பட்ஜெட் கார் Nexon-க்கு டாடா தந்த மெகா தள்ளுபடி - எவ்வளவு தெரியுமா?
Tata Nexon Car Offers: டாடாவின் பட்ஜெட் காரான நெக்ஸான் காருக்கு 65 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற கார் தயாரிப்பு நிறுவனம் டாடா. இவர்களின் கார்களுக்கு என்று இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. ஒவ்வொரு கார் நிறுவனமும் தங்களது கார்களுக்கு என்று ஒவ்வொரு மாதமும் சலுகையை அறிவித்து வருகிறது.
நெக்ஸான் கார்கள் தள்ளுபடி:
அந்த வகையில், டாடா நிறுவனமும் தனது கார்களுக்கு ஆகஸ்ட் மாத சலுகையை அறிவித்துள்ளது. பட்ஜெட் விலை காரான Nexon-க்கும் தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது.
1. Nexon காரின் பெட்ரோலில் ஓடும் மேனுவல் காருக்கு ரூபாய் 65 ஆயிரம் தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது.
2. பெட்ரோலில் ஓடும் Nexon காரின் மற்ற வேரியண்ட்களுக்கு ரூபாய் 50 ஆயிரம் தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது.
3. Nexon காரில் சிஎன்ஜி-யில் ஓடும் கார்களுக்கு ரூபாய் 45 ஆயிரம் தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது.
4. Nexon டீசலில் ஓடும் கார்களுக்கு ரூபாய் 20 ஆயிரம் வரை தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது.
இது நெக்ஸான் காரின் வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது. பட்ஜெட் விலையில் கார் வாங்க விரும்பும் பலரது முதன்மைத் தேர்வுகளில் நெக்ஸான் காரும் ஒன்றாக உள்ளது. பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி-யில் ஓடும் வகையில் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி:
இந்த காரில் மொத்தம் 65 வேரியண்ட் உள்ளது. இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 8.89 லட்சம் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 17.96 லட்சம் ஆகும். தற்போது 65 ஆயிரம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருப்பதால் இந்த காரை ஆன் ரோட் விலை ரூபாய் 8 லட்சம் பட்ஜெட்டிலே வாங்க இயலும். டாப் வேரியண்டின் விலையும் ரூபாய் 17 லட்சம் பட்ஜெட்டில் வாங்க இயலும்.
இந்த காரில் 113 எச்பி மற்றும் 260 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. இந்த காரில் 1497 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் டீசல் வேரியண்டில் பொருத்தப்பட்டுள்ளது. பெட்ரோல் வேரியண்டில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதில் 99 பிஎச்பி மற்றும் 170 என்எம் டார்க் இழுதிறன் உள்ளது.
சிறப்புகள்:
எகோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் மோட்களில் இந்த கார் உள்ளது. 2 ஆயிரம் ஆர்பிஎம் உள்ளது. மேனுவலில் 6 கியர்கள் உள்ளது. டூயயல் சிஎன்ஜி டேங்கர் 60 லிட்டர் தாங்கும் திறன் கொண்டது. சன்ரூஃப் மேற்கூரை வசதி உள்ளது. 360 டிகிரி கேமரா வசதி உள்ளது. 10.25 இன்ச் டி8ஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வசதி உள்ளது.
கூகுள் மேப்ஸ், ஓட்டுனர் அட்டென்சன் அசிஸ்ட், டயர் ப்ரஷர் மானிட்டர் வசதி உள்ளது.10.25 இன்ச் டிஸ்ப்ளே உள்ளது. 382 லிட்டர் டிக்கி வசதி உள்ளது. வயர்லஸ் சார்ஜிங் வசதி உள்ளது. பயணிகளின் பாதுகாப்பிற்காக 6 ஏர்பேக்குகள் வசதி உள்ளது. நீலம், சாம்பல், வெள்ளை, நீலம் வசதி உள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்






















