 10 Bikes Of 2023: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் நடப்பாண்டில் அதிக வரவேற்பை பெற்ற முதல் 10 மோட்டார்சைக்கிள்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

மோட்டார்சைக்கிள்கள் 2023:

மற்ற உலக நாடுகளை காட்டிலும் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருப்பதன் காரணமாக, பல்வேறு துறைகளுக்கும் இந்திய ஒரு சிறந்த சந்தையாக உள்ளது. ஆட்டோமொபைல் துறையும் அதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதிலும், இந்திய மக்கள் தொகையில் அதிக நடுத்தர குடும்பங்கள் இருப்பதால், வாகனம் என்றாலே அவர்களின் கவனத்திற்கு முதலில் வருவது மோட்டார்சைக்கிளாக தான் உள்ளது. இதனை கருத்தில் கொண்டே உள்நாடு மட்டுமின்றி பல்வேறு வெளிநாட்டு இருசக்கர வாகன உற்பத்தியாளர்களும், இந்தியாவில் தொடர்ந்து புதுப்புது வாகனங்களை அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வகையில் நடப்பாண்டில் அறிமுகமாகி வடிவமைப்பு மற்றும் செயல்திறனில் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்ததோடு, விற்பனையிலும் அசத்திய டாப் 10 பைக்குகளின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

டாப் 10 பைக்குகள் 2023:

10. KTM 390 Adventure X:

10. KTM 390 Adventure X:

கேடிஎம் 390 அட்வென்ச்சர் எக்ஸ் என்பது கேடிஎம் 390 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளை அடிப்படையாகக் கொண்ட பேஸ்-ஸ்பெக் வேரியண்ட் ஆகும். ரூ. 2.80 லட்சம் என்ற விலையில் கிடைக்கும் KTM 390 அட்வென்ச்சர் எக்ஸ் மாடலில், எலக்ட்ரானிக்ஸ் தொகுப்பு இல்லாதது குறைபாடாக கருதபப்டுகிறது.

09. Hero Karizma XMR:

ஹீரோ கரிஸ்மா எக்ஸ்எம்ஆர் அறிமுகமானது நீண்ட நாட்களுக்குப் பிறகு 'கரிஸ்மா' என்ற பெயர் சந்தைக்கு திரும்புவதைக் குறிக்கிறது. அறிமுகப்படுத்தப்பட்ட நேரத்தில், இந்த மாடலின் விலை ரூ. 1.73 லட்சமாக இருந்தது. இந்த மாடல் 25.1bhp மற்றும் 20.4Nm டார்க் கொண்ட புதிய 210cc, லிக்விட்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது.

08. Aprilia RS 457 Aprilia RS 457: 

இந்த மாடலானது சமீபத்தில் IBW 2023இல் ரூ 4.10 லட்சம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மாடலில் 46bhp மற்றும் 43.5Nm பீக் டார்க் கொண்ட 457சிசி, லிக்விட்-கூல்டு, பேரலல் ட்வின் இன்ஜின் இடம்பெற்றுள்ளது.

07. Royal Enfield Super Meteor 650

Royal Enfield Super Meteor 650 மதிப்பு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை போன்று தோன்றினாலும்,  உண்மையில் இதன் விலை வெறும் ரூ.3.49 லட்சம் மட்டுமே ஆகும். இந்த மாடல் 46.3bhp மற்றும் 52.3Nm டார்க் கொண்ட 650சிசி, லிக்விட்-கூல்டு, பேரலல்-ட்வின் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது.

06. Ducati Panigale V4R: 

Ducati Panigale V4R போன்ற பைக்குகள் பல இருசக்கர வாகன ஆர்வலர்களின் கனவுகளை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன. 69.99 லட்சம் விலையில் கிடைக்கும் டுகாட்டி பனிகேல் வி4ஆர் உயர்குடிமக்களுக்கும் கூட கனவாகவே உள்ளது. இதில் 15,500rpm இல் 240.5bhp உடன் 998cc, V4 இன்ஜின் உள்ளது.

05. Triumph Scrambler 400X:

ட்ரையம்ப் ஸ்க்ராம்ப்ளர் 400X என்பது ட்ரையம்ப் ஸ்பீடு 400 அடிப்படையிலான மிகவும் ஆஃப்-ரோடிற்கு சாதகமான எடிஷனாகும். ஸ்க்ராம்ப்லர் 400X என்பது 398சிசி, லிக்விட்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் ஆனது 39.4bhp மற்றும் 37.5Nm டார்க் ஆற்றலை வெளிப்படுத்துகிறது.

