![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Maruti Suzuki: பொங்கலை முன்னிட்டு அதிரடி சலுகை..! மாருதி சுசுகியின் மாடல்களுக்கு ரூ.47,000 வரை ஆஃபர்
Maruti Suzuki: மாருதி சுசுகி நிறுவனம் தனது குறிப்பிட்ட கார் மாடல்களுக்கு ஜனவரி மாதம் முடிவு வரை, அதிகபட்சமாக 47 ஆயிரம் ரூபாய் வரையிலான சலுகைகளை அறிவித்துள்ளது.
![Maruti Suzuki: பொங்கலை முன்னிட்டு அதிரடி சலுகை..! மாருதி சுசுகியின் மாடல்களுக்கு ரூ.47,000 வரை ஆஃபர் Pongal 2024 Offers Maruti Announces Special Offers on Alto K10, Swift and Dzire get up to Rs 47,000 discount this January Maruti Suzuki: பொங்கலை முன்னிட்டு அதிரடி சலுகை..! மாருதி சுசுகியின் மாடல்களுக்கு ரூ.47,000 வரை ஆஃபர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/09/274647f8aa6e5d30b362d8ec9f79362b1704779933004732_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Maruti Suzuki: மாருதி சுசுகி நிறுவனம் தனது குறிப்பிட்ட கார் மாடல்களுக்கு ஜனவரி மாதத்தில் வழங்கி இருக்கும் சலுகைகள் ஆனது, கடந்த டிசம்பர் மாதத்தை விட குறைவாகவே உள்ளது.
மாருதி சுசுகி சலுகை:
Maruti Suzuki Arena டீலர்கள் 2024ம் ஆண்டின் முதல் மாதமான ஜனவரியில் Alto K10, Wagon R, Swift மற்றும் Dzire போன்ற மாடல்களுக்கு தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை அறிவித்துள்ளன. இதில் பணத் தள்ளுபடிகள், எக்ஸ்சேஞ்ச் போனஸ்கள் மற்றும் கார்ப்பரேட் சலுகைகள் ஆகியவை அடங்கும். அதேநேரம் பிரேஸ்ஸா மற்றும் எர்டிகா கார் மாடலுக்கு என எந்த சலுகைகளும் அறிவிக்கப்படவில்லை. பொங்கல் பண்டிகையை ஒட்டி கார் வாங்க திட்டமிட்டு இருப்பவர்களுக்கு, மாருதி சுசுகியின் சலுகைகள் சாதகமாக அமைந்துள்ளது.
Maruti Suzuki Alto K10:
Maruti Alto K10 ஆனது அதன் அனைத்து பெட்ரோல் மற்றும் CNG மாடல்களுக்கும் அதிகபட்சமாக ரூ.47,000 வரை தள்ளுபடியைக் கொண்டுள்ளது. இதில் ரூ.25,000 வரையிலான பணப் பலன்கள், ரூ.15,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.7,000 வரை கார்ப்பரேட் தள்ளுபடி ஆகியவை அடங்கும். ஆல்டோ கே10 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் மூலம் 67hp மற்றும் 89Nm டார்க்கை வெளிப்படுத்தும். இந்த இன்ஜின் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 5-ஸ்பீடு AMT கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. Maruti Alto K10 மாடலானது எண்ட்ரி நிலை ஹேட்ச்பேக் பிரிவில் ரெனால்ட் க்விட்க்கு போட்டியாக உள்ளது.
Maruti Suzuki S Presso:
Maruti Suzuki S Presso ஆனது ஆல்டோவைப் போலவே 67hp ஆற்றலை உருவாக்கும் 1.0-லிட்டர் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இது 5-ஸ்பீடு மேனுவல் அல்லது AMT கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. CNG மாறுபாட்டையும் பெறுகிறது. எஸ் பிரஸ்ஸோவின் அனைத்து பெட்ரோல் வகைகளும் ரூ. 44,000 வரை தள்ளுபடியைப் பெறுகின்றன. இதில் ரூ. 23,000 வரை பணப் பலன், ரூ. 15,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ. 6,000 வரை கார்ப்பரேட் தள்ளுபடி ஆகியவை அடங்கும். இதற்கிடையில், சிஎன்ஜி வகைகளுக்கு ரூ. 18,000 பணத் தள்ளுபடியின் மொத்தமாக ரூ.39,000 வரை தள்ளுபடி கிடைக்கும்.
