Skoda Cars Launched: குஷாக், ஸ்லாவியா எடிஷன் கார்களை அறிமுகம் செய்த ஸ்கோடா - மாற்றங்கள் என்ன?
Skoda Cars Launched: ஸ்கோடா நிறுவனத்தின் புதிய லிமிடெட் எடிஷன்களாக குஷாக், ஸ்லாவியா மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
Skoda Cars Launched: ஸ்கோடா நிறுவனத்தின் புதிய லிமிடெட் எடிஷன்களான ஸ்லாவியா மற்றும் குஷாக் மாடல்களின் விலை முறையே ரூ. Rs 17.52 லட்சம் மற்றும் ரூ.18.31 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஸ்கோடா நிறுவனத்தின் புதிய லிமிடெட் எடிஷன் கார்கள்:
ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் குஷாக் எஸ்யூவி மற்றும் ஸ்லாவியா செடான் மாடல்களின் சிறப்பு எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. எலிகன்ஷ் எடிஷன் என பெயரிடப்பட்டுள்ள இந்த மாடல்களின் விலை முறையே, ரூ.18.31 லட்சம் மற்றும் ரூ.17.52 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. லிமிடெட் எடிஷன்களாக வரையறுக்கப்பட்டுள்ள இந்த மாடல்கள் புதிய டீப் பிளாக் வெளிப்புற வண்ணம் மற்றும் அந்தந்த டாப்-ஸ்பெக் ஸ்டைல் வகைகளை விட அதிகமான உபகரணங்களைக் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஷாக் மற்றும் ஸ்லாவியா எடிஷன் வடிவமைப்பு:
புதிய பிளாக் ஃபினிஷிங் உடன் இந்த எலிகன்ஸ் எடிஷன்ஸ்களில், ஸ்லாவியாவின் கிரில், டெயில்கேட் மற்றும் டோர் மோல்டிங்குகள் போன்ற மாறுபாட்டிற்காக தாராளமான அளவு குரோம் பூச்சு பயன்படுத்தப்படுகிறது. ஸ்கோடா இரண்டு மாடல்களிலும் குட்டை விளக்குகள் (puddle lamps) வழங்கப்பட்டுள்ளன. மேலும் குஷாக் எலிகன்ஸ் எடிஷன் கூடுதலாக 17-இன்ச் வேகா அலாய் வீல்களை பெற்றுள்ளது. இது மிட்-சைஸ் SUV-யான மான்டே கார்லோ வேரியண்டில் இடம்பெற்றுள்ளது. நேர்த்தியான பேட்ஜ்கள் ஒவ்வொரு மாடலின் பி-பில்லர்களையும் அழகுபடுத்துகின்றன.
உட்புற வசதிகள்:
குஷாக் மற்றும் ஸ்லாவியா மாடல்களின் உயர் வேரியண்ட்களில் உள்ள அம்சங்களுக்கு இணையாக , இந்த லிமிடெட் எடிஷன்களில் உட்புற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் கைப்பிடி, புதிய மேட்கள், அலுமினியம் பெடல்கள் ஆகியவற்றோடு ஸ்டியரிங் மற்றும் இருக்கைகளில் எலிகன்ஸ் பேட்ஜ் ஆகியவையும் வழங்கப்படுகிறது. . 10.1-இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் கிளஸ்டர் தொடங்கி, ஆறு-ஸ்பீக்கர் மற்றும் ஒலிபெருக்கி ஒலி அமைப்பு வரை வரையிலான மற்ற அம்சங்களும் இரண்டு கார்களிலும் ஒரே மாதிரியாக உள்ளது.
பவர் டிரெயின்:
6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு டூயல்-கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் சலுகையில் இருந்தாலும், ஸ்கோடா தனது புதிய எலிகன்ஸ் எடிஷன்களை 150எச்பி, 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் மட்டுமே விற்பனைக்கு கொண்டு வருகிறது.
விலை விவரங்கள்:
- குஷாக் எலிகன்ஸ் எடிஷன் விலை 18.31 லட்சம் முதல் 19.51 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது
- ஸ்லாவியா எலிகன்ஸ் எடிஷன் விலை ரூ.17.52 லட்சம் முதல் 18.92 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது
குஷாக் எலிகன்ஸ் எடிஷன் அதன் ஸ்டைல் டிரிமை விட ரூ. 20,000 அதிகமாகவும், முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட மேட் எடிஷனை விட ரூ.12,000 அதிகமாகவும் உள்ளது . இருப்பினும், குஷாக் மான்டே கார்லோ டிரிம்களின் விலை இன்னும் ரூ.50,000 அதிகமாக உள்ளது. இதற்கிடையில், ஸ்லாவியா எலிகன்ஸ் எடிஷன் அதன் ஸ்டைல் டிரிம் விலையை விட ரூ.40,000 அதிகமாகவும், அதன் மேட் எடிஷன் வேரியன்ட்டை விட ரூ.20,000 அதிகமாகவும் உள்ளது .