Tata Tiago: 5 ஆயிரம் ரூபாய் இருந்தாலே Tata Tiago கார் வாங்கலாம் - டாடா தந்த அதிரடி ஆஃபர்
டாடா நிறுவனம் தனது டிசம்பர் மாத சலுகையாக Tata Tiago காருக்கு ரூபாய் 5 ஆயிரம் மாத தவணையாக அறிவித்துள்ளது.

இந்தியாவில் கார் தயாரிப்பு நிறுவனங்களின் முதன்மையான நிறுவனமாக இருப்பது டாடா நிறுவனம். பட்ஜெட் விலை முதல் சொகுசு கார்கள் வரை டாடா நிறுவனம் தயாரித்து வருகிறது. அனைத்து தரப்பினரையும் கார் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் தவணை முறையிலும் விற்பனை செய்து வருகின்றனர்.
தவணை எவ்வளவு?
டாடா நிறுவனத்தின் பட்ஜெட் விலை கார்களில் மிகவும் முக்கியமான கார் டாடா Tiago கார். வாடிக்கையாளர்களின் நலன் கருதி Tata Tiago காருக்கு தவணைத் தொகையை குறைவாக அறிவித்துள்ளது. மாதந்தோறும் ரூபாய் 4 ஆயிரத்து 999 தவணையிலே Tata Tiago கார் வாங்க இயலும். நடப்பாண்டு இறுதியில் கார் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களின் வசதிக்காக இந்த சலுகையை டாடா அறிவித்துள்ளது.
டாடா நிறுவனத்தின் இந்த Tata Tiago கார் பலராலும் விரும்பி வாங்கப்படுகிறது. இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 5 லட்சத்து 49 ஆயிரம் ஆகும். இந்த காரில் மொத்தம் 13 வேரியண்ட்கள் உள்ளது. இந்த கார் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி-யில் ஓடும் ஆற்றல் கொண்டது.
வேரியண்ட்களும், விலையும்:
1. Tiago XE - ரூ.5.49 லட்சம்
2. Tiago XM - ரூ.6.40 லட்சம்
3. Tiago XE iCNG - ரூ.6.62 லட்சம்
4. Tiago XT - ரூ.6.99 லட்சம்
5. Tiago XM iCNG - ரூ.7.47 லட்சம்
6. Tiago XTA - ரூ.7.58 லட்சம்
7. Tiago XZ - ரூ.7.68 லட்சம்
8. Tiago XT iCNG - ரூ.8.06 லட்சம்
9. Tiago XZ Plus - ரூ.8.11 லட்சம்
10. Tiago XZA - ரூ.8.27 லட்சம்
11. Tiago XTA iCNG - ரூ.8.64 லட்சம்
12. Tiago XZ iCNG - ரூ.8.75 லட்சம்
13. Tiago XZA iCNG - ரூ.9.43 லட்சம்
மைலேஜ்:
இந்த Tata Tiago கார் 5 சீட்டர் கொண்டது ஆகும். ஒரு சிறிய மற்றும் நடுத்தர குடும்பத்தினர் செல்வதற்கு ஏற்ற கார் இதுவாகும். 1199 சிசி திறன் கொண்டது இந்த கார் ஆகும். இந்த கார் மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக்கில் ஓடும் திறன் கொண்டது ஆகும். இந்த கார் 19.01 கிலோமீட்டர் வரை மைலேஜ் தருகிறது. 74 பிஎச்பி குதிரைத் திறன் மற்றும் 85 பிஎச்பி குதிரைத் திறன் கொண்டது இந்த கார்.
இந்த காருக்கு 4 ஸ்டார் பாதுகாப்பு தரக்குறியீட்டை NCAP அளித்துள்ளது. இந்த காரின் வடிவம், தோற்றம் வாடிக்கையாளர்களை கவரும் அம்சம் கொண்டது. இந்த காரில் 10.25 இன்ச் டிஸ்ப்ளே உள்ளது. ரிவர்ஸ் கேமரா இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் 2 ஏர்பேக்குகள் உள்ளது. ஏபிஎஸ் வித் இபிடி வசதி உள்ளது. எல்இடி முகப்பு விளக்குகள் உள்ளது.
டாடா பஞ்ச், ஹுண்டாய் கிராண்ட் ஐ10 நியாஸ், சிட்ரோன் சி3 ஆகிய கார்களுக்கு போட்டியாக இந்த கார் உள்ளது. டாடா நிறுவனம் அளித்துள்ள இந்த தவணை சலுகை டியாகோ கார் வாங்க விரும்பும் நபர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.





















