மேலும் அறிய

’’1800 அரசு பள்ளிகளில் HM இல்லை; 20 DEO காலியிடங்கள்- அவலத்துக்கு முடிவு எப்போ?’’அன்புமணி ஆதங்கம்!

பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லாத நிலையில் அவற்றின் கல்வித் தரம் வீழ்ச்சியடைவதையும், மாணவர்களின் எதிர்காலம் சீரழிவதையும் தடுக்க முடியாது- அன்புமணி.

1800 அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை; 20 மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்கள் காலி – பள்ளிக் கல்வித் துறையின் அவலநிலை மாற்றப்பட வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

‘’தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து வரும் 4ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், 1800-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை என்ற செய்தி வெளியாகியுள்ளது. அவர்கள் மட்டுமின்றி, 20 மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களும் காலியாக இருப்பதாகத் தெரியவந்திருக்கிறது. கல்விக்கான அடித்தளத்தை அமைக்க வேண்டிய பள்ளிக்கல்வித்துறை  இந்த அளவுக்கு பலவீனமாக இருப்பது பெரும் கவலையளிக்கிறது.

திமுக ஆட்சி செய்த கடந்த ஐந்தாண்டுகளில் அரசு பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்களை நியமித்து, அவற்றின் கட்டமைப்பையும், மனிதவளத்தையும் மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், பள்ளிக்கல்வித் துறையின் முக்கியத்துவத்தை உணர்ந்து  தலைமை ஆசிரியர்கள் நியமனம் உள்ளிட்ட மாற்றங்களைச் செய்ய வேண்டும். 

இத்தனை பணியிடங்கள் காலியா?

கல்வியாண்டு முடிவுக்கு வந்த மே 31ஆம் நாளான நேற்று மட்டும் 30 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், 14 மாவட்ட கல்வி அதிகாரிகள், 3 மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் ஓய்வு பெற்றுள்ளனர். அரசு பள்ளிகளைப் பொறுத்தவரை உயர்நிலைப்பள்ளிகளில் 700 தலைமை ஆசிரியர் பணியிடங்களும், மேல்நிலைப் பள்ளிகளில் 300 தலைமை ஆசிரியர் பணியிடங்களும், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சேர்த்து 800 தலைமை ஆசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளன.

உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில் மட்டும் 1000 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதை மன்னிக்கவே முடியாது. மாணவர்களின் கல்வி சார்ந்த எதிர்காலம் இந்தப் பள்ளிகளில்தான் தீர்மானிக்கப்படுகின்றன.

எதிர்காலம் சீரழிவதா?

பத்தாம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்துவது இந்தப் பள்ளிகள்தான். இந்தப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லாத நிலையில் அவற்றின் கல்வித் தரம் வீழ்ச்சியடைவதையும், மாணவர்களின் எதிர்காலம் சீரழிவதையும் தடுக்க முடியாது.

அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நேற்றோ, இன்றோ உருவானவை அல்ல. பல பள்ளிகளின் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் 6 ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ளன. தமிழக அரசு நினைத்தால் ஒற்றை அரசாணை மூலம் இந்த பணியிடங்கள் அனைத்தையும் நிரப்ப முடியும் ஆனால், நீதிமன்றங்களில் வழக்குகள் காலியாக இருப்பதைக் காரணம் காட்டியே  தலைமை ஆசிரியர்களை நியமிப்பதை அரசு தவிர்த்து வந்திருக்கிறது.

ஏராளமான பாதிப்புகள்

இதில் வேதனையான உண்மை என்னவென்றால், தலைமை ஆசிரியர் பணியிடங்கள் தொடர்பான வழக்குகளில் பெரும்பாலானவை அரசாலோ அல்லது அரசின் தூண்டுதலால் ஆளுங்கட்சிக்கு ஆதரவானவர்களாலோ கடந்த காலங்களில் தொடரப்பட்டவைதான். தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டு இவ்வாறு செய்யப்பட்டது.  இதனால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வீழ்ச்சி உள்ளிட்ட ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் இந்த அவலத்தை பாட்டாளி மக்கள் கட்சி பல முறை சுட்டிக் காட்டியிருக்கிறது. ஆனாலும் முந்தைய திமுக ஆட்சியில் இந்தக் குறையை சரி செய்ய எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. 
சுவரில்லாமல் சித்திரம் வரைய முடியாது என்பதை சொல்லித் தர வேண்டிய பள்ளிகளில், சுவர்களுக்கு இணையான முக்கியத்துவம் கொண்ட தலைமை ஆசிரியர்கள் இல்லாதது எவ்வளவு கொடுமையான முரண்பாடு? அந்த சுவர்கள் இல்லாமல் கல்வி எனும் சித்திரத்தை எவ்வாறு வரையமுடியும் என்பதை ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்.

உடனே முடிவுகட்ட வேண்டும் 

தலைமை ஆசிரியர்கள் இல்லாமல் பள்ளிகளை நடத்தும் பள்ளிக் கல்வித்துறையின் அவலத்திற்கு உடனடியாக முடிவு கட்ட வேண்டும். நீதிமன்றங்களில் உள்ள வழக்குகள் அனைத்தையும் முடிவுக்கு கொண்டு வந்து, அனைத்துப் பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர்களை நியமிக்கவும், அனைத்துக் கல்வி மாவட்டங்களுக்கும் மாவட்டக் கல்வி அதிகாரிகள், அனைத்து வருவாய் மாவட்டங்களுக்கும் முதன்மைக் கல்வி அதிகாரிகள் ஆகியோரை நியமிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
பள்ளிக் கல்விக்கு தவெக ஆட்சியில் நிதி குறைப்பா? நடந்தது இதான்- அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
பள்ளிக் கல்விக்கு தவெக ஆட்சியில் நிதி குறைப்பா? நடந்தது இதான்- அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget