மேலும் அறிய

TATA JLR Plant: ராணிப்பேட்டையில் ரூ.9000 கோடி முதலீட்டில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த டாடாவின் புதிய ஆலை: எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு? - முழு விவரம் இதோ

ராணிப்பேட்டையில் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் டாடா நிறுவனத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலை திறக்கப்பட்டது.

இராணிப்பேட்டையில் ரூ.9000 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள டாடா நிறுவனத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

முதலமைச்சரால் இன்று (9.2.2026) இராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் பனப்பாக்கம் தொழிற்பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 9,000 கோடி ரூபாய் முதலீட்டில் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் டாடா மோட்டார்ஸ் JLR நிறுவனத்தின் நவீன வாகன உற்பத்தி ஆலையின் முதல் அலகு 900 கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் உலகளாவிய மற்றும் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்ப்பதன் மூலம் 2030-க்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரம் 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு மாற்றம் பெறவேண்டும் என்ற முதலமைச்சரின் இலட்சிய இலக்கினை விரைவில் எய்துவதற்கு ஏதுவாக தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. அதன் விளைவாக தமிழ்நாடு, இந்தியாவிலேயே பொருளாதார வளர்ச்சியில் முதன்மை மாநிலமாகவும். வாகனங்கள், மின்னணு, ஆயத்த ஆடைகள், தோல் பொருட்கள் உள்ளிட்ட பல்வகைப்பட்ட உற்பத்தித்துறைகளில் முன்னணி மாநிலமாகவும் வளர்ச்சி பெற்றுள்ளது. மேலும், ஈர்க்கப்படும் தொழில் திட்டங்கள் மாநிலம் முழுவதும் பரவலாக அமைக்கப்பட்டு, இலட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பெண்களுக்கான வேலைவாய்ப்பு பெருமளவில் உருவாக்கப்பட்டதன் காரணமாக தொழிற்சாலைகளில் பணிபுரியும் மொத்த பெண்களில் 41 சதவிகித பங்களிப்பை தமிழ்நாடு கொண்டுள்ளது.

டாடா குழுமம்

வாகனங்கள், மின்னணுவியல், எஃகு, தகவல் மோட்டார் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உலகளவில் டாடா டாடா குழுமம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அக்குழுமத்தின் துணை நிறுவனங்களான டிசிஎஸ். டைடன், டாடா பவர், டாடா எலெக்ட்ரானிக்ஸ், தாஜ் ஹோட்டல்கள் ஆகியவை ஏற்கெனவே தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, தற்போது, குழுமத்தின் ஒரு அங்கமான டாடா மோட்டார்ஸ் J.R நிறுவனம் அதிநவீன மின்வாகன உற்பத்தி ஆலையை தமிழ்நாட்டில் அமைத்துள்ளது. குறிப்பிடத்தக்கது.

TATA JLR Plant: ராணிப்பேட்டையில் ரூ.9000 கோடி முதலீட்டில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த டாடாவின் புதிய ஆலை: எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு? - முழு விவரம் இதோ

டாடா மோட்டார்ஸ் J.R-நிறுவனத்தின் அதிநவீன மின்வாகன உற்பத்தி ஆலை திறப்பு

டாடா மோட்டார்ஸ் JLR நிறுவனம். 2024-ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழ்நாட்டில் வாகன உற்பத்திக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. அதே ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் பனப்பாக்கம் தொழிற்பூங்காவில் உற்பத்தி ஆலை அமைப்பதற்கு முதலமைச்சரால் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த ஆலையின் முதல் அலகு நிறுவும் பணிகள் 16 மாதங்களில் விரைந்து முடிக்கப்பட்டு, இன்று முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அரசு இது புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செயல்படுத்துவதற்கு தமிழ்நாடு துரிதமாக மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். உலகப் புகழ் பெற்ற ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) சொகுசு வாகனங்கள் உற்பத்தி செய்யப்படவுள்ள இவ்வாலையின் முதலாவது வாகனம் இன்று வெளியிடப்பட்டது.

TATA JLR Plant: ராணிப்பேட்டையில் ரூ.9000 கோடி முதலீட்டில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த டாடாவின் புதிய ஆலை: எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு? - முழு விவரம் இதோ

டாடா மோட்டார்ஸ் JLR நிறுவனத்தின் நவீன வாகன உற்பத்தி ஆலை திறப்பு விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர்,  படா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடாவின் திருவுருவச் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர். உற்பத்தியை ஆலையை திறந்து வைத்து பார்வையிட்டார். 

அதனைத் தொடர்ந்து, இந்த ஆலையின் முதலாவது ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) சொருசு வாகனத்தை இயக்கியதுடன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தலைப்பு செய்திகள்

ஒரே சார்ஜில் 650 கி.மீட்டர் மைலேஜ்.. Mahindra BE 07 வரப்போது மின்சார கார்! எப்போது?
ஒரே சார்ஜில் 650 கி.மீட்டர் மைலேஜ்.. Mahindra BE 07 வரப்போது மின்சார கார்! எப்போது?
ஒரே சார்ஜில் 300 கி.மீட்டருக்கு மேல் மைலேஜ்! இந்த 3 இ ஸ்கூட்டர்கள் மட்டும்தான் இதுல கெத்து - என்னென்ன?
ஒரே சார்ஜில் 300 கி.மீட்டருக்கு மேல் மைலேஜ்! இந்த 3 இ ஸ்கூட்டர்கள் மட்டும்தான் இதுல கெத்து - என்னென்ன?
டேங்கரை நிரப்பினா 617 கி.மீட்டர் மைலேஜ்.. Hero Splendor Plus Flex Fuel பைக்கில் அப்படி என்னதான் இருக்கு? ஓர் அலசல்
டேங்கரை நிரப்பினா 617 கி.மீட்டர் மைலேஜ்.. Hero Splendor Plus Flex Fuel பைக்கில் அப்படி என்னதான் இருக்கு? ஓர் அலசல்
Volkswagen SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட் எஸ்யுவி - ஃபோக்ஸ்வாகன் அதிரடி - என்ன இருக்கும்? எந்த மாடல் - முழு விவரம்
ரூ.9 லட்சம் பட்ஜெட் எஸ்யுவி - ஃபோக்ஸ்வாகன் அதிரடி - என்ன இருக்கும்? எந்த மாடல் - முழு விவரம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
Embed widget