 04. TVS Apache RTR 310:

TVS Apache RTR 310 ஆனது வெறும் ரூ.2.43 லட்சம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மாடல் தற்போது இந்தியாவில் கிடைக்கும் சிறந்த நேக்ட் மோட்டார் சைக்கிள்களில் ஒன்றாகும். இதில் 35bhp மற்றும் 28.7Nm டார்க் கொண்ட 312சிசி, லிக்விட்-கூல்டு, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

03. Harley-Davidson X440:

ஹார்லி-டேவிட்சன் X440 மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு இருந்தே மிகுந்த உற்சாகத்தை அளித்தது. அறிமுகப்படுத்தப்பட்ட நேரத்தில், HD X440 விலை ரூ. 2.29 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டது. இதில் 27bhp மற்றும் 38Nm டார்க் ஆற்றலை வெளிப்படுத்தும்,  440cc ஆயில்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் உள்ளது.

02. Royal Enfield Himalayan 450

ராயல் என்ஃபீல்டு சமீபத்தில் ஹிமாலயன் 450 மாடல் மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்தியது. இது பழைய மாடலுக்கு மாற்றாக உள்ளது. புதிய ஹிமாலயன் அதன் முந்தைய மாடல்களை விட கணிசமாக மேம்படுத்தப்பட்ட மாடலாகும். இதில் இடம்பெற்றுள்ள 451சிசி, லிக்விட்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் ஆனது 39.5 பிஎச்பி மற்றும் 40 என்எம் டார்க் ஆற்றலை வெளிப்படுத்துகிறது. இதன் விலை ரூ.2.69 லட்சத்தில் தொடங்குகிறது.

01.Triumph Speed 400:

ட்ரையம்ப் ஸ்பீட் 400 விலை ரூ. 2.23 லட்சம் என அறிவிக்கபட்ட போது இந்தியாவின் ஒட்டுமொத்த வாகனச் சமூகமும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தது. அந்த விலையில், 39.5bhp மற்றும் 37.5Nm டார்க் கொண்ட 398cc, சிங்கிள்-சிலிண்டர், லிக்விட்-கூல்டு இன்ஜின் கிடைகிறது. நீங்கள் செலுத்தும் பணத்திற்கு சிறந்த செயல்திறனை வழங்குகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tamilnadu Cabinet: தமிழக அமைச்சரவை மாற்றம் - எந்த அமைச்சருக்கு என்ன இலாகா? உதயநிதிக்காக ஸ்டாலின் இழந்த துறை என்ன?
Tamilnadu Cabinet: தமிழக அமைச்சரவை மாற்றம் - எந்த அமைச்சருக்கு என்ன இலாகா? உதயநிதிக்காக ஸ்டாலின் இழந்த துறை என்ன?
TN New Ministers: தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு! மீண்டும் அரியணையில் செந்தில் பாலாஜி, நாசர்!
TN New Ministers: தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு! மீண்டும் அரியணையில் செந்தில் பாலாஜி, நாசர்!
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Rasi Palan Today, Sept 29: சிம்மம் விவாதங்களை தவிர்ப்பது நல்லது, கன்னிக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை:  உங்கள் ராசிக்கான பலன்
RasiPalan: சிம்மம் விவாதங்களை தவிர்ப்பது நல்லது, கன்னிக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை: உங்கள் ராசிக்கான பலன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamilnadu Cabinet: தமிழக அமைச்சரவை மாற்றம் - எந்த அமைச்சருக்கு என்ன இலாகா? உதயநிதிக்காக ஸ்டாலின் இழந்த துறை என்ன?
Tamilnadu Cabinet: தமிழக அமைச்சரவை மாற்றம் - எந்த அமைச்சருக்கு என்ன இலாகா? உதயநிதிக்காக ஸ்டாலின் இழந்த துறை என்ன?
TN New Ministers: தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு! மீண்டும் அரியணையில் செந்தில் பாலாஜி, நாசர்!
TN New Ministers: தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு! மீண்டும் அரியணையில் செந்தில் பாலாஜி, நாசர்!
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Rasi Palan Today, Sept 29: சிம்மம் விவாதங்களை தவிர்ப்பது நல்லது, கன்னிக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை:  உங்கள் ராசிக்கான பலன்
RasiPalan: சிம்மம் விவாதங்களை தவிர்ப்பது நல்லது, கன்னிக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை: உங்கள் ராசிக்கான பலன்
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
Breaking News LIVE 29th SEP 2024: தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு
Breaking News LIVE 29th SEP 2024: தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
Embed widget