Maruti Suzuki Celerio:
செலிரியோவின் அனைத்து பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி வேரியண்ட்களுக்கும் ரூ. 44,000 வரையிலான பலன்கள் கிடைக்கிறது. எஸ் பிரஸ்ஸோ மாடலுக்கான சலுகைகளே இதற்கும் பொருந்தும். இது 5-ஸ்பீடு மேனுவல் அல்லது AMT உடன் இணைக்கப்பட்ட அதே 67hp ஆற்றலை உருவாக்கும், 1.0-லிட்டர் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. செலிரியோ உயரமான வேகன் ஆர் மாடலுக்கு மிகவும் கச்சிதமான மாற்றாகும்.
Maruti Suzuki Wagon R:
பெட்ரோலில் இயங்கும் வேகன் ஆர் வேரியண்டை வாங்குபவர்கள் ரூ.41,000 வரையிலான தள்ளுபடியை பெறலாம். இதில் ரூ.15,000 வரை பணப் பலன், ரூ.20,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.6,000 வரை கார்ப்பரேட் தள்ளுபடி ஆகியவை அடங்கும். வேகன் R ஆனது 67hp ஆற்றலை உருவாக்கும் 1.0-லிட்டர் மோட்டார் அல்லது 90hp ஆற்றலை உருவாக்கும் 1.2-லிட்டர் இன்ஜினுடன் விற்பனை செய்யப்படுகிறது. இரண்டும் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 5-ஸ்பீடு AMT கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. 1.0 லிட்டர் இன்ஜினுடன் கூடிய சிஎன்ஜி மாறுபாட்டிற்கு ரூ.36,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
Maruti Suzuki Swift:
ஸ்விஃப்ட் மாடலுக்கு இந்த மாதம் முடியும் வரை ரூ. 37,000 வரை பலன்கள் வழங்கப்படுகிறது. அதில் ரூ. 10,000 வரையிலான பணப் பலன்கள், ரூ. 20,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ. 7,000 வரை கார்ப்பரேட் தள்ளுபடி அடங்கும். சிஎன்ஜி வகைகளுக்கு ரூ. 15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ. 7,000 கார்ப்பரேட் போனஸ் வழங்கப்படுகிறது. ஆனால், பணத் தள்ளுபடி எதுவும் வழங்கப்படவில்லை. ஸ்விஃப்ட் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் விருப்பங்களில் 90 ஹெச்பி ஆற்றலை உருவாக்கும், 1.2 லிட்டர் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இது சமீபத்தில் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் மற்றும் டாடா டியாகோவுக்கு போட்டியாக உள்ளது.
Maruti Suzuki Dzire:
டிசையர் மாடலிலும் ஸ்விஃப்ட்டில் உள்ள அதே 90hp ஆற்றலை உருவாக்கும், 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 5-ஸ்பீடு மேனுவல் அல்லது AMT கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. 10,000 ரூபாய் எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் 7,000 ரூபாய் கார்ப்பரேட் போனஸ் உட்பட 17,000 ரூபாய் வரையிலான தள்ளுபடி உள்ளது. ஆனால் சலுகையில் பணத் தள்ளுபடி எதுவும் இல்லை. டிசைரின் CNG வகைகளிலும் சலுகைகள் எதுவும் இல்லை. இது ஹூண்டாய் ஆரா , ஹோண்டா அமேஸ் மற்றும் டாடா டைகோர் ஆகியவற்றுக்கு போட்டியாக உள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)