Skoda Kylaq: குவாலிட்டிக்கு பெயர் போன ஸ்கோடா - கைலாக்கின் விலை தாறுமாறாக குறைப்பு - ஏன்? மற்ற மாடல்களுக்கு?
Skoda Kylaq: ஸ்கோடா நிறுவனம் தனது கைலாக் கார் மாடலின் விலையை கடுமையாக குறைத்து அறிவித்துள்ளது.

Skoda Kylaq: ஸ்கோடா நிறுவனம் தனது ஸ்கோடா காரின் பல்வேறு ட்ரிம்களின் விலையை திருத்தி அறிவித்துள்ளது.
ஸ்கோடா கைலாக் விலை அதிகரிப்பு:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஸ்கோடா நிறுவனம் சார்பில் கிடைத்து வந்த,மலிவு விலை காரான கைலாக்கின் விலை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரூ.7.89 லட்சம் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த, கைலாக் காரின் அறிமுக சலுகை கடந்த ஏப்ரல் 30ம் தேதியுடன் முடிவடைந்தது. அதனை தொடர்ந்து திருத்தி அமைக்கப்பட்ட இந்த காரின் விலை தற்போது ரூ.8.25 லட்சமாக உள்ளது. அதாவது அறிமுக சலுகையை காட்டிலும் தற்போது 36 ஆயிரம் ரூபாய் அதிகரித்துள்ளது. இந்திய ஆட்டோமொபைல் சந்தையில், கைலாக் காரானது டாடா நெக்ஸான், மாருதி பிரேஸ்ஸா, கியா சோனெட், ஹுண்டாய் வென்யு, நிசான் மேக்னைட் மற்றும் ரெனால்ட் கைகர் ஆகிய மாடல்களுக்கு போட்டியாக உள்ளது.
தடாலடியாக விலை குறைப்பு:
எண்ட்ரி லெவல் கிளாசிக் வேரியண்டின் விலை 36 ஆயிரம் ரூபாய் குறைக்கப்பட்ட நிலையில், அடுத்த இடத்தில் உள்ள சிக்னேட்சர் வேரியண்டின் சிக்னேட்சர், சிக்னேட்சர் லாவா ப்ளூ மற்றும் டீப் பிளாக் ஆகிய ட்ரிம்களின் விலை 26 ஆயிரம் ரூபாய் அதிகரித்துள்ளது. இதேபிரிவைச் சேர்ந்த ஆட்டோமேடிக் வேரியண்ட்களின் விலை 36 ஆயிரம் ரூபாய் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. யாருமே எதிர்பாராத விதமாக, சிக்னேட்சர் + வேரியண்டின் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் கொண்ட ட்ரிம்களின் விலை முறையே, ரூ.15 ஆயிரம் மற்றும் ரூ.5000 குறைந்துள்ளது. அதேபோன்று, டாப் ஸ்பெக்கான ப்ரெஸ்டிஜ் வேரியண்டின் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் ட்ரிம்களின் விலை முறையே, ரூ.46,000 முறையே மற்றும் ரூ.41,000 குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஸ்கோடா கைலாக் கார் மாடலின் விலை தற்போது ரூ.8.25 லட்சத்தில் தொடங்கி ரூ.13.99 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கைலாக் விற்பனை விவரங்கள்:
கடந்த ஆண்டு இறுதியில் ஸ்கோடா கைலாக் மாடல் கார் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அது முதல் அந்நிறுவனம் சார்பில் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார் மாடலாக கைலாக் உள்ளது. ஸ்கோடாவின் தரவுகளின்படி, ஒவ்வொரு மாதமும் 5000 கைலாக் கார் மாடல்கள் விற்பனையாகி வருகின்றன. டாட் ட்ரிம்களின் விலை குறைப்பு நடவடிக்கை காரணமாக சப் 4 மீட்டர் எஸ்யுவி பிரிவில், கைலாக் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்ததாக உருவெடுத்துள்ளது. கடும் போட்டியாளர்களுக்கு மத்தியிலும் தொடர்ந்து நல்ல விற்பனையாகி வரும் நிலையில் தான், எண்ட்ரி லெவல் ட்ரிம்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் இந்த புதிய விலை குறைவு என்பதால், விற்பனையில் பெரிய தாக்கம் இருக்காது என கூறப்படுகிறது. அதோடு, டாப் ட்ரிம்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதால், அதற்கான தேவையும் கணிசமாக அதிகரிக்கும் என ஸ்கோடா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இன்ஜின், தொழில்நுட்ப அம்சங்கள்:
கைலாக்கில் 1.0 லிட்டர், 3 சிலிண்டர் TSI டர்போ பெட்ரோல் இன்ஜின் இடம்பெற்றுள்ளது. இது 6 ஸ்பீட் மேனுவல் மற்றும் 6 ஸ்பீட் டார்க் கன்வெர்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸை கொண்டுள்ளது. ஏராளமான தொழில்நுட்ப வசதிகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. மேனுவல் எடிஷனில் லிட்டருக்கு 19.68 கிமீ., ஆட்டோமேடிக்கில் 19.05 கிமீ மைலேஜ் வழங்குகிறது. செக் குடியரசை சேர்ந்த ஸ்கோடா கார்கள் பொதுவாக அவற்றின் தரம், நம்பகத்தன்மை மற்றும் கட்டமைப்பு வலிமைக்காக அறியப்படுகின்றன. அவற்றின் வலுவான பொறியியல் மற்றும் நுணுக்கமான வடிவமைப்பிற்காக பயனர்களால் வெகுவாக பாராட்டப்படுகின்றன.




















