Tata Avinya EV: வாயை பிளக்க வைத்த டாடா அவின்யா ஈவி.. பிரீமியம் காரா? கப்பலா? டிசைனுக்கே காசு கொட்டலாம் போலியே..!
Tata Avinya EV: பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவில் டாடா நிறுவனம் அறிமுகப்படுத்திய, பிரீமியம் மின்சார காரான அவின்யா பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

Tata Avinya EV: டாடா நிறுவனத்தின் பிரீமியம் மின்சார காரான அவின்யா தொடர்பான சுவாரஸ்ய தகவல்களை இங்கே அறியலாம்.
டாடா அவின்யா மின்சார கார்:
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, டாடா மோட்டார்ஸ் அதன் எதிர்கால மின்மயமாக்கல் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தின் ஒரு பகுதியாக அவின்யா EV காரின் கான்செப்டை அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் அதன் உற்பத்தி மாடலை, டெல்லியில் நடைபெறும் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டது. பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்த அந்தச் கார், Born Electric இயங்குதளத்தின் அடிப்படையில் (ஜெனரேஷன்-3 EV கட்டுமானக் கலை என அழைக்கப்படுகிறது) வடிவமைக்கப்பட்டுள்ளது. அவின்யா EV அதிகபட்ச கேபின் இடத்தை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அவின்யா ஈவி சந்தைக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அம்சங்கள் மற்றும் விவரகங்கள்:
புதிய டாடா அவின்யா EV பற்றிய அதிகாரப்பூர்வ விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை. இருப்பினும், இந்த வாகனம் அடுத்த தலைமுறை ADAS தொழில்நுட்பம், அல்ட்ராஃபாஸ்ட் சார்ஜிங் திறன், OTA மேம்படுத்தல்கள், பேட்டரி மேலாண்மை அமைப்பு மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட உந்துவிசை அமைப்பு ஆகியவற்றுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பிளாட்ஃபார்மில் கட்டப்பட்ட EVகளை 500 கிமீக்கும் அதிகமான ரேஞ்சை வழங்கும் மற்றும் 30 நிமிடங்களுக்குள் சார்ஜ் செய்ய முடியும் என நம்பப்படுகிறது.
உட்புறம் மற்றும் வடிவமைப்பு
அவின்யா கான்செப்ட்டைப் பற்றி பேசுகையில், இந்த மாடலில் டேஷ்போர்டில் ஒருங்கிணைக்கப்பட்ட மெல்லிய திரை உள்ளது. மேலும், புதிய ஸ்டீயரிங் வீல், அத்தியாவசிய தகவல் மற்றும் கட்டுப்பாடுகளுக்கான ஒருங்கிணைந்த திரை மற்றும் நிலையான பொருட்களுடன் கூடிய எளிய உட்புற தீம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. EV கான்செப்ட்டின் முன்புறம் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கிரில், மெலிதான ஹெட்லேம்ப்கள், நீட்டிக்கப்பட்ட 'டி' லோகோவை ஒத்த முழு அகலமான LED லைட் பார் மற்றும் ஸ்போர்ட்டி ஸ்ப்ளிட்டர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஸ்போர்ட்ஸ் கார் வடிவமைப்பை கொண்டுள்ள இந்த காரை, ஆண்டுக்கு 24,000 யூனிட்களை உற்பத்தி செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய டாடா EV உற்பத்தி
அவின்யா கார் மாடல் ஒரு பிரீமியம் EV பிராண்டாக செயல்படும், இதன் கீழ் பல புதிய டாடா மின்சார கார்கள் (பெரும்பாலும் SUVகள் மற்றும் MPVகள்) JLR’s EMA எனப்படும் ஒரே பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படலாம். முழு அவின்யா ரேஞ்ச் கார்களும் டாடாவின் தயாரிப்பு போர்ட்ஃபோலியோவின் டாப் என்ட் லிஸ்டில் இருக்கக் கூடும். இந்த வரம்பில் தற்போதுள்ள டாடா EVகளின் சில மாடல்களும் இருக்கும். ஆனால் விலையில் மாற்றம் இருக்காது. டாடா அவின்யாவின் கீழ் உள்ள பிரீமியம் EVகள், ஐந்து ஆண்டுகளில் 9,000 கோடி ரூபாய் முதலீட்டில் நிறுவப்பட உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள பிராண்டின் புதிய ஆலையில் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த உற்பத்தி ஆலை ஜாகுவார் லேண்ட் ரோவர் EVக்கான உற்பத்தி மையமாகவும் செயல்படும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

